இந்தியாவின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகைசெய்யும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இது தான் உலகிலேயே மிகப் பெரிய மக்கள் நலத்திட்டமாக இருக்கும்.
முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள்
- வாய்வழி வாக்கெடுப்பு மூலம் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
- மானிய விலை உணவு தானியங்கள் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.
- கிராமப்பகுதிகளில் 75 சதவீதம் மக்களுக்கும் நகர்ப் புறங்களில் 50 சதவீதம் மக்களுக்கும் மலிவு விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.
- ஒவ்வொரு நபருக்கும் , கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ஐந்துகிலோ அரிசி அல்லது கிலோ 2 ரூபாய் என்ற அடைப்படையில் ஐந்து கிலோ கோதுமை அல்லது கிலோ 1 ரூபாய் என்ற விலையில் மாதம் ஐந்து கிலோ தானியங்களோ வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
- இந்த மலிவு விலை நிர்ணயம் 3 வருடங்களுக்கு மாறாமல் இருக்கும்.
- இந்த மலிவு விலை தானியத்துக்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை மத்திய அரசின் வரையறைகளுக்கு ஏற்ப மாநில அரசு அடையாளம் காணும்.
- கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்ட சத்து உணவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- குழந்தை பேறு நலநிதியாக ரூ.6000 வழங்கப்படும்.
- 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கும் ஊட்ட சத்துணவு உறுதி செய்யப்படுகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் 6.2 கோடி டன் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
- இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1.25 ஆயிரம் கோடி செலவாகும்.
- சட்டீஸ்கர் மாநிலம் 2012 ஆம் ஆண்டிலேயே Chhattisgarh Food Security Act 2012 என்ற சட்டத்தை அந்த மாநிலத்திலுள்ள 90 % மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது தமிழகத்திலும், மத்திய பிரதேச மாநிலத்திலும் ஏற்கனவே மிகக்குறைந்த / இலவச மானிய உணவு பொருள்கள் திட்டம் நடைமுறையிலுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- இந்த சட்டம் தோன்ற முக்கிய காரணமாக இருக்கும் சோனியா காந்தி அவர்கள் ஓட்டெடுப்பு நடைபெறும் போது மருத்துவமனையில் இருந்ததால் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
Thanks
பதிலளிநீக்கு