- இந்தியாவின் மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படுகிறது.
- 1954 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- கலை, இலக்கியம், அறிவியல் மேம்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்தோர்களுக்கு வழங்கப்படுகிறது.
- பாரத ரத்னா விருதுக்கு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்பவர் பிரதமர்.
- பாரத ரத்னா விருது பெறுபவர்கள் இந்தியாவில் மதிப்பு மிக்கவர்களின் பட்டியலில் (order of precedence) பட்டியலில் 7 வதாக மதிப்பு மிக்கவர்கள்.
- முதல்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் மூவர் ராதாகிருஷ்ணன் 1954,
ராஜகோபாலச்சாரி 1954, சி. வி. ராமன் 1954 - இதுவரை 41 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரை இரண்டு அயல்நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . கான் அப்துல் காபர் கான் - 1987, நெல்சன் மண்டேலா - 1990.
- அயல் நாட்டில் பிறந்து இந்திய குடிமகளாய் மாறிய அன்னை தெரசா அவர்களுக்கு விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1980
- கடைசியாக பாரத ரத்னா விருது பெற்றவர் இந்துஸ்தானி பாடகர் பீம்சென் ஜோசி - 2008
காந்தியடிகளுக்கு பாரத ரத்னா விருது ஏன் வழங்கப்படவில்லை ?
இந்த விருது ஆரம்பிக்கப்பட்ட போது, இறந்த நபர்களுக்கு வழங்கும் முறை இல்லை. ஆனால் பிற்காலத்தில் 1966 ஆம் ஆண்டு இறந்த நபர்களுக்கும் பாரதா ரத்னா விருது வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு இது வரை 12 நபர்களுக்கு இறந்த பின்னர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
யாருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்ப பெறபட்டது ?
1992 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்க்கு பாரத ரத்னா வழங்கப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டது.பாரத ரத்னா விருது திரும்பப் பெறப்பட்டது இதுவே முதல் முறை. காரணம் அவருடைய இறப்பின் நம்பகத் தன்மையைப் பற்றி எழுந்த சர்ச்சை.
posthumous 11 members
பதிலளிநீக்குபாரத விருது பெற்றவர்கள் பெயர்களின் பட்டியலிட வேண்டும்
பதிலளிநீக்குUpdate panna romba usefula irukkum sir..
பதிலளிநீக்குUpdate pannu usefula irukum
பதிலளிநீக்கு