Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சமசீர்கல்வி | ஆறாம் வகுப்பு | தமிழ் பாட குறிப்புகள் - 4

இயல் 8

செய்யுள் - "தனிப்பாடல்"

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா? " - இந்த வரிகளைப் பாடியவர் - இராமச்சந்திரக்கவிராயர்

இராமச்சந்திரக்கவிராயர் துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.

சொற்பொருட்கள்


அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்

---

"பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி

மாயாவரத்திற்கு அடுத்துள்ள ஒரூர் கொரநாடு என்ற பெயர் " கூறைநாடு" என்பது மருவி உருவானது.

நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர் (தற்போது ஆழ்வார்த்திருநகரி)


மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் சிவாலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

திருவல்லிக்கேணி என்பது அல்லிக்கேணி என்பதன் மருவி உருவானதாகும். அல்லிக்கேணி என்றால் அல்லிக்குளம் என்று அர்த்தம்.

"ஊரும் பேரும்" என்ற நூலை எழுதியவர் - ரா.பி.சேதுபிள்ளை


"புரம்" என்னும் சொல் - சிறந்த ஊர்களைக் குறிப்பது

"பட்டினம்" என்னும் சொல் - கடற்கரையில் உருவாகும் நகரங்களைக் குறிப்பது ஆகும்.

"பாக்கம்" - கடற்கரைச் சிற்றூர்கள்

"புலம்" - நிலம் என்பதை குறிக்கும் .(மாம்புலம்)

"குப்பம்" - நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள்

--------

இலக்கணம்

மாத்திரை

கண் சிமிட்டும் நேரம்/ விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும்.

மெய்யெழுத்து - அரை மாத்திரை
உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
உயிர்மெ (குறில்) - ஒரு மாத்திரை
உயிர்மெய் (நெடில் ) -இரு மாத்திரை

-----------------------

இயல் 9


குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் - திரிகூட ராசப்ப கவிராயர்

சொற்பொருள்

வானரங்கள் - குரங்குகள்
மந்தி -பெண் குரங்கு
வான்கவிகள் - தேவர்கள்
கமனசித்தர் - வான்வெளியில் நினைத்த இடம் செல்லும் சித்தர்கள்
காய்சித்தி - மனிதனின் இறப்பை நீக்கும் மூலிகை
வேணி - சடை
மின்னார் - பெண்கள், மருங்கு -இடை
சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்

கோட்டுமரம் - கிளைகளை உடைய மரம்

----

அழகிய சொக்கநாதப் புலவர் -சிலேடை பாடுவதில் வல்லவர் - திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் பிறந்தவர்.

5 கருத்துகள்:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.