Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சமசீர்கல்வி | ஆறாம் வகுப்பு | தமிழ் பாட குறிப்புகள் - 2

துணைப்பாடம் - பாம்புகள் (இயல்  2 ன் தொடர்ச்சி )

பாம்பினம் மனித இனம் தோன்றுவதற்கு 10 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது

இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலேயே நீழமான நஞ்சுள்ள பாம்பு (15 அடி நீளம்)


பாம்பு தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுவது சுற்று புறத்தின் வாசனையை அறிந்து கொள்ளவே.

நல்ல பாம்பின் நஞ்சு ‘கோப்ராக்சின்’ எனும் வலிநீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

தோலுக்காக பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க இந்திய அரசு 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றியது. 

-------

தமிழ் மொழி

தமிழ் மொழியில் காணப்படும் முதல் எழுத்துகள் மொத்தம் 30
உயிர் - 12, மெய் - 18
----------------


வன்மை - கொடுமை, வண்மை - கொடைத்தன்மை 

----
 இயல் - 3 
 

நான்மணிக்கடிகை 

”கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு”  - என பாடியவர் விளம்பி நாகனார், நூல் - நான்மணிக்கடிகை 
விளம்பி- ஊர் பெயர், நாகனார்  - புலவர் பெயர்

நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று . 
கடிகை என்றால் பொருள் - அணிகலன் 
நான்கு மணிகளைக்கொண்ட அணிகலன் என்பது பொருள். அதாவது ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன

நாண்மணிக்கடிகையில் கல்விக்கு அழகாக கூறப்படுவது - நல்லெண்ணங்கள் 

புதிய சொற்கள்

மடவாள் - பெண்
தகைசால் - பண்பில் சிறந்த
புகழ்சால் - புகழைத்தரும் 

-------
விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத் 

அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் - நூலை எழுதியவர் - ஜானகிமணாமளன் 
------
 
நாட்டுப்புற தமிழ் வார்த்தைகள் 


கோழியக் கேட்டா 
ஆனம் காச்சுவாங்க ?
(ஆனம் - குழம்பு )

அழக்குற நாழிக்கு 
அகவிலை தெரியுமா ?
(நாழி - தானியங்களை அளக்கும் படி , அக விலை - தானிய விலை )

---------------------
 இயல் - 4

இசையமுது 


புது சொற்கள் 

தழையா வெப்பம் - குறையா வெப்பம்

பாவேந்தர், புரட்சி கவிஞர் என அழைக்கப்படுபவர்  - பாரதிதாசன் 
பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்புரெத்தினம்
பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் ‘பாரதிதாசன்’ என மாற்றிக்கொண்டார்.
கவிதை நூல்கள் - பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு 

பாரதிதாசன் மறைந்த ஆண்டு - 1964

-----  
பழமொழி நானூறு

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு
ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி வீதம் நானூறு பாடல்கள் கொண்டது.
“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை “ எனப் பாடியவர் - மூன்றுறை அரையனார் (மூன்றுறை -ஊர்ப்பெயர், அரையன் - புலவர் பெயர்)


புதிய சொற்கள் 

ஆற்றவும் - நிறைவாக
ஆற்றுணா - (ஆறு --வழி---+ உணா --உணவு--) வழிஉணவு

------

நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதம் 

ஜவர்கலால் நேரு - இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை ஆண்டுகளாக் எழுதப்பட்டன - 42 ஆண்டுகள் (1922-1964)

இந்திரா காந்தி படித்த கல்லூரி  - விசுவ பாரதி, சாந்திநிகேதன், மேற்கு வங்கம்(தாகூரினால் துவக்கப்பட்டது)
சாகுந்தலம் - நூலை எழுதியவர் - காளிதாசர்
போரும் அமைதியும் - நூலை எழுதியவர் - டால்ஸ்டாய் (ரஸ்ய நாட்டு நாடக ஆசிரியர்)
பெட்ரண்ட் ரஸ்ஸல் - ஒரு சிந்தனையாளர் மற்றும் கல்வியாளர்
அல்மோரா சிறை (நேரு அடைக்கப்பட்டிருந்தது)  - உத்தராஞ்சல் மாவட்டத்தில் உள்ளது.

கிருபாளினி - விசுவபாரதி கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் 
----------------------

இயல் - 5

சித்தர் பாடல் 

”வைதோரைக் கூட வையாதே - இந்த வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே ! “ பாடியவர் - கடுவெளி சித்தர் 
கடுவெளி சித்தர் - உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர். 

புது சொற்கள் 

வெய்யவினை - துன்பம்தரும் செயல்

வீறாப்பு - இறுமாப்பு

சாற்றும் - புகழ்வது

கடம் - உடம்பு 

------

ஈ.வெ.ராமசாமி (பெரியார்)



வைக்கம் வீரர் - என அழைக்கப்படுகிறார் ( வைக்கம் -கேரளாவிலுள்ளது)


”பெரியார்” - என்று பட்டம் வழங்கியவர்கள் தாய்மார்கள்

பெரியார் மறைந்த ஆண்டு - 1973
1970 - சமூக சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் ‘யுனெஸ்கோ விருது’ பெரியாருக்கு வழங்கப்பட்டது.
நடுவண் அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாரின் பெயரில் அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது

----------------------

(இந்த பதிவுகளை copy செய்ய வேண்டாம் - மொத்த பதிவுகளும் pdf  வடிவில் அளிக்கப்படும் )

4 கருத்துகள்:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.