TNPSC Current Affairs 3-4 August 2018
தமிழகம்
v தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம், உத்தரப்
பிரதேச மாநிலம்,
அலாகாபாத் பன்மொழி அமைப்புடன் (பாஷா சங்கம்) 03-08-2018
அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தப்படி, உத்தரப்
பிரதேசத்தில் தமிழ் கற்க விரும்பும் தமிழர்கள் மற்றும் வேற்று மொழியைச்
சேர்ந்தவர்களுக்குச் சான்றிதழ்,
பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு
மூலம் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் இலக்கியம் உள்ளிட்ட படிப்புகள்
நடத்தப்படவுள்ளன.
கூ.தக.
: தமிழை இந்தியாவிலும்,
உலக அளவிலும் பரவச் செய்வதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம்' என்ற அமைப்பு
அண்மையில் உருவாக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட
இந்த அமைப்பு, அடுத்தடுத்துப்
பல நாடுகளுடன் தமிழைக் கற்பிக்கும் நோக்கில் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.
இதில், முதல்கட்டமாக, உலகம்
முழுவதும் 100 மையங்கள்
ஏற்படுத்தப்படவுள்ளன. அதன் ஒருபகுதியாக பத்து அயலக நாடுகளிலும், இந்தியாவிலுள்ள
16 மாநிலங்களிலும்
தமிழ் வளர் மையத்தின் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா
v
2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு வருந்தினராக அமெரிக்க
அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
v
"சேவ
போஜா" (Seva Bhoj Yojna) திட்டம் :
குறைந்தது 5000 பொது மக்களுக்கு
இலவசமாக உணவு வழங்கும் கோவில்கள் , குருத்துவாராக்கள், மசூதிகள், தேவாலயங்கள், மடங்கள்
ஆகியவற்றிற்கு மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (CGST) மற்றும்
மாநிலங்களுக்கிடையேயான சரக்கு மற்றும்
சேவைகள் வரியில் (IGST) செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல் (reimburse) வழங்கும் புதிய திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் துவங்கியுள்ளது.
v "சன்சாத்
ஆதர்ஸ் கிராம் யோஜனா" (Sansad
Adarsh Gram Yojana (SAGY)) திட்டம் : 11
அக்டோபர் 2014 (ஜெயப்பிரகாஷ் நாராயணன்
பிறந்த தினத்தில்) அன்று மத்திய அரசினால் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் , ஒவ்வொரு
பாராளுமன்ற உறுப்பினரும் மூன்று கிராமங்களில்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கடமைப் பட்டுள்ளார்கள். அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டிற்குள்,
ஒரு ஆண்டிற்கு ஒரு கிராமம் வீதம் , மேலும் ஐந்து கிராமங்களை இது போன்று மேம்படுத்த வேண்டும்.
v 'அடல் புஜல்
யோஜனா' (Atal
Bhujal Yojana) திட்டத்திற்காக
ரூ.6000
கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. நிலையான குடிநீர் மேலாண்மைக்கான இந்த திட்டம்
உலகவங்கி மற்றும் மத்திய அரசின் மூலம் 50
: 50 சதவீத பங்களிப்பில் 2018-2019 முதல் 2022
-2023 வரையிலான ஐந்து ஆண்டு கால கட்டத்தில்
நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நீர் மேலாண்மை
திட்டமானது குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய
பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்
மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குடிநீர் குறைபாட்டால் பெருமளவு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமலாக்கம்
செய்யப்படவுள்ளது.
v இ-பாதுஷான்
ஹாட் திட்டம் (E-Pashudhan
Haat Scheme) மத்திய விவசாய அமைச்சகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள www.epashuhaat.gov.in
என்ற இணையதளத்தின் வாயிலாக கால்நடைகள்
உற்பத்தியாளர்கள் (breeders)
மற்றும் விவசாயிகளும் இணைக்கப்படுகின்றனர். இந்த இணைய தளத்தின் மூலம்
விவசாயிகள் தங்களுக்கு தேவையான கால்நடை இனங்கள், புதிய இனங்கள் மற்றும் அவை கிடைக்கும் இடங்கள் பற்றிய
அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
v ’கல்வி
கடன்களுக்கான வித்யாலக்ஷ்மி இணையதளம்”
(Vidyalakshmi Portal for Education Loan) மத்திய அரசினால் 15 ஆகஸ்டு 2015 அன்று
துவங்கப்பட்டது. இந்த இணையதளத்தின் மூலம், மாணவர்கள்
எளிதாக மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைகளுக்கு விண்னப்பிக்கலாம்.
v ’பிரதான்
மந்திரி உஜ்வாலா யோஜனா’
(Pradhan Mantri Ujjwala Yojana) எனப்படும் ஏழைகளுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் 5 கோடி
பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த திட்டம்
கடந்த 1 மே 2016 அன்று
பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தினால்
அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
v
’பரியாதன்
பர்வ்’
(Paryatan Parv) என்ற பெயரில்
இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை போற்றும் வகையிலான நிகழ்வுகள் மத்திய
சுற்றுலா அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களுடன் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் ’அனைவருக்கும்
சுற்றுலா’ (Tourism
for All) மற்றும் ‘சுற்றுலா
மற்றும் நிர்வாகம்’ (Tourism & Governance) எனும்
நோக்கங்களுடன் 16-27 செப்டம்பர் 2018 வரையில் நடைபெறவுள்ளன.
v இந்தியாவின்
முதல் ‘பிளாக்
செயின்’ மாவட்டம்
(blockchain
district) தெலுங்கானா மாநில அரசு மற்றும் டெக்
மகேந்திரா (Tech
Mahindra) நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் தெலுங்கானாவில்
அமையவுள்ளது.
v காடக்நாத்
கோழி இறைச்சிக்கு புவியியல் குறியீடு : மத்தியப் பிரதேச மாநிலத்தின்
ஜாபுவா மாவட்டத்தின் புகழ்பெற்ற ‘காடக்நாத்
கோழி இறைச்சிக்கு’ (
Kadaknath chicken meat ) புவியியல் குறியீடு (Geographical
Indication (GI) வழங்கப்பட்டுள்ளது.
v ‘முக்ய
மந்திரி யுவ நேஸ்தம்’ (‘Mukhya Mantri-Yuva Nestham’) என்ற
பெயரில் வேலையில்லாத 12
இலட்சம் இளைஞர்களுக்கு (22-35
வயது வரை) மாதம் ரூ. 1000/-
உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஆந்திரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
v ’வாவ்’ (“WOW” (Wellness of Women)) மொபைல்
செயலி : பல்வேறு நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு மற்றும் வரும்
முன் காப்பதற்கான வழிமுறைகளடங்கிய “WOW” மொபைல் செயலியை இந்திய வர்த்தக கூட்டமைப்பின் மகளிர்
பிரிவிஆன FICCI
Ladies Organisation மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து வெளியிட்டுள்ளன.
v SAATHI - Sustainable and Accelerated
Adoption of efficient Textile technologies to Help Small Industries
வெளிநாட்டு உறவுகள்
v
ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு
அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. அமெரிக்க
நாடாளுமன்ற செனட் சபையில் இதற்கான மசோதா 02-08-2018
அன்று நிறைவேறியது.
v 17 வது இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு கூடுகை (Indo-US Military Cooperation
Meeting) 2-3 ஆகஸ்டு 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
உலகம்
v
பொது பங்கு சந்தையில்
1 டிரில்லியன்
அமெரிக்க டாலரை எட்டிய உலகின் முதல் நிறுவனம் எனும் பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. 03-08-2018 அன்று, ஆப்பிள்
நிறுவனத்தின் சந்தை மதிப்பு நியூயார்க்
பங்குச்சந்தையில் 1 டிரில்லியன்
அமெரிக்க டாலரை தொட்டதையொட்டி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
v ஜிம்பாவே
நாட்டின் அதிபராக எமர்ஸன் மாங்காக்வா (Emmerson Mnangagwa) மறுபடியும்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதுகள்
v கணிதத்தின்
நோபல் பரிசு என கூறப்படும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
வழங்கப்படும் பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்ற
பரிசை இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் வெங்கடேஷ்
வென்றுள்ளார். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தவர் அக்ஷய்
வெங்கடேஷ். இவர் தற்போது ஸ்டான் போர்ட் பல்கலைகழத்தில் கணிதத் துறையில் பணியாற்றி
வருகிறார்.
v இந்தி
சாகித்ய அகதமி (Hindi
Sahitya Academy) அமைப்பின் ”ஷக்லா சம்மன்
2017-2018” (
Shalaka Samman ) விருது இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தருக்கு (Javed Akhtar) வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
v ஜம்மு
- காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் 04-08-2018 அன்று நியமிக்கப்பட்டார்.
v ருவாண்டா
(Republic of
Rwanda) நாட்டிற்கான இந்திய அரசின் தூதுவராக ஆஸ்கர் கேர்கேட்டா (Oscar
Kerketta) நியமிக்கப்பட்டுள்ளார்.
v புதிதாக
மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் : உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.
ஜோசப், சென்னை
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக
நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25
ஆக உயர்ந்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
v
மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்துவாகனம் (Reusable Launch Vehicle) தொழில்நுட்பத்தில்
இந்தியா : மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்து வாகனத்தை 2016 மே 23 அன்று
வெற்றிகரமாக பயன்படுத்தும் 5-ஆவது
நாடாக இந்தியா உருவெடுத்தது. விண்வெளியில் பயணிப்பதற்கு முழுவதும் திரும்பப்
பயன்படுத்தும் வகையிலான இரண்டு நிலைகளில் சுற்றுவட்டப்
பாதைக்கு எதிர்காலத்தில் செல்வதை மெய்ப்பிக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த
சோதனை அமைந்துள்ளது.
v
"Ballistic
Missile Interceptor Advanced Area Defence (AAD)" என்ற அதி
நவீன இடை மறிப்பு ஏவுகணையை மத்திய இராணுவ
ஆராய்ச்சி நிறுவனம் (DRDO)
2-8-2018 அன்று ஓடிஷாவிலுள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து வெற்ரிகரமாக
சோதித்துள்ளது.
முக்கிய தினங்கள்
v இயற்கை
பாதுகாப்பு தினம் (Nature
Conservation Day) - ஜீலை 28
விளையாட்டு
v
ஊக்க மருந்து பயன்பாடு எதிரொலியாக ஜாகர்த்தாவில்
நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கவிருந்த
இந்திய தடகள வீரர் நவீன் டகார் (ஸ்டீபிள் சேஸ்) சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளார். அவர் தடை செய்யப்பட்ட மெலோடினியம் என்ற மருந்தை அண்மையில்
நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் பயன்படுத்தியது
தெரியவந்துள்ளது.
v ஆசியாவின்
சின்னமாக இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி அறிவிப்பு : இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில்
சேத்ரியை ஆசியாவின் சின்னமாக (ஐகான்) ஏஎஃப்சி அறிவித்துள்ளது. இந்தியா சார்பில் 101 போட்டிகளில்
விளையாடி 64 சர்வதேச
கோல்களை சேத்ரி அடித்துள்ளார். பிரபல வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி
ஆகியோருக்கு அடுத்து அதிக கோலடித்த மூன்றாவது வீரர் என்ற சிறப்பை
பெற்றுள்ளார்.
------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.