TNPSC Current Affairs 1 January 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன் பொறுப்பேற்றுள்ளார்.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவான அளவு மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டு) வடகிழக்கு பருவமழைக் காலம் (சீசன்) 31-12-2018 அன்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் இயல்பைவிட 24 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது.
- 2018-ஆம் ஆண்டு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 79 செ.மீ. (790 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு. தென் மேற்கு பருவமழையை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28 செ.மீ. (280 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 12 சதவீதம் குறைவு ஆகும்.
- தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்யும் வடகிழக்கு பருவமழை நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டில்) பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழையின் இயல்பான மழை அளவு 44 செ.மீ., (440மிமீ.) ஆனால், நிகழாண்டில் 34 செ.மீ., (340 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இதன்மூலமாக, இயல்பைவிட 24 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது.
- தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் இயல்பைவிட 59 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
- பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பை விட 40 முதல் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து உள்ளது. திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பை விட 30 முதல் 40 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. 15 மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 19 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளது.
- நெல்லையில் மட்டும் இயல்பை விடவும் 11 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
- வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், 2016-ஆம் ஆண்டில் 62 சதவீதம், 2017-ஆம் ஆண்டில் 9 சதவீதம், 2018-ஆம் ஆண்டில் 24 சதவீதமும் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறைவான மழைப்பொழிவிற்கு காரணங்கள் :
- அடிப்படையான வானிலை அமைப்பு மற்றும் நகர்ந்து செல்லக்கூடிய வானிலை அமைப்புகள் ஆகிய இரண்டு அம்சங்கள் தான் பருவமழையை நிர்ணயம் செய்கின்றன. குறுகிய காலத்தில் நகர்ந்து செல்லக்கூடிய வானிலை நிகழ்வுகள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள், காற்றழுத்தத் தாழ்வு நிலைகள், காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் மற்றும் புயல்கள் போன்றவற்றை நீண்ட கால வானிலையில் எதிர்பார்க்க முடியாது. வட கிழக்குப் பருவமழை காலத்தில் சாதகமான இந்திய கடல் இரு முனை நிகழ்வு நிகழும் (ஐ.ஓ.டி) என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் மாதம் வரையிலும் இது வலுவாக இருந்தது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வலுவிழந்தது.
- நகர்ந்து செல்லும் வானிலையை பொருத்தவரையில் 4 புயல்கள் உருவாயின. இதில் "கஜா' புயலை தவிர, மற்ற புயல்கள் தமிழக பகுதியில் இருந்து சாதகம் இல்லாத தூரத்துக்கு நகர்ந்து சென்றன. இதனால் மழை பெய்யக்கூடிய அளவுக்கு காற்றில் ஈரப்பதம் இல்லாமல் போனது. மேலும் தென் மேற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியோ உருவாகி மேற்கில் நகர்ந்து செல்லாத நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலும் மழை குறைந்தது.
இந்தியா
- குஜராத் பள்ளி கூடங்களில் இனி உள்ளேன் ஐயாவுக்கு பதில் ஜெய்ஹிந்த் : குஜராத் மாநிலம் முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள், வருகை பதிவின்பொழுது உள்ளேன் ஐயா அல்லது ஆம் ஐயா என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவானது புது வருட தொடக்க நாளான ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- "ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்ற வேண்டும் என்ற மஹாராஷ்டிரா அரசின் கோரிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
- நாகாலாந்தில், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, வரும் ஜூன் 2019 மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
- அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- அந்தமான் நிகோபார் தீவுகளில் தனியாக குடியேற்ற சோதனை சாவடி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் நகரில் உள்ள விமான நிலையத்தை அங்கீகரிக்கப்பட்ட குடியேற்ற சோதனை சாவடியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல முடியும்.
- மத்திய பிரதேச மாநிலம் ‘ஆன்மீகத்திற்காக’ தனித்துறையை ‘ஆத்யத்மிக் விபாஹ்’ (Adhyatmik Vibhag(spiritual department)) என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம்
- வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் பிரதமராகிறார்.
- உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து : உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில் புத்தாண்டன்று முதல் முறையாக சூரியன் உதித்துள்ளது.
பொருளாதாரம்
- தேசிய வருமானம், செலவினம் , சேமிப்பு தொடர்பான முக்கிய கலைச்சொற்கள்
- CE: Compensation of Employees
- CFC: Consumption of Fixed Capital
- CIS: Changes in Stock
- GCF: Gross Capital Formation
- GDI: Gross Disposable Income
- GDP: Gross Domestic Product
- GFCE: Government Final Consumption Expenditure
- GFCF: Gross Fixed Capital Formation
- GNDI: Gross National Disposable Income
- GNI: Gross National Income
- GVA: Gross Value Added
- MI: Mixed Income
- NDP: Net Domestic Product
- NNDI: Net National Disposable Income
- NNI: Net National Income
- OS: Operating Surplus
- PFCE: Private Final Consumption Expenditure
- ROW: Rest of the World
முக்கிய சூத்திரங்கள் (FORMULAE)
- GVA at basic prices = CE + OS/MI + CFC + Production taxes less Production subsidies
- GDP = ∑ GVA at basic prices + Product taxes - Product subsidies
- NDP/NNI = GDP/GNI - CFC
- GNI = GDP + Net primary income from ROW (Receipts less payments)
- Primary Incomes = CE + Property and Entrepreneurial Income
- NNDI =NNI + other current transfers from ROW, net (Receipts less payments)
- GNDI = NNDI + CFC = GNI + other current transfers from ROW, net (Receipts less payments)
- Gross Capital Formation= Gross Savings+ Net Capital Inflow from ROW
- GCF = GFCF + CIS + Valuables + “Errors and Omissions”
- Gross Disposable Income of Govt. = GFCE + Gross Saving of General Government
- Gross Disposable Income (GDI) of Households = GNDI – GDI of Govt. – Gross Savings of All Corporations
ஆதாரம் : http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1518448
திட்டங்கள்
- ’உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தை’ (Ujjwala Sanitary Napkins initiative) 30 டிசம்பர் 2018 அன்று ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஸ்வரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது Indian Oil Corporation Ltd (IOCL), Bharat Petroleum Corporation Ltd. (BPCL), and Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஆகிய மூன்று பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன் நிறைவேற்றப்படுகிறது.
நியமனங்கள்
- இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா 01-01-2018 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
- ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக வி.கே. யாதவை மத்திய அரசு நியமித்துள்ளது.
விளையாட்டுக்கள்
- முதலாவது ‘ கேலோ இந்தியா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை’ (Khelo India School Games) பிரதமர் மோடி அவர்கள் 31-12-2018 அன்று புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
- கெலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுப் குமார் வென்றுள்ளார்.
- இந்திய அணியின் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2018 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர் எனும் பெருமையை இந்திய பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பூம்ரா (Jasprit Bumrah) பெற்றுள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- ஐ.என்.எஸ். கரஞ் (INS Karanj) என்று பெயரிடப்பட்டுள்ள ’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பல்களில் (Scorpene submarine) மூன்றாவது கப்பல் 31-12-2018 அன்று நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக்கப்பல்களில் முதலாவது கப்பல் ’ஐ.என்.எஸ்.கால்வரி’ (INS Kalvari) , கடந்த 14 டிசம்பர் 2017 அன்றும், இரண்டாவது கப்பலான ‘ஐ என் எஸ் காந்தேரி’ (INS Khanderi,) ஜனவரி 2018 - லும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ’லாரி ராபர்ட்’ ( Larry Roberts) மறைவு : தற்போதைய இண்டர்நெட்டிற்கு முன்னோடியாக இருந்த அமெரிக்காவின் ‘ஆர்ப்பாநெட்’ (ARPAnet) திட்டத்திற்கு தலைமை தாங்கி செயல்பட்ட ‘லாரி ராபர்ட்’ 26 டிசம்பர் 2018 அன்று காலமானார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.