-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 02 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 02 ஜனவரி 2019

TNPSC Current Affairs  2  January 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை 01-01-2019 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா

  • 2019-ம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. 2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளது.
  • 123 கோடி இந்தியர்களுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கியுள்ளது.  5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள “மகளிர் சுவர் போராட்டம் 01-01-2019 அன்று நடந்தது. கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் வரிசையாக நின்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் பல லட்சக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். மதசார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும், சமுதாயத்தை மீண்டும் இருண்ட காலத்துக்கு தள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிரான தகவலை பரப்புவதற்காகவும் இந்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
  • 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு , இறப்பு விகிதங்கள் : மாதிரி பதிவு அமைப்பு (Sample Registration System (SRS)) சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரமாகாந்த் அச்ரேகர் காலமானார்: சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் 02-01-2019 அன்று  மும்பையில் காலமானார்.
  • பிந்து, கனகதுர்கா ஆகிய இரு 50 வயதிற்குட்பட்ட பெண்கள் 02-01-2019 அன்று சபரிமலையில் அய்யப்பனை  தரிசித்துள்ளார்கள்.
  • மாணவர்களுடன் உரையாடல் (Samwad with Students) எனும் புதுமையான திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  01-01-2019 அன்று துவங்கியுள்ளது. நாட்டிலுள்ள இளையோர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான இந்நிகழ்வில்,   இந்தியா முழுவதுமுள்ள மாணவர்கள் குழுக்கள் பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகத்தை பார்வையிட்டு அங்குள்ள ஆராய்ச்சியாளர்களுடன் உரையாட வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

உலகம்

  • ஐ.நா. வின் ’யுனெஸ்கோ (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அமைப்பிலிருந்து அமெரிகா மற்றூம் இஸ்ரேல் நாடுகள் அதிகாரப்பூர்வமாக 31 டிசம்பர் 2018 அன்று வெளியேறியுள்ளன.
  • இணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது “GAFA tax”  (Google, Apple, Facebook and Amazon) எனப்படும்  புதிய வரியை பிரான்ஸ் நாடு அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் :  இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2008-ம் ஆண்டு தூதரக அளவிலான ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இருநாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள கைதிகள் விவரத்தை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என வருடத்துக்கு 2 முறை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் விவரத்தை அந்நாட்டு வெளியுறவுத் துறை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைத்தது. அதில் 54 பொதுமக்கள் மற்றும் 483 மீனவர்கள் என மொத்தம் 537 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
  • இந்தியா - பாகிஸ்தான் அணு உலை விவரங்கள் பரிமாற்றம் :   1988-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி இருநாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள அணுசக்தி நிலையங்கள், வசதிகள் பற்றிய தகவலை பரிமாறிக்கொள்ள வேண்டும். அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானாலும், 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதியில் இருந்து இது நடை முறைக்கு வந்தது. 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 01-01-2019 அன்று  பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ஒப்படைத்தது. இந்திய வெளியுறவுத் துறையும் இங்குள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழங்கியது.

பொருளாதாரம்

  • விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதியரசர் T B N ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆக்ஸிஸ் வங்கியின் ( Axis Bank) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக அமிதாப் சவுத்திரி (Amitabh Chaudhry ) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • பீமா-கோரேகான் போர் நினைவு தினம் மகாராஷ்டிர மாநிலத்தில் 01-01-2019 அன்று நடைபெற்றது.   இதில் சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர்.
    • மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பீமா-கோரேகான் பகுதியில் கடந்த 1818-இல் உயர் ஜாதியினரான பேஷ்வாக்களுக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த மஹர் இன வீரர்களை உள்ளடக்கிய ஆங்கிலேயப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் பேஷ்வாக்களை ஆங்கிலேயப் படை தோற்கடித்தது. இதையொட்டி, பீமா-கோரேகானில் நினைவுச் சின்னம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இப்போரின் வெற்றியை தங்களுக்கு கிடைத்த கௌரவமாக கருதும் தலித் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் பீமா-கோரேகானில் உள்ள நினைவுச் சின்னத்தில் திரண்டு மரியாதை செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation(DRDO)) நிறுவன தினம்  -  ஜனவரி 1 
    • கூ.தக. : 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக, சதீஸ் ரெட்டி (Dr G Satheesh Reddy) உள்ளார்.   இதன்  நோக்கம் (Moto) :  வலிமையின்  மூலம் அறிவியலில் உள்ளது (Strength’s Origin is in Science) என்பதாகும்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் "அல்ட்டிமா துலே' என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் "நியூ ஹொரைஸன்' விண்கலம் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருந்துகொண்டு, அதனை சுற்றி வரும் ஒரு நுண்கோளை மிக நெருக்கத்தில் ஆய்வு செய்த முதல் விண்கலம் என்ற சாதனையை நியூ ஹொரைஸன் பெற்றுள்ளது .
கூ.தக. : நெப்டியூன் கிரகத்துக்கும் அதிக தொலைவில் இருந்து கொண்டு பூமியைச் சுற்றி வரும் அல்ட்டிமா துலே நுண்கோளை, விஞ்ஞானிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு கண்டறிந்தனர். சூரியனிலிருந்து மிக தொலைவில் இருப்பதோடு மட்டுமல்லாமல், சூரியக் குடும்பத்தின் மிகப் பழைய நுண்கோளாகவும் அல்ட்டிமா துலே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.