TNPSC Current Affairs 4 January 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- தென்னிந்திய நாணயவியல் கழக 29ம் ஆண்டு இரண்டு நாள் மாநாடு சென்னை வேல்ஸ் பல்கலையில் 5-1-2019 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வில், நாணயவியலுக்கு ஆற்றிய பணியை பாராட்டி டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுகிறது.
இந்தியா
- பள்ளிகளில் 8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
- கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா, 3-1-2019 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
- இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.
- தேசிய சர்க்கரை நிறுவனம் (National Sugar Institute) உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ளது.
- ”பாபக் புயல்” (“PABUK” Cyclonic storm) : தென் சீனக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலானது 5-01-2019 அன்றூ அந்தமான் தீவுகளைக் கடக்கவுள்ளது. இந்த புயலுக்கு ’பாபக்’ எனும் பெயரை லாவோஸ் நாடு (Laos) சூட்டியுள்ளது.
- ”பூமி ராஷி போர்ட்டல்” (Bhoomi Rashi Portal) : தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்படும் நிலங்களுக்கான இழப்பீடு தொகைகளை வழங்கும் நடைமுறைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தினால் ”பூமி ராஷி போர்ட்டல்” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம்
- ‘உஷ்மான் புயல்’ ( Storm Usman) 29 டிசம்பர் 2018 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரைத் தாக்கியுள்ளது.
பொருளாதாரம்
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் யு.கே. சின்ஹா தலைமையிலான நிபுணர் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
- 8 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு, தொழில் நிறுவனங்களின் வர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அமைப்பு ரீதியிலான பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கு கடனுதவி அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும். மேலும், அந்த நிறுவனங்கள், பொருளாதார நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு நீண்டகால தீர்வுகளையும் அந்தக் குழு பரிந்துரைக்கும். இந்த ஆய்வுக்குப் பிறகு நிபுணர் குழு தனது அறிக்கையை, வரும் ஜூன் மாத இறுதியில் சமர்ப்பிக்கும்.
திட்டங்கள்
- ’பிரதான் மந்திரி சாகாஜ் பிஜி கர் ஹர் யோஜனா’ / ‘சவுபாக்யா’ திட்டத்தின் (‘Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana’ (Saubhagya)) மூலம் நாட்டிலுள்ள 25 மாநிலங்கள் 100% வீடுகளுக்கு மின்னிணைப்பை வழங்கியுள்ளதாக மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூ.தக. : ‘சவுபாக்யா’ ( Saubhagya) திட்டமானது கடந்த 25 செப்டமர் 2017 அன்று தொடங்கப்பட்டது. மொத்தம் ரூ.16,320 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் 31 மார்ச் 2019 க்குள் இந்தியா முழுவதும் 100% வீடுகளுக்கு மின்னிணைப்பை வழங்குவதாகும்.
முக்கிய தினங்கள்
- உலக பிரைய்லி தினம் (World Braille Day) - ஜனவரி 4 | பார்வையற்றோருக்கான விஷேச எழுத்து வடிவத்தைக் கண்டுபிடித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான லூயிஸ் பிரைலி அவர்களின் பிறந்த தினம்.
விளையாட்டு
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 19000 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் எனும் சாதனையை விராட் கோலி 3-1-2019 அன்று ஆஸ்திரேலியாவிற்கெதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் படைத்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
- நிலவின் இருண்ட மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனாவின் ‘சாங் இ 4’ விண்கலம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது. அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கிறார்கள். அந்தப் பகுதியில் முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சீனாவின் சாங் இ-4 விண்கலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.