TNPSC Current Affairs 21-22 January 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- ரூ.6,600 கோடியில் 118 போர் டாங்கிகள் ஆவடியில் தயாரிக்க முடிவு : இந்திய ராணுவத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கிகளை தயாரிக்கும் பணி சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.6,600 கோடி மதிப்பில் 118 போர் டாங்கிகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.
- விராலிமலை ஜல்லிக்கட்டு - உலக சாதனை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 20-1-2019 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா, இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து 9.30 மணி நேரம் நடைபெற்ற பிரம்மாண்ட உலக சாதனை போட்டியாக அமைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் காளைகள் வந்திருந்தன. 1353 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
- அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளை, எழும்பூர் மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் 21-1-2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் 2,381 அங்கன்வாடி மையங்களில் முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது.
- 2019 ஆம் ஆண்டுக்கான ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ளது. ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் - பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன.
- தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை திருச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 20-1-2019 அன்று தொடங்கிவைத்தார்.
- இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
- 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநிலம் அலிகாரிலும், தமிழகத்திலும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (‘காரிடார்’) அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஏற்கனவே, அலிகாரில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழித்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
- 1 ஏப்ரல் 2020 முதல் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ‘ யூரோ -6 மாசு வெளியீட்டு தரம்’ (Euro 6 Emission standards) அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ‘யூரோ-6 தரக்கட்டுப்பாட்டின்’ முக்கிய நோக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களிலிருந்து வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன்களின் அளவை கட்டுப்படுத்துவதாகும்.
- "India Steel 2019" என்ற பெயரில் கண்காட்சி மற்றும் மாநாடு 22-24 ஜனவரி 2019 தினங்களில் மும்பையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 250 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
- “ரீ-வேவ்” ( ReWeave ) என்ற பெயரில் கைத்தறி நெசவாளர்களுக்கான ஆன்லைன் விற்பனை சந்தையை மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்வணிக தளத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே விற்பனை செய்ய இயலும்.
- இந்தியாவில் தொலை தொடர்பு தகவல் சேவைகளின் பரவல் பற்றிய தர்வுகளை (Tele-density data of India) ‘டிராய்’ (Telecom Regulatory Authority of India - TRAI) அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2018 இறுதியில்,
- இந்தியாவில் தொலை தொடர்பு பரவல் 91.21% ஆக அதிகரித்துள்ளது.
- 1,193.72 மில்லியன் மக்கள் மொபைல் ஃபோன் இணைப்பைப் பெற்றுள்ளனர்.
- வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைத்துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், கம்பி இணைப்பு பிராட்பேண்ட் சேவையில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் முன்னிலையில் உள்ளன.
- 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாட்டை உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி 22-1-2019 அன்று தொடங்கி வைத்தார்.
- முதன்முறையாக இந்த மாநாடு மூன்று நாட்கள் (ஜனவரி 21 முதல் 23 வரை) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
- மொரிசீயஸ் நாட்டின் பிரதமர் திரு பிரவீன் ஜக்னாத் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்சு குலாட்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு கன்வல்ஜித் சிங் பக்ஷி கவுரவ விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.
- இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 21, 2019 - வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் பற்றி:
- மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பேயி எடுத்த முடிவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 09, 2003 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தினம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த தினம் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினர் அரசுடனும், தங்களின் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. இம்மாநாட்டின் போது இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகிறது.
- 2017 ஜனவரி 07 முதல் 09 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற 14 ஆவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான உறவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மெஹூல் சோக்ஸி தனது இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) கயானாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பி ஒப்படைத்துள்ளார்.
- கோதாவரி, காவிரி நதிகளை இணைப்பதற்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை மத்திய அமைச்சரவையில் சமர்பிக்க தயாராக உள்ளது என மத்திய நீர் வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் படி, கோதாவரி நதியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை பெண்ணாறு நதியுடனும், தமிழகத்தில் உள்ள காவிரி நதியுடனும் இணைக்கப்படவுள்ளது. இந்த திட்டம், கால்வாய்கள் மூலம் இல்லாமல் எஃகு குழாய்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம், கர்நாடகம், தமிழ்நாடு ,தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 4 தென் மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காணும்.
- அகில இந்திய அளவில், ரயில்களை துாய்மையாக வைத்திருப்பதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது.
உலகம்
- 2020 ஆம் ஆண்டின் கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக (World Capital of Architecture for 2020) ரியோ டி ஜெனீரோவை (பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது) யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானம் முன்பு அமைந்திருக்கும் ஏசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை அந்நகரின் சிறப்பான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுமட்டும் இன்றி நவீன மற்றும் பழங்கால கட்டிடக்கலைகளுடன் உலக அங்கீகாரம் பெற்ற தலங்கள் அந்நகரில் நிறைய காணப்படுகின்றன.
- உலகின் மூத்த மனிதராகக் அறிவிக்கப்பட்ட ஜப்பானின் மசாசோ நோனாகா (Masazo Nonaka) , தன் 113 வயதில் உடல்நலக்குறைவால் 20-1-2019 அன்று காலமானார்.
- 4வது அரேபிய பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான கூடுகை (Arab Economic and Social Development Summit) லெபனான் நாட்டின் தலைநகர் பைரூட்டில் 20-1-2019 அன்று நடைபெற்றது.
- மடகாஸ்கர் நாட்டிற்கான புதிய அதிபராக ஆண்ட்ரி ராஜோலினா (Andry Rajoelina) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழிப் பெண் கமலா ஹாரிஸ் போட்டி : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பதுடன், வெள்ளையர் அல்லாத முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.
- சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது. நீண்ட காலமாக ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்ளும் திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகக்து.
- சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது.தொடர்ந்து மெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டதன் விளைவாக சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு உறவுகள்
- இந்தியாவிலிருந்து நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல விரும்புவோர், 'பாஸ்போர்ட்' இல்லாவிட்டாலும், ஆதார் அட்டையை, தங்கள் அடையாள அட்டையாக பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
- நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, 15 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஓட்டுநர் உரிமம், நிரந்தர வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை ஆகியவற்றை அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். ஆதார் அட்டை ஆவணமாக சேர்க்கப்படவில்லை. எனினும், 15 முதல் 65 வயதுக்கு உள்பட்டவர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேபாளத்தில் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சிக்குத் தடை : நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சி நோட்டுகளை வைத்திருக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித்துள்ளது. இதனால், அவர்கள், ரூ.200, ரூ.500, ரூ.2,000 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த புதிய கட்டுப்பாட்டின்படி, நேபாள குடிமக்களும் இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியாவைத் தவிர வேறு நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாது. எனினும், ரூ.100 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இந்திய கரன்சிகளை பொதுமக்களும், வர்த்தகர்களும் பயன்படுத்தலாம்.
பொருளாதாரம்
- உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்து உள்ளது. சர்வதேச நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’, உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட பட்டியலில் நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.
- 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.6 சதவிகிதமாகவும், பிரான்ஸ் 1.7 சதவீதமும், 2019-ல் இந்தியாவில் 7.6 சதவிகிததமாகவும் உள்ளது.
- பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி முறையே 3 மற்றும் 4-வது இடங்களிலும் உள்ளன.
- இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமமானதாகும் என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறி உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் மொத்த தேசிய செல்வத்தில் 77.4 சதவீதத்தை வைத்துள்ளனர். இந்திய பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேர் இந்தியாவின் மொத்த செலவத்தில் 51.53 சதவீதத்தை கொண்டுள்ளனர். 60 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள் நாட்டின் செல்வத்தில் வெறும் 4.8 சதவிகிதம்தான் வைத்துள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுகள்
- ’பருப்பொருட்கள் ஆராய்ச்சிக்கான சேக் சவுத் சர்வதேச விருது’ (Sheikh Saud International Prize for Materials Research) பாரத ரத்னா CNR ராவ் (CNR Rao) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ’சன்சாட் ரத்னா விருது 2019’ (Sansad Ratna Award) சிறந்த பாராளுமன்ற வாதிக்கான விருது பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்க்கூர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கள்
- டாட்டா மும்பை மாரத்தான் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் கென்யாவின் காஸ்மோஸ் லகாட்டும், மகளிர் பிரிவில் எதியோப்பியாவின் வொர்க்நேஷ் அலெமுவும் சாம்பியன் பட்டம் வென்றனர். இந்தியர்களுக்கான போட்டி மகளிர் பிரிவில் ஆசிய தங்கமங்கையான சுதா சிங் முதலிடம் பெற்றார். 2 மணி, 34 நிமிடங்கள், 56 வினாடிகளில் பந்தயதூரததை கடந்து தனிப்பட்ட சாதனையை படைத்தார். முந்தைய தேசிய சாதனையையும் சுதாசிங் தகர்த்தார்.
- தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி 20 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் மத்திய தலைமைச் செயலக அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
- ’கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு” போட்டியில் (Khelo India Youth Games) மஹாராஷ்டிரா 228 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும், 178 பதக்கங்களுடன் ஹரியானா இரண்டாமிடத்தையும், 136 பதக்கங்களுடன் தில்லி மூன்றாவது இடத்தையும் பெற்றூள்ளன. இந்த விளையாட்டுப்போட்டிகள் மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் நடைபெற்றன.
- டாட்டா ஸ்டீல் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி : நெதர்லாந்தின் விகான்ஸியில் நடைபெற்ற டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி பெற்றார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.