-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 23 January 2019

நடப்பு நிகழ்வுகள் 23 ஜனவரி 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • தமிழகத்தில் முதன் முதலாக மாணவர் காவல் படை சென்னையில் 22-1-2019 அன்று தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும், நல்ல சிந்தனையையும் வளர்க்கும் வகையில் தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து இந்த மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளன.
  • நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் -  ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் 
  • தமிழக பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்கும் திட்டத்தை 22-1-2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.

இந்தியா

  • '' ஆசாத் கி தீவானே' என பெயரிடப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை  புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான 23-1-2019 அன்று திறந்து வைக்கிறார்.  இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட காலத்தை விளக்கும் ஓவியங்கள், அரியவகை புகைபடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
  • 26/11 க்கு 10 வருடங்களுக்கு பின்னால் (Ten Years After "26/11") என்ற பெயரில்  இந்திய கடற்படையின் மிகப்பெரிய  கடலோர இராணுவ ஒத்திகை 22-1-2019 அன்று தொடங்கப்பட்டது.  26-11-2008 அன்று நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதலையடுத்து  தீவிரவாதிகளின் கடல்வழி ஊடுருவலை  தடுப்பதற்கு இந்திய கடற்படை அதிக கவனம் செலுத்தி வருகிறது. 
    • இந்த இராணுவ ஒத்திகையின் முதல் கட்டமாக, “கடல் கண்காணிப்பு ஒத்திகை” (SEA VIGIL) என்ற பெயரில் இந்தியாவின் 7516.6 km நீள கடலோரம் முழுவதிலும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு பயிற்சிகள் நடைபெறுகின்றன.
  • உலகின் சிறந்த   கண்டெயினர் துறைமுகங்களில் முதல் 30 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள  இந்தியாவின் முதல் துறைமுகம் எனும் பெருமையை மும்பையில் அமைந்துள்ள ‘ஜவகர்லால் நேரு துறைமுகம்’ (Jawaharlal Nehru Port Trust (JNPT)) பெற்றுள்ளது.
  • ஒரே பாரதம், உன்னத பாரதம் ( Ek Bharat Shreshtha Bharat) எனும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான 4வது ‘பாரத் பர்வ் (Bharat Parv)   நிகழ்வு   புது தில்லியில் 26-31 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறுகிறது.      இந்நிகழ்வை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
  • உலக திறன் போட்டி பட்டியல் 2019’ (Global Talent Competitive Index (GTCI) 2019) ல் இந்தியா 80 வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • ஃபிளமிங்கோ விழா (Flamingo festival) ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள புலிக்காட் ஏரியில்  9-1-2019 அன்று நடைபெற்றது.  சைபீரியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரியும் பல்வண்ண பறவைகளின் வருகையை வரவேற்று இந்த விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • பக்கே ஹார்ன்ஃபில் விழாவை (Pakke Hornbill Fest) மாநில விழாவாக அருணாச்சலப்பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
  • 'கீதியான் - காந்தியால் பாலம் (Keediyan-Gandiyal bridge) என்று பெயரிடப்பட்டுள்ல ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பஞ்சாப்புடன் இணைக்கும் பாலம் 22-1-2019 அன்று நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. 1.2 கி.மீ தொலைவிலான இந்தப் பாலம் ராவி நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் இரு மாநில இணைப்பு பாலம் (first inter-state bridge) எனும் பெயரையும் இப்பாலம் பெற்றுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தாண்டு நடைபெறும் 70 வது குடியரசு தினவிழாவில் இந்தியாவின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்துகொள்கிறார். நெல்சன் மண்டேலாவுக்கு பின்னர் இந்திய குடியரசு தினவிழாவில் விருந்தினராக பங்கேற்கும் 2-வது தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

  • உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    • சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில், நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின்  மாநாட்டின் போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.

விருதுகள்

  • பிரதம மந்திரி குழந்தைகள் விருது 2019 (“Pradhan Mantri Rashtriya Bal Puraskar”) பெற்றுள்ள தமிழக குழந்தைகள் மற்றும் அவர்கள் விருது பெற்ற பிரிவுகளின் விவரம்,
    • அஸ்வத் சூரியநாராயணன் - கண்டுபிடிப்பு
    • எம்.ராம் - கலை மற்றும் கலாச்சாரம்
    • ஆர்.பிரக்கானந்தா - விளையாட்டு
    • ’ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ (Hand in Hand India) அமைப்பு - குழந்தைகள் நலன், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு பணியாற்றும் நிறுவனம்.

விளையாட்டுக்கள்  

  • ஓரே நேரத்தில் 3 ஐசிசி விருதுகள் பெற்று வரலாறு படைத்தார் விராட் கோலி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், மற்றும் ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விருதுகளை ஒரு சேர வென்றுள்ள ஓரே வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் இந்திய அணியின் கேப்டன்  கோலி.
  • ஐசிசி ஆண்டின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஐசிசி சார்பில் பல்வேறு நாடுகளின் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதே போல் 2018 ஆம் ஆண்டுக்கான அணிகளை அறிவித்துள்ளது ஐசிசி. இவற்றின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ’Portulaca badamica’ மற்றும்  ’Portulaca lakshminarasimhaniana’ எனப்பெயரிடப்பட்டுள்ள இரண்டு புதிய ரோஜா செடி இனங்கள் (moss rose)   கர்நாடகாவிலுள்ள பாதாமி மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • Universal Brotherhood Through Yoga” என்ற புத்தகத்தை ‘பாரதிய சமஸ்கிருத பீடம்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.