-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 25-26 January 2019

நடப்பு நிகழ்வுகள் 25-26 ஜனவரி 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு 2 விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
    • மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
    • மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
  • தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது, கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் காட்டிலும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாகும். இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வரும் போது 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
  • இந்தியாவில், காற்றாலை மின்சார நிறுவு திறனில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. காற்றாலைகள் வாயிலாக, 2017 ஜூலை, 27ல், 5,096 மெகாவாட் மின்சாரமும்; சூரிய சக்தியில், 2018 அக்டோபரில், 1,924 மெகாவாட் மின்சாரமும் பெறப்பட்டது.
  • வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை : 
    • முதல் முறையாக, சிங்கப்பூர் நாட்டில், 1 லிட்டர் கொள்ளளவில், ஆறு மாதங்கள் கெடாத, ஆவின் பால் விற்பனை, 2017 இறுதியில் துவக்கப்பட்டது. இதுவரை, 2.16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளது.
    • ஹாங்காங்கில், 2018 ஆகஸ்டில், பால் விற்பனை துவக்கப்பட்டது.
    • பிப்ரவரி 2018 , 1ம் தேதி முதல், கத்தார் நாட்டில், ஆவின் பால் விற்பனை துவக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, துபாய், இலங்கை, மொரீஷியஸ், மாலத் தீவு, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும், ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது
கூ.தக. :  தமிழகத்தில், தினமும், 22.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலும்; 1 கோடி ரூபாய் மதிப்பிலான, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களும் விற்பனையாகின்றன.
  • TEXTN பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2019” மற்றும் “IND TEXPO 2019”  27-29 ஜனவரி 2019 தினங்களில் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. “IND TEXPO 2019”  எனப்படும் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பை மத்திய அரசின் டெக்ஸ்ப்ரோஸில் (TEXPROCIL) மற்றும் பெடக்ஸில் (PDEXCIL)  அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
  • சூரிய சக்தி வடக்கட்டு மையம் (DST –IITM Solar Energy Harnessing Centre), DST-IITM Water –IC for SUTRAM of EASY WATER (DST- IITM Water Innovation Centre for Sustainable Treatment, Reuse and Management for Efficient, Affordable and Synergistic Solutions மற்றும் ’சூரிய சக்தி  கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான சோதனை மையம் (Test bed on Solar thermal desalination solutions)  ஆகிய மூன்று  ஆராய்ச்சி மையங்களை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்  சென்னை ஐ.ஐ.டி. யில்  25-1-2019 அன்று தொடங்கியுள்ளது.

இந்தியா

  • பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு  மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல்  அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டப் புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாற்றியமைத்துள்ளார். இந்த புதிய அமர்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முந்தைய அமர்வில் இருந்த நீதிபதி யு.யு. லலித் இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து தாமாக விலகியிருந்தார். மேலும், முந்தைய அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி என்.வி. ரமணா தற்போதைய புதிய அமர்வில் இடம்பெறவில்லை.
  • கோவா மண்டோவி ஆற்றின் குறுக்கே 1 கி.மீ. நீளத்தில்  கட்டப்பட்ட கேபிள் பாலம் பாலத்தை    மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி  27-1-2019 அன்று திறந்து வைக்கிறார்.  இந்த பாலம், பனாஜி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்தில் கோவா மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும்.  4 வழிச்சாலையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலம் மண்டோவி ஆற்றின் குறுக்கே கேபிள் மூலம் இணைத்து தொங்கு பாலத்தின் வடிவத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
  • Indian Standard IS 17081:2019 ( Aviation Turbine Fuel (Kerosene Type, Jet A-1) containing Synthesised Hydrocarbons) எனப்படும்  பயோ ஜெட் எரிபொருளுக்கான (Bio-Jet Fuel)  புதிய தர நிர்ணயத்தை இந்திய விமானப்படை மற்றும்  இந்திய தர நிர்ணய அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ளன.
  • ஐ.என்.எஸ்.கோஷா (INS Kohassa) : அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள கடற்படை விமானத் தளமான (Naval Air Station (NAS)), சிப்பூர் ( Shibpur )  , ஐ.என்.எஸ். கோஷா (INS Kohassa) எனும் பெயரில் கடற்படைத் தளமாக 24-1-2019 அன்று நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது.  ‘கோஷா’ (Kohassa) எனும்  அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் காணப்படும் வெள்ளை நிற அடிவயிற்றையுடைய  அருகி வரும் கழுகு இனத்தின் பெயரில்  ஐ.என்.எஸ். கோஷா என பெயர்சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • அமெரிக்க பொருளாதாரக் கொள்கை குழுவின் தலைவராக தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான பொருளாதார மற்றும் நுகர்வோர் கொள்கைக்கான துணைக் குழுவின் தலைவராக இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி(45) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் குழு அல்லது துணைக்குழுவின் தலைமைப் பொறுப்புக்கு தெற்காசியாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
    • தில்லியில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஜனநாயக கட்சியில் இணைந்த அவர், இலினாய்ஸ் 8-ஆவது மாவட்டத்தின் எம்.பி.யாக கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • "நாஸர்" எனப் பெயரிடப்பட்ட தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல ஏவுகணையை பாகிஸ்தான் நாடு வெற்றிகர சோதனை செய்துள்ளது.
  • உலகின் நீளமான 3-டி முறையில் வடிவமைக்கப்பட்ட காங்கிரீட் பாலம் (26.3மீ.) சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள வென்ஷோபாங் ஆற்றின் (Wenzaobang River) மீது கட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவும் கூட்டாக அறிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒத்துழைப்புத் திட்டத்தின்படி பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படும். இந்த ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

  • 2018 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.1%  வளர்ச்சியடைந்துள்ளதாக ,  ஐக்கிய நாடுகளவையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகார துறை  (United Nations Department of Economic and Social Affairs (UNDESA)) வெளியிட்டுள்ள  ‘உலக பொருளாதார நிலை 2019’ (World Economic Situation and Prospects 2019)  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையின் படி,  இந்தியாவின் பொருளாதாரம் 2018-2019 நிதியாண்டில் 7.4% வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • கேரளாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியானி அம்மா (Karthiyani Amma) எனும் பெண்மணி   காமன்வெல்த் அமைப்பின் கற்பதற்கான நல்லெண்ண தூதுவராக (Commonwealth Learning Goodwill Ambassador) நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தனது 96 வது வயதில் , கேரளாவின் ‘அக்‌ஷரா லக்‌ஷம்’ (Akshara Laksham) எனும் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4 ஆவது வகுப்பை 98% மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25 ( இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில்   2011 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது)
  • சர்வதேச கலால் தினம் (International Customs Day) - ஜனவரி  26  |  மைக்கருத்து 2019 -  தடையற்ற வர்த்தகம் மற்றும் பயணத்திற்கான ஸ்மார்ட்  எல்லைகள் (SMART borders for seamless Trade, Travel and Transport)
  • சர்வதேச கல்வி தினம் (International Day of Education) - ஜனவரி 24
  • தேசிய பெண் குழந்தைகள் தினம் ( National girl child day ) - ஜனவரி 24 | மையக்கருத்து - ஒளி மயமான நாளைக்காக பெண் குழந்தைகளை மேம்படுத்துதல் (Empowering Girls for a Brighter Tomorrow)

விருதுகள்

  • பத்ம விருதுகள் 2019 : மூவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா விருது 2019
  • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி : மேற்கு வங்க மாநிலத்தில் மிராட்டி என்ற கிராமத்தில் கடந்த 1935ஆம் ஆண்டில் பிறந்தவர் பிரணாப் முகர்ஜி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை  நாட்டின்  13ஆவது  குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களில் ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், வி.வி.கிரி, அப்துல் கலாம் ஆகியோருக்கு இதற்கு முன்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் : கடந்த 1916ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தில் பிறந்தவர் நானாஜி தேஷ்முக். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் நீண்ட கால உறுப்பினராக இருந்த இவர், சோஷலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கடந்த 1974ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக முன்னெடுத்த மாணவர் இயக்கத்தில் பங்கேற்று முக்கியப் பங்காற்றியவர். 13 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்த தேஷ்முக், பின்னர் பாரதிய ஜன சங்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் படித்தவர். இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருதும் ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம், சத்னாவில் இவர் காலமானார்.
  • கவிஞர் பூபன் ஹசாரிகா : அசாம் மாநிலம், சதியா நகரில் கடந்த 1926ஆம் ஆண்டு  செப்டம்பர் 8}ஆம் தேதி பூபன் ஹஸôரிகா பிறந்தார்.  இசையமைப்பாளர், பாடகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். திரைப்படத் துறையில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே (1992) விருதையும் இவர் பெற்றுள்ளார். கடந்த 2011}ஆம் ஆண்டு  நவம்பர் 5ஆம் தேதி மும்பையில் காலமானார். 
பத்ம விபூஷண் விருது 2019:
  • நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய்
  • டிஜிபோட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர்
  • எல்.என்.டி. சேர்மன் ஏ.எம்.நாயக்
  • எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர் புரந்தரே
  • பத்ம பூஷண் விருதுகள் 2019 :
  • முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
  • மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
  • முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
  • முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
  • அகாலிதளம் தலைவர் தீந்ஷா.
  • மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
  • லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
  • நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது.
பதம்ஸ்ரீ விருதுகள் 2019 :
  • குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
  • மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
  • இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
  • நடிகர் பிரபு தேவா
  • டாக்டர் ஆர்.பி. ரமணி
  • டிரம்ஸ் சிவமணி
  • நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டிய கலைஞர்)
  • பங்காரு அடிகளார்
  • கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
  • மறைந்த நடிகர் காதர் கான்
  • முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
  • பாட்மின்டன் வீரர் சரத் கமல்
  • கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
  • நடிகர் மனோஜ் பாஜ்பாய்
  • டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
  • மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
  • ஷாதப் முகம்மது
  • கபடி வீர் அஜய் தாக்கூர்
  • பத்மஸ்ரீ விருது 2019 அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகள்.
    • பங்காரு அடிகளார் - ஆன்மீகம்
    • சரத் கமல் விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
    • நார்தகி நட்ராஜ் - கலை
    • மதுரை சின்னப்பிள்ளை - சமூகப்பணி
    • ஆர் வி ரமணி - மருத்துவம்
    • ஆனந்தன் சிவமணி - கலை
    • ராமசாமி வெங்கடசுவாமி - மருத்துவம்
  • சீன அரசின் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருது, சீனாவில் பணிபுரியும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த வேத கணித நிபுணரான பள்ளி ஆசிரியர்  ஐசக் தேவகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, 2016-ம் ஆண்டுக்கான ‘சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருதையும்’, இவர் பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் இந்தியர்  எனும் பெருமையும் இவரைச் சாரும்.
  • 'கீர்த்தி சக்ரா' விருது 2019,  சி.ஆர்.பி.எப்., வீரர்கள், பிரதீப் குமார் பாண்டா, ரஜேந்திர குமார் நைன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அவந்திபுரா பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது, 2017 டிசம்பரில், பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் இவ்வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் விருதுகளில், இரண்டாவது உயரிய விருதாக, கீர்த்தி சக்ரா விருது கருதப்படுகிறது.
  • 'சவுர்யா சக்ரா' விருது 2018, சி.ஆர்.பி.எப்., கமாண்டர், ஜைல் சிங்குக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வாயு சேனா பதக்கம் 2019’ (Vayu Sena Medal (gallantry)) அமித் குமர் ஜா (Amit Kumar Jha) மற்றும் ‘புவேந்திரன் நாயர் பிரசாந்த் (Bhavanendran Nair Prasanth) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.  ’ஆபரேஷன் கர்ணா’ (‘Op Karuna’) என்ற பெயரில் கேரளாவில் ஆகஸ்டு  2018 ல் ஏற்பட்ட வெள்ள சேதத்தில் வான்வழி மீட்பு பணிகளுக்காக ‘புவேந்திரன் நாயர் பிரசாந்த்’ -க்கும்,  நவம்பர் 2018 ல் ‘ஓக்கி’ புயலால்   பாதிக்கப்பட்ட கேரளாவில்   ஆற்றிய வான்வழி மீட்பு நடவடிக்கைகளுக்காக அமித் குமர் ஜா- வுக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கள்  

  • சென்னை ஓபன் செஸ் போட்டியில் ஜார்ஜிய கிராண்ட்மாஸ்டர் பன்ட்சுலையா லெவன் சாம்பியன் பட்டம் வென்றார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • கலாம் சாட் (Kalamsat) மற்றும் மைக்ரோசாட்-ஆர் (Microsat-R) செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி சி-44 (PSLV C44)  ராக்கெட் மூலம்,  ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 24-1-2019 அன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
    • 690 கிலோ எடை கொண்ட மைக்ரோசாட் - ஆர் செயற்கைக்கோள் புவி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்டது. புவி அமைப்பு, நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள் உதவும். இராணுவ சேவைக்கு பயன்படுத்தத்தக்கது.
    • மாணவர்கள் தயாரித்த 34 கிராம் எடை கொண்ட கலாம் சாட் எனப்பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக சிறிய செயற்கைக்கோள் ஹாம்ரோடியோ சேவைக்கு உதவும்.  இது 10 செ.மீ.    கன சதுர வடிவில்   2 கிலோ எடை உடையது. சென்னையைச் சேர்ந்த ‘Space Kidz India’ அமைப்பு மற்றும் மாணவர்களினால் வடிவமைக்கப்பட்டது.  மேலும், இதுவரையில் ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 53 இந்திய செயற்கை கோள்களையும், 269 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவி உள்ளது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டானது இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. ரகத்தின் 46-வது ராக்கெட் ஆகும். செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல். என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • My Vote Matters” என்ற பெயரில் காலாண்டு பருவ இதழை (Quarterly Magazine) மத்திய தேர்தல் ஆனையம் 2019 ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 அன்று வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.