-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 7 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 7 ஜனவரி 2019

இந்தியா

  • 5 ஆயிரம் கிலோ கிச்சடி சமைத்து தில்லி பாஜக உலக சாதனை முயற்சி: தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லியில் நடைபெற்ற மாபெரும்  பேரணியில் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் வகையில் 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது. இது ராம்லீலா மைதானத்தில் குழுமிய சுமார் 25,000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இதற்கு முன்னராக,  நாக்பூரில் விஷ்ணு மனோகர் என்பவர் சமைத்த 3,000 கிலோ கிச்சடிதான் உலக சாதனையாக பதிவாகி உள்ளது. தற்போது 5,000 கிலோ கிச்சடியை விஷ்ணு மனோகரே தில்லியில் சமைத்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச பட்டம் விடும் திருவிழா (International Kite Festival) , குஜராத் மாநிலம், ஆமதாபாதில் 6-14 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறுகிறது. இதில், இந்தியா மட்டுமன்றி 45 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சபர்மதி நதிக்கரையில் நடைபெறும் இந்தத் திருவிழாவை, குஜராத் ஆளுநர் ஓ.பி.கோஹ்லி, மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
  • P. பெஷ்பருவா குழு (M.P. Bezbarauah Committee) : அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் 6 வது பிரிவை (Clause VI of the Assam Accord) அமல்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி M.P. பெஷ்பருவா தலைமையிலான 9 நபர்களடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
  • மிஷன் சக்தி திட்டம் (Mission Shakti scheme) : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் வரையில் வட்டியில்லாத கடன் வழங்குவதற்கான ‘மிஷன் சக்தி திட்டத்தை’ (Mission Shakti scheme) ஒடிஷா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம்

  • மலேசிய மன்னர் சுல்தான் முகமது (49), தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாடு 1957-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மன்னரொருவர் பட்டம் துறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்  

  • பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜப்பானின் நிஷி கோரியு, ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை வென்று பட்டத்தை வென்றார், மகளிர் பிரிவில், உக்ரைனின் லெசியா சுரேன்கோவை வீழ்த்தி கரோலினா பிளிஸ்கோவா பட்டம் வென்றுள்ளார்.
  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆமதாபாத்தில் தயாராகி வருகிறது. 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டு மான பணி மதிப்பீடாக ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகின்மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும் ,10 ஆயிரம் இருசக்கரவாகனங்களும் நிறுத்த முடியும்.மேலும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் அமைக்கப்பட உள்ளது.
  • ஹோப்மேன் கோப்பை (Hopman Cup) டென்னிஸ் போட்டியில்   சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் மற்றும் பெலிண்டா பென்கிக் இணை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 29 டிசம்பர் 2018 - 5 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய முதல் விண்கலம் எனும் பெருமையை சீனாவின் ‘சேஞ்ச்-4”  விண்கலம் பெற்றுள்ளது.  இந்த விண்கலத்தின்    Lunar rover    ”யுடு-2” (Yutu-2) அல்லது “ஜேட் ராபிட்” (Jade Rabbit-2)  நிலவின்  அறியப்படாத மறுபகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • தமிழறிஞர் இரா.இளங்குமரனார் உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம் 10 தொகுதிகள் சென்னை புத்தகக் காட்சி அரங்கில்6-1-2019 அன்று வெளியிடப்பட்டன.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.