தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019 (Tamil Nadu Solar Energy Policy 2019) ஐ 4.2.2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். 2023 ஆம் ஆண்டு சூரிய எரிசக்தியின் இலக்கான 8,884 மெகா வாட் திறனை அடைவதற்கு ஏதுவாக, சூரிய எரிசக்தி கொள்கை 2012 ஐ மாற்றியமைத்து இந்த புதிய கொள்கை வெளியிடப்ப்பட்டுள்ளது.
- இந்த புதிய கொள்கையின் படி, தமிழகத்தில் 9000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கான இலக்கினை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன் , அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு நிகர பயனீட்டளவு வசதியும், சூரிய மின் திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
- மேலும், விவசாயிகளின் வருமனத்தை பெருக்கிட சூரிய எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவித்தல் , அதிதிறன் பயன்பாடு வகை மற்றும் நுகர்வோர் பயன்பாடு வகை மூலம் சூரிய எரிசக்தி உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Source : tndipr. gov .in
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.