-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 1 February 2019

நடப்பு நிகழ்வுகள் 1 பிப்ரவரி 2019

தமிழகம்
  • தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-1-2019 வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 92 லட்சம் பேர் ஆண்கள், 2 கோடியே 98 லட்சம் பேர் பெண்கள், 5,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.
    • தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டசபை தொகுதியாக காஞ்சீ புரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி விளங்குகிறது. அங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.
    • சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி. உள்ளது. இங்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.
    • அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் காஞ்சீபுரமும், 3-வது இடத்தில் திருவள்ளூரும் உள்ளன.
    • குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
    • 18 முதல் 19 வயது வரையிலான இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம். அங்கு 7,696 இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
  • மரம் வளர்த்துப் பராமரிக்கும் மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  இந்த மதிப்பெண்கள் மாணவர்களின் அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் வழங்கப்படும்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாகஸ்மார்ட் குப்பைத்தொட்டி (Smart Dustbin (Reverse Vending Machine)) பயன்பாட்டினை 31-1-2019 அன்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நவீன ’ஸ்மார்ட் குப்பைத்தொட்டி’ யில் போடப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு இந்த Reverse Vending Machine   மூலமாக சலுகைக் கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகைக் கூப்பன்களைக்கொண்டு பொது மக்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம்.
இந்தியா
  • நடுத்தர தரையிலிருந்து வான் இலக்கினைத்தாக்கும் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக இஸ்ரேல் ஏரோஃஸ்பேஸ்நிறுவனமும் (Israel and Aerospace Industries) இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல்கட்டும் நிறுவனமும் 93 மில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • மத்திய அரசின், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறைக்கு (Department for promotion Of Industry and Internal Trade)   ’தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை’ ( Department of Industrial Policy and Promotion (DIPP)) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
உலகம்
  • மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவியேற்றுள்ளார்.
பொருளாதாரம்
  • முதலாவது மாற்றியமைக்கப்பட்ட 2017-2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானம் மற்றும் இதர கணக்கீடுகளை (Revised Estimates of National Income, Consumption Expenditure, Saving and Capital Formation, 2017-18)  மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office (CSO)) 31-1-2019 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,
    • மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) (2017-2018) - 170.95 இலட்சம் கோடி
    • மொத்த தேசிய வருமானம் (Net National Income) - Rs. 28 இலட்சம் கோடி
    • மேலும் விவரங்களுக்கு : http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1562095
    • நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்னை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, தேசிய கணக் கெடுப்பு விபரங்களின்படி, கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலை வாய்ப்பின்மையின் அளவு, 1 சதவீதம் என்ற உச்சத்தை அடைந்துள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National Sample Survey Office’s (NSSO’s) ) சார்பில், வேலைவாய்ப்பு பிரச்னை தொடர்பான புள்ளி விபரங்கள், ஆண்டு தோறும் வெளியிடப் படும். ராஜினாமாசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், 2017 ஜூலை முதல், 2018 ஜூன் வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரங்களை, இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.இதற்கு, தேசிய புள்ளியியல் ஆணையமும், ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய தினங்கள்
  • 2019 ஆம் ஆண்டை சர்வதேச வேதிப்பொருட்களுக்கான தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (International Year of the Periodic Table of Chemical Elements 2019) ’யுனெஸ்கோ’ (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) அறிவித்துள்ளது. 
  • கூ.தக. : நவீன வேதியலின் தந்தை என அழைக்கப்படும், ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) 1869 ஆம் ஆண்டு வேதிப்பொருட்களுக்களுக்கான தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியதன் 150 வது நினைவு ஆண்டாக 2019 அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
  • சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (International Cricket Council (ICC)) அமைப்பின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான (2019-2023) விளம்பர பங்குதாரர் நிறுவனமாக கொகோகோலா (Coca-Cola) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள்
  • தேசிய மாணவர் படையின்’ (National Cadet Corps) இயக்குநர் ஜெனரலாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.








கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.