தமிழ்நாடு
- ஒசூர் மற்றும் நாகர்கோயில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதா 13-2-2019 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் தற்போதுள்ள 12 மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.
- பதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20 முதல் 22-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு, ”தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட இருக்கிறது.
இந்தியா
- குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகியவற்றை பெயருக்கு முன்போ அல்லது பின்னாலோ சேர்த்துக் கொள்ள கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு சேர்த்தால் சம்பந்தப்பட்ட நபர் விருதை திருப்பி ஒப்படைக்க அறிவுறுத்தப்படுவார்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட விருதை ரத்து செய்யவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னாவும், பத்ம விபூஷண் (307 பேர்), பத்ம பூஷண் (1,255 பேர்), பத்ம ஸ்ரீ (3,005 பேர்) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விவாகரத்துக் கோரும் காரணங்களின் பட்டியலில் தொழுநோயை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டதிருத்த மசோதா 13-2-2019 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் 12-2-2019 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீட்டு நடத்தி நிதி முறைகேடு செய்வதாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து அதனைத் தடுக்கும் வகையிலும், பொது மக்களின் நலன்களைக் காக்கும் நோக்கிலும் இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த மசோதாப்படி, சீட்டு நிதித் திட்டங்களை நடத்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க முடியாது. அதைமீறி, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.
- ஐந்தாவது, சர்வதேச அணைகள் பாதுகாப்பு மாநாடு ( International Dam Safety Conference ) 13-14 பிப்ரவரி 2019 தினங்களில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. ஒடிஷா மாநில அரசு, இந்திய அரசு மற்றும் உலக வங்கி இணைந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன.
- ’ராகாத் இராணுவப்பயிற்சி’ (Exercise Rahat) : இந்திய இராணுவத்தின் , பேரழிவு கால மனிதாபிமான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் ஆல்வார் பகுதிகளில் 12-2-2019 அன்று நடைபெற்றது.
வெளிநாட்டு உறவுகள்
- கடல் மாசுபாட்டை தடுப்பதற்காக இந்தியா மற்றும் நார்வே நாடுகள் 11-2-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
முக்கிய தினங்கள்
- தேசிய உற்பத்தித்திறன் வாரம் (National Productivity Week) - 12-18 பிப்ரவரி 2019
கூ.தக. : தேசிய உற்பத்தித்திறன் கவுண்சில் (National Productivity Council (NPC)) மத்திய தொழிற்சாலைகள் அமைச்சகத்தினால் 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தலைமை அலுவலகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
விருதுகள்
- இஸ்ரேல் நாட்டின் ‘மில்லியன் டாலர் டான் டேவிட் பரிசு’ (Million Dollar Dan David Prize) இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியத்திற்கு, அவரது, ‘Inter-cultural encounters between Asians, Europeans and people of North and South America during the early modern era’ என்ற வரலாற்று ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- “Let’s Talk On Air: Conversations with Radio Presenters” எனும் புத்தகத்தின் ஆசிரியர் - ராகேஸ் ஆனந்த் பக்ஷி
- ‘What Marx Left Unsaid’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்கள் - மலாய் சவுதாரி மற்றும் அரிதம் சவுதாரி
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.