நடப்பு நிகழ்வுகள் 18 பிப்ரவரி 2019
இந்தியா
- InfyTQ’ மொபைல் செயலி : பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக ’இன்ஃபோஸிஸ்’ (Infosys) நிறுவனம் ‘InfyTQ’ என்று பெயரிடப்பட்டுள்ள மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூ.தக. : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) – சாலில் பாரேக் (Salil Parekh)
- தடைசெய்யப்பட்ட பஞ்சாப் மொழி பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 99 ஆண்டுகள் கழித்து வெளியீடு : ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி பஞ்சாப் சுதந்திரப்போராட்ட வீரர் மற்றும் எழுத்தாளர் நானக் சிங் - கினால் 1919 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘கோனி வைசக்தி’ (‘Khooni Vaisakhi’) என்ற பாடல் அப்போதைய ஆங்கிலேய அரசினால் தடை செய்யப்பட்டிறுந்தது. தற்போது , அப்பாடலை ‘நவ்தீப் சூரி’ (Navdeep Suri) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
கூ.தக. : ஜாலியன் வாலாபாக் படுகொலை (13 ஏப்ரல் 1919) நடைபெற்று 100 வது நினைவு தினம் வரும், 13 ஏப்ரல் 2019 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 16-17 பிப்ரவரி 2019 தினங்களில் நடத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர் கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'தேஜஸ்' இலகுரக போர் விமானம், அதிநவீன ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து ஆகாயத்தில் இலக்கை தாக்கக் கூடிய, 'ஆகாஷ் ஏவுகணை' உள்ளிட்டவையும் இப்பயிற்சியில் பங்கேற்றன.
- நாட்டின் முதல், பெண் விமான எஞ்சினியர் - ஹினா ஜெய்ஸ்வால் : இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, சண்டிகாரை சேர்ந்த ஹினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான இன்ஜினியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- "வந்தே பாரத்' ரயில் தனது வர்த்தக சேவையை, தில்லியிலிருந்து வாராணசி வரையிலும் 17 பிப்ரவரி 2019 அன்று தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- 3 நாள் பயணமாக அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி இந்தியா வருகை : இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இந்தியா வரும்படி அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்ட மவுரிசியோ மக்ரி, 3 நாள் பயணமாக 17-2-2019 அன்று இந்தியா வந்துள்ளார்.
கூ.தக. : அர்ஜெண்டினாவின் தலைநகரம் - பியூனோஸ் ஆரிஸ் (Buenos Aires)
நாணயம் - பீஸோ (Peso)
- மியூனிக் பாதுகாப்பு மாநாடு 2019 (Munich Security Conference), 15-17 பிப்ரவரி 2019 தினங்களில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்றது. . இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பங்கஜ் சரண், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அதேபோல், மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்பட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தற்கால - எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூ.தக. : மியூனிக் பாதுகாப்பு மாநாடு வரலாறு : இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் இவால்டு ஹென்க். (பின்னாளில், ஜெர்மனியை காக்க வேண்டும் என்றால் ஹிட்லரைக் கொலை செய்ய வேண்டும் என்று சிந்தனையாளர் குழுவில் இணைந்து தற்கொலைப்படையாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்). இரண்டாம் உலகப் போர் போன்ற நிகழ்வு உலகில் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும், உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கும் நோக்கிலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தின் மியூனிக் நகரில் 1963-ஆம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு ஒன்றை இவால்டு ஹென்க் நடத்தினார். அப்போது முதல், இடைப்பட்டக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் தவிர்த்து அந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய நியமனங்கள்
- மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes (CBDT)) தலைவராக பிரமோத் சந்திரா மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுக்கள்
- தேசிய நடை ஓட்டப்பந்தயம் - ஜிதேந்தர் முதலிடம் : தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார்.
- கத்தார் ஓபன் - எல்ஸி மெர்டென்ஸ் சாம்பியன் : கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சிமோனா ஹலேப்பை வீழ்த்தி பெல்ஜியத்தின் எல்ஸி மெர்டென்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
- குவாஹாட்டியில் நடைபெற்ற 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில், லக்ஷயா சென்னை வீழ்த்தி செளரவ் வர்மாவும், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி-சிராக் ஷெட்டி இணையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.