நடப்பு நிகழ்வுகள் 20 பிப்ரவரி 2019
தமிழ்நாடு
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ’பண்டிகூட்’ (Bandicoot) எனப்பெயரிடப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கான ‘ரோபோ’ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரோபோவானது இந்தியாவிலேயே முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
- 112 என்ற ஒருங்கிணைந்த அவசர கால உதவி எண் சேவை தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 19-2-2019 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
- இந்தியாவில், போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 108 என, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே சேவை எண் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு மத்திய அரசு 112 என்ற அவசர கால உதவி எண் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த புதிய தொலைபேசி சேவை, முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19-2-2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினாலோ, ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி எனில், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினாலோ, அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும். சாதாரண செல்லிடப்பேசி எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்.
- ஆம்புலன்ஸ் சேவை எண்ணான, '108' மட்டும், விரைவில், இந்த சேவையுடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : அமெரிக்காவில், அவசர கால உதவிக்கு, '911' என்ற ஒருங்கிணைந்த சேவை எண் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தகக்து.
- மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் ‘மீன்வளத் துறை’ (Department of Fisheries) எனும் புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது.
- 'தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றத்திற்கான திட்டம்’ (National Rural Economic Transformation Project) எனும் புதிய திட்டத்தை தீனதயாள் அந்தியோதயா யோஜனா எனப்படும் தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission (DAY-NRLM)) கீழ் அமல்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 19 பிப்ரவரி 2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் பொருளாதார உள்ளடக்கம் (financial inclusion), வாழ்தார மேம்பாடு மற்றும் ஊரகத் தயாரிப்புகளுக்கான சந்தைகள் போன்ற புதுமையான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
- தேசிய மின்னணு கொள்கை 2019 (National Policy on Electronics 2019) -க்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 19-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) முன்மொழிந்துள்ள இந்தக் கொள்கை மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதை இந்தக் கொள்கை முன்நிறுத்துகிறது.
- சிப்செட்டுகள் உள்ளிட்ட முக்கியமான உதிரி பாகங்களை உருவாக்குவதற்கான திறன்களை முடுக்கிவிட்டு, ஊக்குவிப்பதன் வாயிலாகவும், உலகளவில் இந்தத் துறை போட்டியிடும் வகையிலான சூழலை உருவாக்குவதன் மூலமும் இந்த இலக்கு எட்டப்பட உள்ளது.
- மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை உலகளவில் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, முக்கியமான மின்னணு பாகங்களை உற்பத்தி செய்வதற்கான உதவியையும், நிதியுதவியையும் அளிப்பது, உயர்தொழில்நுட்பம் சார்ந்த பெரிய திட்டங்களுக்கு சிறப்பு உதவிகள் வழங்குவது, புதிய தொழிற்கூடங்களை ஊக்குவிப்பதற்கும், தற்போதுள்ள தொழிற்கூடங்களை விரிவுபடுத்துவதற்கும் பொருத்தமான திட்டங்களையும், உதவிக்கான முறைகளையும் வகுப்பது, மின்னணு துறை சார்ந்த அனைத்து துணை பிரிவுகளிலும் ஆராய்ச்சி வளர்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்துவது, தொழில் திறன்களை கணிசமாக மேம்படுத்த ஊக்கத்தொகை வழங்குவது ஆகியவை 2019 தேசிய மின்னணு கொள்கையின் சிறப்பு அம்சங்களாகும்.
- சீர்மரபினர் மற்றும் நாடோடி இனத்தவரின் நலனுக்கும், வளர்ச்சிக்குமான வாரியம் (Welfare Board for De-notified, Nomadic and Semi-Nomadic Communities) அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 19-2-2019 அன்று ஒப்புதல் அளித்தது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த வாரியத்தின் தலைவராக நிதி அயோக்கின் துணைத்தலைவர் செயல்படுவார்.
- சமஸ்கிருத மொழியை தனது மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக (official language) மாற்றுவதற்கான மசோதா ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டசபையில் 16-2-2019 அன்று நிறைவேறியுள்ளது.
- ’கிஷான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான்’ (Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan) எனும் விவசாயிகளுக்கு பொருளாதார மற்றும் நீர் பாதுகாப்பை வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 19-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் 500 KW முதல் 2 MW வரை திறன்கொண்ட சூரிய ஆற்றல் உற்பத்தி நிலையங்களை விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும், தனிநபர் விவசாயிகள் 7.5 HP வரை திறன்கொண்ட சூரிய ஒளியினால் இயங்கக்கூடிய தண்ணீர் குழாய் மோட்டார்கள் அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியில் 30% த்தை மத்திய அரசும், 30% த்தை மாநில அரசும் வழங்கும், எஞ்சிய 40 % த்தை விவசாயிகள் செலவிடவேண்டும்.
வெளிநாட்டு உறவுகள்
- அமெரிகாவிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணையை வாங்குவதற்காக இந்தியன் ஆயில் கார்பரேசன் (Indian Oil Corporation(IOC)) ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, வருடாந்திர ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணை வாங்கும் இந்தியாவின் முதல் பொதுத்துறை எண்ணைய் நிறுவனம் எனும் பெருமையையும் இந்தியன் ஆயில் பெற்றுள்ளது.
- இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே எல்லைதாண்டிய குற்றங்கள் மற்றும் காவல் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 19 பிப்ரவரி 2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொருளாதாரம்
- இடைக்கால ஈவுத்தொகையாக ( interim dividend ) ரூ.28,000 கோடியை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
நியமனங்கள்
- இந்திய வானியல் சொசைட்டியின் (Astronomical Society of India) முதல் பெண் தலைவராக GC அனுபமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- சர்வதேச சமூக நீதி தினம் (World Day of Social Justice) - பிப்ரவரி 20 | மையக்கருத்து (2019) - 'நீங்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்பினால் சமூகநீதிக்காக பணியாற்றுங்கள்' (If You Want Peace & Development, Work for Social Justice)
விருதுகள்
- 7 வது தேசிய புகைப்பட விருதுகள் 2019 (National Photography Awards) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையினால் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றோர் விவரம் வருமாறு,
- வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award ) - அஷோக் திவாளி ( Ashok Dilwali)
- தொழில்ரீதியான புகைப்படக்கலைஞர் விருது (Professional Photographer of the Year) - SL சாந்த் குமார்
- அமெச்சூர் புகைப்படக்கலைஞர் விருது (Amateur Photographer of the Year) - குர்தீப் திமான்
விளையாட்டுக்கள்
- லாரஸ் விளையாட்டு விருது 2019 : விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை. இவ்வாண்டு விருது பெற்றோர் விவரம் வருமாறு,
- சிறந்த விளையாட்டு வீரர்-நோவக் ஜோகோவிச் (செர்பியா, டென்னிஸ்),
- சிறந்த விளையாட்டு வீராங்கனை-சைமன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்).
- ஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்).
- மீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).
- ஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).
- சிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).
- சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).
- வாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).
- விதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)
- சிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).
- பல்கேரிய குத்துச்சண்டை நிகாத், மீனாகுமாரிக்கு தங்கம் : மகளில் 51 கிலோ பிரிவில் நிகாத் ஸரீன் பிலிப்பைன்ஸின் ஐரிஷ் மேக்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் 54 கிலோ பான்டம் வெயிட் பிரிவில் மீனாகுமாரி பிலிப்பைன்ஸின் அய்ரா வில்லேகாஸை வீழ்த்தி தங்கம் வென்றார். 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி வென்றார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- 2019ம் ஆண்டின் 'சூப்பர் ஸ்நோ மூன்' இந்தியாவில் 19-2-2019 அன்று இரவு 9.24 மணிக்கு தோன்றியது.
- அமெரிக்காவில் குளிர்காலத்தில் வரும் பவுர்ணமி, 'சூப்பர் ஸ்நோ மூன்' அல்லது 'ஹங்கர் மூன்' என அழைக்கப்படுகிறது. நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் இந்நிகழ்வை அனைத்து நாடுகளிலும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். அடுத்த 'சூப்பர் ஸ்நோ மூன்' மார்ச் 20ம் தேதி 360,772 கி.மீ., தொலைவில் தோன்ற உள்ளது.
- "புவி வெப்பமடைதல்” (global warming) என்ற வார்த்தையை முதல் முறையாக 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி, அதனைப் பிரபலப்படுத்திய அமெரிக்க அறிவியலறிஞர் வால்லேஸ் ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) 18-2-2019 அன்று காலமானார்.
- இந்தியாவின் முதலாவது அதிநவீன தடயவியல் ஆய்வகமான Cyber Prevention Awareness and Detection (CyPAD) Centre மற்றும் National Cyber Forensic Lab (NCFL) புது தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் 18 பிப்ரவரி 2019 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
- இந்தியாவின் முதல் ‘கால்பந்து ரத்னா விருது’ (Football Ratna) சுனில் சேத்ரி (Sunil Chhetri) க்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.