-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 7,8 February 2019

நடப்பு நிகழ்வுகள் 7,8 பிப்ரவரி 2019

தமிழ்நாடு

  • "டிஜிகாப் மொபைல் செயலி” (Digicop mobile app) - சென்னை மாநகரக் காவல்துறையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியின் நோக்கம் , திருடப்பட்டு, காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொபைல்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதாகும். அனைத்து திருடப்பட்ட மொபைல் போன்கள் பற்றிய விவரமும் இந்த செயலில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூரில் உள்ள இந்திய தேசிய நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Food Processing Technology (IIFPT)), ஹரியானா குண்ட்லியில் உள்ள உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனங்களுக்கு (National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM))   தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்  என்ற அந்தஸ்தை அளிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
  • ’ராஷ்டிரிய காமதேனு ஆயோக்‘ (Rashtriya Kamdhenu Aayog) எனும் திட்டத்தின் கீழ்   பசுக்கள் மற்றும் அதன் சந்ததி பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் தேசிய காமதேனு அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.       நாட்டிலுள்ள கால்நடைகளைப் பாதுகாக்கவும், அதன் நலனைப் பேணவும், தேசிய காமதேனு அமைப்பு உதவும்.  முக்கியமாக உள்நாட்டு இன கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும். 
  • ”அடல் புஜல் யோஜனா’ (Atal Bhujal Yojana) விற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.6000 கோடி செலவிலான இந்த திட்டத்தின் செலவினமானது மத்திய அரசு மற்றும் உலக வங்கியிடையே 50: 50 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளப்படும். சமுதாயப் பங்களிப்புடன், நிலையான நிலத்தடி நீர் மேலாண்மையை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டமானது,  குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலுள்ள, அதிக அளவில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ள்ள  பகுதிகளில் அமல்படுத்தப்படவுள்ளது.
  • எல்.பி.ஜி (liquefied petroleum gas (LPG)) எனப்படும் நீர்ம பெட்ரோலிய  வாயுவை இறக்குமதி மற்றும் பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.
  • சர்வதேச அறிவுசார் சொத்துரிமைப் பட்டியலில் ( International IP Index ) இந்தியா 36 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
  • ’ஆசிய எல்.பி.ஜி கூடுகை’ (2019 Asia LPG Summit) புது தில்லியில் 5-6 பிப்ரவரி 2019 அன்று  எல்.பி.ஜி -   வாழ்வுக்கான ஆற்றல் ((LPG – Energy for Life)) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.
  • ’பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின்’ (Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)) முதன்மை செயல் அதிகாரி (CEO) - இந்து பூஷன் (Indu Bhushan)
  • இந்தியாவில் பொதுமக்கள் - நீதிபதிகள் விகிதம் : 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 10 லட்சம் மக்களுக்கு 19. 78 வீதம் நீதிபதிகள் உள்ளனர் என மக்களவையில் மத்திய சட்ட இணையமைச்சர் பி.பி.செளதாரி தெரிவித்துள்ளார்.

உலகம்

  • தாய்லாந்து நாட்டின் தேசிய நீர் விலங்காக ‘சியாமீஸ் ஃபைட்டிங் மீன்’ (Siamese Fighting Fish) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ’நேட்டோ’ (NATO - North Atlantic Treaty Organization) அமைப்பின் 30 வது உறுப்பினராக மாசிடோனியா நாடு இணைந்துள்ளது. சர்வதேச இராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பானது  4 ஏப்ரல் 1949 அன்று வாசிங்டனில்  தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ்  நகரில் அமைந்துள்ளது.
  • அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் 2018 ஆம் ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவுக்கும், நமீபியா நாட்டின் தேர்தல் ஆணையம் மற்றும் பனாமா நாட்டின் தேர்தல் தீர்ப்பாயத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்பந்தம்    தேர்தல் நடைமுறையின் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு சார்ந்த அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்  உள்ளிட்ட தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் ஒத்துழைப்புக்கான பிரிவுகளைக் கொண்டது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். தகவல் பரிமாற்றம், நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்பு, பணியாளர் பயிற்சி, முறையான ஆலோசனைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
  • இந்தியா பிரேசில் இடையே, பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா, மாலத்தீவுகள் இடையே வேளாண் தொழிலுக்கான சுற்றுச்சூழல் முறைகளை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள  புரிந்துணர்வு  ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் உக்ரேன் இடையேயான வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும்.  இருநாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு செயல் குழு, ஒத்துழைப்பு தொடர்பான துறைகளை கண்டறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து, அமலாக்கப் பணிகளின் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும்.      இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.  மேலும், இந்த ஒப்பந்தம் தானாகவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • இந்தியா – ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே ஆப்பிரிக்காவில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான  ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையே உயிரி தொழில்நுட்பத் துறையில்   புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.  இந்திய மற்றும் பின்லாந்து நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்தவும், நீண்ட கால ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைப் படைப்பு ஒத்துழைப்பு அமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் ஆதரவளிக்கும்.  உயர் தரமுள்ள சர்வதேச கூட்டுத் திட்டங்களுக்கு தேவை அடிப்படையில் நிதி உதவி செய்வதன் மூலம் இரு நாடுகளும், பரஸ்பர நன்மை பயக்கும் உலகத்தர புதுமைப் படைப்புகளை அடைய இந்த ஒப்பந்தம் உதவும். இருநாடுகளின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே அறிவுப் பெருக்கம், அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம்  வசதி ஏற்படுத்தித் தரும்.
  • இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே மின்னணு நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்பந்தம் மின்னணு நிர்வாகம், தகவல் தொழில்நுட்பக் கல்வி, பல்வேறு துறைகளில் மின்னணு நிர்வாக அமலாக்கம், தரவு மையங்கள் அமைப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
  • இந்தியா-நார்வே இடையே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 6-2-2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இருநாடுகளும் நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவதை  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.  நீலப்பொருளாதாரத் துறையில் சர்வதேச அளவில் முன்னணி  நாடாக விளங்கும் நார்வே, மீன்பிடிப்பு, ஹைட்ரோ கார்பன், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, கடல்சார் வளங்களை பாதுகாப்பது, மற்றும் கடல்சார் போக்குவரத்து ஆகிய துறைகளில் நவீன தொழில்நுட்பங்களையும், நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

  • வருமானவரி மற்றும் மறைமுக வரிக்கான ஒழுங்காணையங்களை (Institution of Income-Tax Ombudsman and Indirect Tax Ombudsman) ஒழிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.      மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைதீர்க்கும் மாற்று முறைகள் கொண்டுவரப்பட்டதையொட்டி, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக. : வருமான  வரி தொடர்பான பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக,  வருமான வரி ஒழுங்காணையம்  ( Institution of Income-Tax Ombudsman) கடந்த 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் முறைப்படுத்துவதற்கான ஒரே அதிகார அமைப்பை சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணைய மசோதா 2019 (International Financial Srvices Centres Authority Bill, 2019) மூலம் உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • ஆணையத்தின் மேலாண்மை: இந்த ஆணையத்தின் தலைவர் தவிர, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணையம், காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய ஆணையம், ஓய்வூதிய நிதியக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு உறுப்பினரும் மத்திய அரசு நியமிக்கும் இரண்டு உறுப்பினர்களும் மற்றும்  இரண்டு முழு நேர அல்லது பகுதி நேர உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பார்கள்.
    • ஆணையத்தின் செயல்பாடுகள்: நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச்சேவை மையங்களின் அனைத்து நிதிச் சேவைகள், நிதிச் சார்ந்த பொருட்கள் மற்றும் நிதி ஆவணங்கள் ஆகியவை அனைத்தையும் இந்த ஆணையம் முறைப்படுத்தும்.  இது தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் நிதிப் பொருட்கள், நிதி சேவைகள் மற்றும் நிதி ஆவணங்கள் ஆகியவற்றையும் இந்த ஆணையம் முறைப்படுத்தும்.
    • ஆணையத்தின் அதிகாரங்கள்: சர்வதேச நிதிச் சேவைகள் மையங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளான ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏஐ, பிஎஃப் ஆர்டிஏ போன்றவை செலுத்திய கட்டுப்பாட்டு அதிகாரங்கள் அனைத்தையும் இந்த ஆணையம் இனி மேற்கொள்ளும். இந்த மைங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நிதிப் பொருட்கள், நிதிச் சேவைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான கட்டுப்பாட்டு அதிகாரங்கள் ஆணையத்திடம் இருக்கும்.
    • ஆணையத்தின் நடைமுறைகள்: இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின்படி, நிதிப் பொருட்கள், நிதிச் சேவைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான தனது நடைமுறைகளை இந்த ஆணையம் வகுத்துக் கொண்டு செயல்படும்.
    • மத்திய அரசின் மானியங்கள்: இந்த ஆணைய செயல்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடிய  தொகையை  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கென இயற்றப்படும் சட்டங்களின்படி மானியமாக வழங்கும்.
  • ரிசர்வ் வங்கியின்புதிய பணவியல் கொள்கை (பிப்ரவரி 2019 மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதிய மதிப்பீடுகள் வருமாறு
    • ரெபோ விகிதம் (Repo Rate) - 6.25%
    • ரிவர்ஸ் ரெப்போ விகிதம் (Reverse Repo Rate) - 6%
    • வங்கி விகிதம் (Bank Rate) - 6.50%
    • பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio(CRR)) - 4%
  • 2019-2020 ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product(GDP)) வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
  • மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு "பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி" திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதி உதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். மார்ச் 31-ந்தேதிக்குள் முதல் தவணையை வங்கிக்கணக்குகளில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தொகை 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
    • யாருக்கு கிடைக்கும் ?
      • சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்
    • யாருக்கு கிடைக்காது?
      • அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.
      • மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.
      • மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.
      • மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.
      • கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.
      • பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருதுகள்

  • பிரஞ்சு அரசின் உயரிய விருதான ‘லீஜியன் டி ஹானர்’ (Legion d’Honneur) விருது மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாதிரியார் ‘ஃபிரான்கோயிஸ் லாபோர்டி’ (Father Francois Laborde) க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சங்கீத் நாடக் அகதமி விருதுகள் 2017 (Sangeet Natak Akademi Awards – 2017) பெற்றோர் விவரம் :
    • Hindustani Vocal Music- Lalith J. Rao
    • Hindustani Vocal Music - Umakant & Ramakant Gundecha (Gundecha Brothers — Joint Award)
    • Hindustani Instrumental Music (Tabla)-Yogesh Samsi
    • Hindustani Instrumental (Shehnai/Flute)-Rajendra Prasanna
    • Carnatic Vocal Music- M.S. Sheela
    • Carnatic Instrumental Music (Veena)- Suma Sudhindra
    • Carnatic Instrumental Music (Mridangam) - Tiruvarur Vaidyanathan
    • Carnatic Instrumental Music (Flute)- Shashank Subramanyam
    • Other Major Traditions Of Music (Sugam Sangeet)- Madhurani
    • Other Major Traditions Of Music (Sugam Sangeet)-Haimanti Sukla
    • Other Major Traditions Of Music ( Gurbani)- Gurnam Singh

விளையாட்டுக்கள்  

  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை  விதர்பா  அணி மீண்டும் தக்க வைத்தது.
  • தாய்லாந்தில் நடைபெற்ற ஈகாட் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ,  மகளிர் 48 கிலோ பிரிவில் 192 கிலோ தூக்கி தங்கம் வென்றுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 3 ஆண்டுகளுக்கு மேல் இட்லி, உப்புமா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கான ”பீம் ரேடியேசன்” என்ற தொழில்நுட்பத்தை  மும்பை பல்கலைக்கழக  இயற்பியல் பேராசிரியை டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். 
    • இந்த தொழில்நுட்பத்தின் மூலம், இட்லி உப்புமா, டோக்ளா போன்றவற்றை வேக வைத்த உணவுப் பொருட்களை எந்தவித கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் அப்படியே 3 ஆண்டுகளுக்கு மேல் கெடாமல் பராமரிக்க முடியும்.  இதற்காக எலக்ட்ரான் பீம் கதிர்வீச்சு என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த தொழில்நுட்பம் இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் அளிக்கப்படும் பேக்கேஜிங் உணவுகளுக்கும், விண்வெளி ஆய்வாளர்கள், ராணுவத்தினருக்கும் இந்த தொழில்நுட்பம் பலன் தரும்.
  • ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்:
    • தென் அமெரிக்க பகுதியில் இடம் பெற்றிருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5விஏ-247 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜிசாட்-31 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 06-02-2019 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
    • தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்கான, கு-பேண்ட் அலைவரிசைக் கருவிகளை உள்ளடக்கிய இந்த 2,536 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள், சவூதியின் ஹெலாஸ் சாட்4 செயற்கைக்கோளுடன்  ஏரியன் 5 விஏ-247 ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோவின் இன்சாட், ஜிசாட் செயற்கைக்கோள்களின் வரிசையில் அனுப்பப்பட்டிருக்கும் இந்த ஜிசாட்-31 செயற்கைக்கோள் விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு (டிஎஸ்என்ஜி), டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்லிடப்பேசி சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்க உள்ளது.
    • அதோடு, மிகப் பெரிய கடல் பகுதியில் குறிப்பாக அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முழுவதும் சிறப்பான தகவல்தொடர்பு சேவையையும் இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கு-பேண்ட் கருவிகள், நிலப் பரப்பு கண்காணிப்புக்குப் பயன்பட உள்ளன.ஜிசாட்-31 இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள 40 ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோளாகும். இதனுடைய ஆயுள் 15 ஆண்டுகள் ஆகும். 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.