Current Affairs for TNPSC Exams 01 January 2020
தமிழ்நாடு
- 20 வது, “சாஸ்த்ரா” (Shaastra) என்ற பெயரிலான சென்னை ஐ.ஐ.டி.- யின் தொழில்நுட்ப திருவிழா 3-6 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறுகிறது.
- தூய்மைக்கான நகரங்கள் குறித்த ‘தூய்மை சா்வே லீக் 2020’ சா்வேயில், குறைந்த மக்கள்தொகை நகரங்கள் பிரிவில் தெற்கு மண்டலத்தில் தமிழகத்தில் உள்ள மேலத்திருப்பந்துருத்தி, டி.கல்லுப்பட்டி, கங்குவாா்பட்டி ஆகியவை தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தியா
- இந்தியா நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியல் 2019 (Sustainable Development Goals (SDG) India Index ) ஐ நிதி அயோக் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே கேரளா, இமாச்சல பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பெற்றுள்ளன. மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன,
- ’இந்தியா காடுகள் அறிக்கை 2019’ (“India State of Forest Report (ISFR)”) மத்திய சுற்றுசூழல் , காடுகள் அமைச்சகத்தால் 30-12-2019 அன்று வெளியிடப்பட்டது. இதன் படி, இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 56 % காடுகள் மற்றும் மரங்கள் (80.73 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு) காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அளவில், அதிக காடுகள் பரப்பைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே மத்திய பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், சட்டிஷ்கர், ஒடிஷா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பெற்றுள்ளன.
- இந்திய அளவில், அதிக காடுகள் சதவீதத்தைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே மிஷோராம் (85.41%), அருணாச்சல் பிரதேசம் (79.63%), மேகாலயா (76.33%), மணிப்பூர் (75.46%) மற்றும் நாகாலாந்து (75.31%) மாநிலங்கள் பெற்றுள்ளன.
- சதுப்பு நிலக் காடுகளின் பரப்பளவில் (mangrove coverage), முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிஷா மாநிலங்கள் பெற்றுள்ளன.
- இந்திய அரசு - ஃபிளிப்கார்ட் (Flipkart) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : ’தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் - தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில்’ (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission (DAY-NULM)) பெண்கள் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்காக, மத்திய அரசு மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) மின்வணிக நிறுவனம் இடையே 30-12-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- 27 வது, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2019 (27th National children’s science congress 2019) 27-31 டிசம்பர் 2019 தினங்களில், ‘பசுமை, தூய்மை மற்றும் ஆரோகியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு’ (Science, Technology and Innovation for a clean, green and healthy nation) எனும் மையக் கருத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
- MyGov (https://www.mygov.in/) இணையதளம் - 29-12-2019 அன்று 1 கோடி பதிவுசெய்த பயனர்களை எட்டியுள்ளது.
- கூ.தக. : MyGov போர்ட்டல் 26 ஜீலை 2014 அன்று பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- ’தனு ஜாத்ரா’ (Dhanu Jatra) என்ற பெயரிலான பாரம்பரிய திறந்தவெளி அரங்க திருவிழா 31-12-2019 அன்று ஒடிஷாவின் பார்கார்க் எனுமிடத்தில் தொடங்கியது.
- ’அடல் கிஷான் மஸ்தூர் உணவகம்’ (Atal Kisan Mazdoor canteen) என்ற பெயரில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ரூ. 10 ற்கு உணவு வழங்கும் குறைந்த விலை உணவங்களை ஹரியானா அரசு அமைத்துள்ளது.
- இலகு ரக 'டோர்னியர்-228' முறைப்படி இந்திய விமானப்படையின் 41-ஆவது பிரிவில் அதிகாரப்பூா்வமாக 31-12-2019 அன்றுஇணைக்கப்பட்டது. இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் அடங்கிய ‘டோா்னியா்’ ரக போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- ரயில் பாதுகாப்பு படையின் (RPF - Railway Protection Force) பெயர், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை (IRPFS - Indian Railway Protection Force Service) என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை ( Department of Military Affairs (DMA)) உருவாக்கம் : இந்தியாவில் முதல்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி (Chief of Defence Staff) பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, புதிதாக, நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விபின் ராவத் தலைமையில் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
- ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 3 படைகள் சார்ந்த பணிகளை இந்த ராணுவ விவகாரங்கள் துறை கவனிக்கும். மேலும், முப்படைகளுக் கான ஆயுதங்கள், தளவாட கொள்முதல்களையும் சட்டவிதிகள், நடைமுறைகளின்படி கவனிக்கும்.
- இனி பாதுகாப்பு அமைச்சகம், 5 துறைகளை கொண்டதாக இருக்கும். அவை, பாதுகாப்பு துறை, ராணுவ விவகாரங்கள் துறை, ராணுவ உற்பத்தி துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை, ஓய்வுபெற்ற படைவீரர்கள் நலன் ஆகும்.
- நாட்டில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடா்ந்து 4-ஆவது முறையாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூா் நகரத்தை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது.
- உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.102 லட்சம் கோடி, அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடப்படவுள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் 31-12-2019 அன்று அறிவித்தாா். உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள இந்த முதலீடு, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 லட்சம் கோடி டாலராக்கும் இலக்குக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
- செலவிட திட்டமிடப்பட்டுள்ள தொகையில் நான்கில் ஒரு பகுதியான ரூ.24.54 லட்சம் கோடி எரிசக்தி துறையில் மட்டும் முதலீடு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து மின் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.11.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது.
- இவை தவிர, சாலை திட்டங்களில் ரூ.19.63 லட்சம் கோடியும், ரயில்வே திட்டங்களில் ரூ.13.68 லட்சம் கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளன.
- துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடியும், விமான நிலைய திட்டங்களுக்காக ரூ.1.43 லட்சம் கோடியும் செலவிடப்படவுள்ளன.
- நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ரூ.16.29 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோன்று தொலைத்தொடா்பு திட்டங்களில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
- நீா்பாசனம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தலா ரூ.7.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளன. மேலும், ரூ.3.07 லட்சம் கோடி செலவில் தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
- எஞ்சியுள்ள தொகையை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புகளுக்காக அரசு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
- நாட்டிலேயே முதல் மாநிலமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் 31-12-2019 அன்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு : ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முழுவதும் ‘பதற்றம் மிகுந்த பகுதி’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது .
- கூ.தக. : வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் கிளா்ச்சி மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1958-ஆம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்படி, பாதுகாப்புப் படையினா் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தலாம். எவ்வித முன்னறிவிப்புமின்றி, எவரையும் கைது செய்யலாம்.
சர்வதேச நிகழ்வுகள்
- முதன்முதலில் 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்ற நாடுகள் எனும் பெருமையை பசிபிக் தீவுகளிலுள்ள சிறு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன,
- ரஷியா - உக்ரைன் இடையேஎரிவாயு இணைப்பு ஒப்பந்தம் : உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன.
விருதுகள்
- ‘லோக்மான்யா திலக் பத்திரிக்கை விருது’ ( Lokmanya Tilak journalism award ) சஞ்சய் குப்தா- விற்கு வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
- ’ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவன’ ( Economic Research Institute for ASEAN and East Asia (ERIA)) -ன் வாரியத்தின் இந்தியாவிற்கான பிரதிநிதி மற்றும் ஆளுநராக ரோகன் ஷா (Rohan Shah) நியமிக்கப்பட்டுள்ளார்.
- கூ.தக. : 3-6-2008 ல் தொடங்கப்பட்ட ’ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின்’ தலைமையிடம் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் உள்ளது.
- இந்தியாவின் 28-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவணே 31-12-2019 அன்று பொறுப்பேற்றாா்.
விளையாட்டுகள்
- ரொனால்டோவுக்கு குளோப்சாக்கா் சிறப்பு விருது : ஜுவென்டஸ் அணி வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ துபை குளோப் சாக்கா் விருதை வென்றுள்ளாா்.
- ரஷியாவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் மாக்னஸ் காா்ல்ஸன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.