TNPSC Current Affairs 04 January 2020
தமிழ்நாடு
- தமிழகத்தில் பேட்டரி வாகனங்களுக்கான 256 மின்னேற்ற நிலையங்கள் உள்பட நாடு தழுவிய அளவில் 2,636 மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்கள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவிட்த்துள்ளார்.
- ஊராட்சித் தலைவரான 83 வயது பெண்மணி மாணிக்கம்மாள் : திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயுடுமங்கலம் கிராம ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா்களில் 83 வயதான மூதாட்டி மாணிக்கம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.
- ஊராட்சித் தலைவரான 21 வயது பெண் ரோகினி : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சேளூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது இளம்பெண் ரோகினி வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா
- ஒருங்கிணைந்த உதவி எண் - 139 ( integrated helpline number 139 ) : இரயில் பயணத்தின் போது, பயணிகளின் விரைவான குறைதீர்ப்பதற்காகவும், கோரப்படும் தகவல்களுக்கு விரைந்து பதிலளிப்பதற்காகவும் ‘139’ என்ற உதவி என்ணை இரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- கூ.தக. : இந்த 139 உதவி எண் என்பது தற்போது நடைமுறையிலிருக்கும் 182 உதவி எண்ணின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும்.
- உலகின் இரண்டாவது மிகவும் உயர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை (50 அடி உயரமுள்ளது) குஜராத் மாநிலம் அகமதாபாத்த்தில் 3-1-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக குஜராத் மாநிலம் நர்மதா மாநிலத்தில் 182 மீட்டர் உயரமுடைய உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையானது ரூ.3000 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிகழ்வுகள்
- அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இதில், காசிம் சுலைமானி, அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை, மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
நியமனங்கள்
- தேசிய மருத்துவ கமிஷனின் (National Medical commission) முதலாவது தலைவராக சுரேஷ் சந்திரா ஷர்மா (Suresh Chandra sharma) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இங்கிலாந்தின் ‘குயீன் பல்கலைக்கழகத்தின் (Queen’s University) முதல் பெண் வேந்தராக ஹிலாரி கிளிண்டன் 2-1-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- 2020 ஆம் ஆண்டை ‘சர்வதேச மருத்துவச்சிகள் மற்றும் தாதியர் ஆண்டாக’ (International Year of the Nurse and Midwife) உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation(WHO) ) அறிவித்துள்ளது.
விளையாட்டுகள்
- 23 வயது பிரிவு சா்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் 23 வயது இளம் வீரா் மானவ் தாக்கா் முதல்நிலை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மானவ் தாக்கா் கடந்த 2019 டிசம்பா் மாதம் கனடாவின் மார்கம் பகுதியில் நடைபெற்ற ஐடிடிஎப் சேலஞ்ச் பிளஸ், வட அமெரிக்க ஓபன் போட்டியில் பட்டம் வென்றார் ஆா்ஜென்டீனாவின் மார்ட்டின் பென்டாகோரை 11-3, 11-5, 11-6 என்ற கேம் கணக்கில் வென்றிருந்தார் மானவ். இதன் மூலம் ஐடிடிஎப் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி தற்போது உலகின் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.