-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 09 January 2020

TNPSC Current Affairs 09-01-2020 

Test Batch for TNPSC Group 1, 2/2A New Syllabus  
PORTAL ACADEMY –ன்   TNPSC குரூப் 1 2020 மற்றும் குரூப் 2/2A  2020 தேர்வுகளுக்கான  தேர்வு வகுப்புகள் (TEST BATCH) 15-01-2020 முதல் தொடங்கவுள்ளது.  TEST SCHEDULE மற்றும்  இதர விவரங்களுக்கு PORTAL ACADEMY இணையதளத்தைப் பார்வையிடவும்.  
WWW.PORTALACADEMY.IN  |  8778799470

தமிழ்நாடு

  • சென்னை - அந்தமான் நிக்கோபார் இடையே ‘கடலுக்கடியிலான ஒளி இழை கம்பி வட இணைப்பு திட்டத்திற்கு ("Submarine Optical Fibre Cable laying work)  9-1-2020 அன்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாட் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது.
  • 8-1-2020 அன்று தமிழக சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள்.
    • தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) மசோதா 2020 (Tamil Nadu Cooperative Societies (Amendment) Bill, 2020) - கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துறைத் தலைவர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வழங்குவதற்காக Tamil Nadu Cooperative Societies Act, 1983 ல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • தமிழ்நாடு மீன்வளர்ப்பு பல்கலைக்கழக (திருத்த) மசோதா 2020 (Tamil Nadu Fisheries University (Amendment) Bill, 2020) - அரசு நிதிகளைக் கையாள்வதில்  தமிழ்நாடு மீன்வளர்ப்பு பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை மாநில அரசு கண்காணிப்பதற்காக.
    • தமிழ்நாடு வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறைப்படுத்தல்) திருத்த மசோதா 2020 (Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Amendment Bill, 2020) - சந்தைப் படுத்தல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களின்  பதவிக் காலத்தை அதிகரிக்கச் செய்வதற்காக.
  • தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கூ.தக. :
  • தமிழக அரசின் ஓய்வூதியத்தார்கள் மர்றும் குடும்ப ஓய்வூதியத்தார்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீட்டுடன், முதல் கட்டமாக கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2018 வரை செயல்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம் இரண்டாம் கட்டமாக ரூ.4 லட்சம் மருத்துவ காப்பீட்டுத் தொகையுடன், 2018- 2022 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக ஓய்வூதியர்களிடமிருந்து மாதம் ரூ. 350 பிடித்தம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • இந்த திட்டமானது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் எம்.டி. இந்தியா நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா

  • தேசிய இளைஞர் விழா 2020 உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் 12-16 ஜனவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.
  • மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம், தனிமையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நியாய விலைக் கடை பொருட்களை நேரடியாக எடுத்துச் சென்று விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ‘எம்ரேஷன் மித்ரா செயலி மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.18 கோடி பயனாளா்கள் பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பணியை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஐஎன்எஸ் விக்ராந்த் : இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் முறைப்படி இணைக்கப்படும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ‘கொச்சி ஷிப்யாா்டு’ நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது.
  • 107 வது, இந்திய அறிவியல் காங்கிரஸ் 2020 (Indian Science Congress) 3-7 ஜனவரி 2020 தினங்களில் பெங்களூருவிலுள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (University of Agricultural Sciences) “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் : ஊரக வளர்ச்சி” (Science and Technology: Rural Development) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.
  • 31 சர்வதேச காத்தாடி திருவிழா (International Kite Festival) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 7-1-2020 அன்று நடைபெற்றது.
  • விக்ரம் சாராபாய் குழந்தைகள் கண்டுபிடிப்பு மையம் (Vikram Sarabhai Children Innovation Center) குஜராத் பல்கலைக்கழகத்திலுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தில் (Dr APJ Abdul Kalam Centre for Extension Research and Innovation ) அமைக்கப்படவுள்ளது.
  • 34 வது, உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலா போட்டி பட்டியல் 2019 (World Travel & Tourism Competitiveness Index) ல் இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் பெற்றுள்ளன.  உலக பொருளாதார மன்றம் (World Economic Forum ) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா - மங்கோலியா இடையே, அமைதி மற்றும் மக்கள் நோக்கங்களுக்காக விண்வெளி ஆய்விலும், பயன்பாட்டிலும் ஒத்துழைப்பது குறித்த ஒப்பந்தத்திற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 8-1-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்திய ரயில்வே அமைச்சகமும், பிரிட்டிஷ் அரசின் சர்வதேச மேம்பாட்டுத் துறைக்கும் இடையே  இந்திய ரயில்வேக்கு எரிசக்தி  தற்சார்பை ஏற்படுத்தும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்தி மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சகத்திற்கு கூட்டத்தில்  8-1-2020 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  
  • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கும், பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் (பிஎம்ஜிஎஃப்) நிறுவனத்துக்கும் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கென 2019 நவம்பர் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சகத்திற்கு கூட்டத்தில்  8-1-2020 அன்று பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.    
    • இந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது:
    • அத்தியாவசியமான ஆரம்ப சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் தருதல், சத்துணவு சேவைகள் ஆகியவற்றின் செயல்பரப்பு, சென்றடையும் திறன், தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பேறுகாலத்தின் போதும், குழந்தை பிறந்தவுடனும், கைக்குழந்தைகள் இறப்பு வீதத்தை குறைத்து முக்கிய ஊட்டச்சத்து பலன்களை மேம்படுத்துதல்
    • குடும்பக் கட்டுப்பாடு முறைகளில் குறிப்பாக மாற்றியமைக்கத்தக்க முறைகளில், தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளையும், தரத்தையும் அதிகரித்தல் மற்றும் இளம் பெண்களுக்கு இந்த முறைகள் கிடைக்கச் செய்வதை அதிகரித்தல்.
    • தெரிவு செய்யப்பட்ட நோய் தொற்றுகளால் [காசநோய், உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் (விஎல்), நிணநீர் யானைக்கால் (எல்எஃப்)] ஏற்படும் பளுவை குறைத்தல்
    • பட்ஜெட் பயன்பாடு, மேலாண்மை, சுகாதாரத் துறையில் பணியாளர் திறன்கள், டிஜிட்டல் சுகாதாரம், விநியோக சங்கிலி மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்பு முறையை வலுப்படுத்துதல்
    • இந்தியாவுக்கும். பிரான்சுக்கும் இடையே குடிபெயர்வு மற்றும் தற்காலிக மக்கள் போக்குவரத்து ஒத்துழைப்பு உடன்பாடு உறுதி செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 8-1-2020 அன்று ஒப்புதல் அளித்தது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஈரான் தலைநகா் டெஹ்ரானில் 8-1-2020 அன்று உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா்.
  • குரோஷியா (Croatia) நாட்டின் அதிபராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சோரன் மிலனோவிக் (Zoran Milanovic) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பெட்ரோ ஷாங்கெஸ் (Pedro sanchez ) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • 2019 -2020 ஆம் நிதியாண்டிற்கான முன்மதிப்பிட்ட தேசிய வருமானத்தை (Advance Estimates of National Income of 2019-20) தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office) வெளியிட்டுள்ளது.   இதன்படி,
    • 2019-2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜி.டி.பி. 5% வளர்ச்சியடைந்து 79 லட்சம் கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.  முந்தைய ஆண்டில் (2018-19) இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 6.8% ஆக இருந்தது குறிப்பிடத்தகக்து.
    • 2019-2020 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.96,563 ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டின் தனி நபர் வருமானம் ரூ. 92,565 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச வேட்டி தினம் - ஜனவரி 6

அறிவியல் தொழில்நுட்பம்

  • IDRSS - Indian Data Relay Satellite System என்ற பெயரில் புதிய வகை விண்வெளி தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  செலுத்தவுள்ளது.  இந்த செயற்கைக் கோள்களின் முக்கிய நோக்கம்,  2022 ஆம் ஆண்டில், ரூ.10,000/- கோடி செலவில்,   ‘ககன்யான்’ (Gaganyaan) என்ற பெயரிலான இந்தியாவின்  முதலாவது,  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் போது   விண்வெளியிலிருந்து தகவல் தொடர்புகளை வலிமைப்படுத்துவதாகும்.
  • TOI 700 d” என்ற பூமியின் அளவையொத்த , மனிதர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள புதிய கோளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” கண்டுபிடித்துள்ளது.

புத்தகங்கள்

  • கா்மயோதா கிரந்த் ( ‘Karmayoddha Granth’ ) என்ற பெயரிலான பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா 7-1-2020 அன்று புது தில்லியில் வெளியிட்டார்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.