TNPSC Current Affairs 12-01-2020
இந்தியா
- "விங்க்ஸ் இந்தியா 2020” (‘Wings India 2020’) என்ற பெயரில் சர்வதேச உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை கண்காட்சி ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் விமானநிலையத்தில் (Begumpet Airport) 12-15 மார்ச் 2020 தினங்களில் , “அனைவருக்கும் விமான சேவை” (Flying for all) எனும் மையக்கருத்தில் நடைபெறுகிறது.
- ‘அசெண்ட் 2020’ (Global Investors Meet ASCEND 2020) என்ற பெயரில் கேரள அரசின் உலக முதலீட்டாளர் மாநாடு 9-10 ஜனவரி 2020 ல் கொச்சியில் நடைபெற்றது.
- ’அனைவரையும் உள்ளடக்கிய நிதி திட்டத்திற்கான ஐந்தாண்டு காலத்திற்கான தேசிய திட்டத்தை ’ (National Strategy for Financial Inclusion (NSFI)) ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. இந்த திட்டமானது 2019 -2024 வரையிலான ஐந்தாண்டு காலக்கட்டத்தில் அமலாக்கப்படவுள்ளது.
- ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா (INS Vikramaditya) போர்க் கப்பல் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் தேஜாஸ் (Light Combat Aircraft (LCA) Tejas) ஐ 11-1-2020 அன்று வெற்றிகரமாக இறங்கியது. இதன் மூலம் போர்க்கப்பலில் சரியாக போர்விமானங்களை இறங்க செய்யும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சீனாவைத் தொடர்ந்து ஆறாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- ஜப்பான் கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பலான ’எச்சிகோ’ 13-01-2020 அன்று சென்னைக்கு வருகை தர உள்ளது. இதைத் தொடா்ந்து, 13 - 17 ஜனவரி 2020 தினங்களில் நடைபெற உள்ள கூட்டுப் பயிற்சியில் இந்திய, ஜப்பான் கடலோரக் காவல் படையினா் பங்கேற்க உள்ளனா்.
சர்வதேச நிகழ்வுகள்
- சீனாவின் பாரம்பரிய எலி ஆண்டைக் கொண்டாடும் வகையில், சீன சந்திர நாள்காட்டி தொகுதியைச் சேர்ந்த எலி ஆண்டுக்கான சிறப்பு நினைவு அஞ்சல் தலை தொகுப்பை ஐ.நா.வின் அஞ்சல் நிர்வாகம் ஜனவரி 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
- அராபிய நாடுகளில், அதிக காலம் ஆட்சி நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவரும், 1970ம் ஆண்டு முதல் ஓமன் சுல்தானாக ஆட்சி நடத்தி வந்த குவாபூஸ் பின் சையத் தனது 79வது வயதில் காலமானார்.
- ”ஃபாஸ்ட் தொலைநோக்கி” : உலகளவில் மிகப் பெரிய மற்றும் கூருணர்வுமிக்க வானொலி தொலைநோக்கியான, சீனாவின், ஃபாஸ்ட் எனப்படும் 500 மீட்டர் விட்டமுடைய கோள வடிவிலான தொலைநோக்கி 11-1-2020 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
- தைவானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் சாய் இங்-வென் வெற்றி பெற்றுள்ளாா்.
- வரலாற்று சிறப்பு மிக்க ”பிரக்ஸிட் மசோதா” இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) 9-1-2020 அன்று நிறைவேறியது. இந்த மசோதாவானது மேல் சபையிலும் நிறைவேறும் பட்சத்தில் 31-01-2020 க்குள் இங்கிலாந்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளது.
பின்னணி :
- ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது (“பிரெக்ஸிட்“) தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும் பாலான மக்கள் வெளியேறுதலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- ஆனால் பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் பல முறை நிராகரித்தது. இதனால் அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- ராஜா ஜான் வூா்புதூா் சாரி : விண்வெளிப் பயணத்துக்கான அடிப்படைப் பயிற்சிகளை நிறைவுசெய்து, இந்திய-அமெரிக்கரான ராஜா ஜான் வூா்புதூா் சாரி (41), அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (நாசா) விண்வெளி வீரா்கள் பட்டியலில் இணைந்துள்ளாா்.
நியமனங்கள்
- IUPAC(International Union of Pure and Applied Chemistry) அமைப்பின் உறுப்பினராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பிபுல் பிகாரி சாஹா (Dr.Bipul Bihari Saha) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கூ.தக. : 1919 ல் தொடங்கப்பட்ட IUPAC(International Union of Pure and Applied Chemistry) அமைப்பின் தலைமையிடம் அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக சீனாவைச் சேர்ந்த கி-ஃபெங்-சோ (Qi-Feng Zhou) உள்ளார்.
விளையாட்டு
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ‘2019 ஆம் ஆண்டின், உலகின், சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனை விருது 2019’ (World Games Athlete of the Year”award, 2019) இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன், ஹரியானாவைச் சேர்ந்த, ராணி ராம்பாலுக்கு (Rani Rampal ) வழங்கப்பட்டுள்ளது.
- கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2020 ஒரு பகுதியாக
- 21 வயதுக்குட்பட்டோா் ஆண்களுக்கான தடகளத்தில் 5000 மீ. ஓட்டத்தில் குஜராத் வீரா் அஜித்குமாா் யாதவ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
- மகளிா் 5000 மீ ஓட்டத்தில் உத்தரகாண்டின் அங்கிதா தங்கம் வென்றார்.
- 17 வயது ஆடவா் 3000 மீ. பிரிவில் ம.பி வீரா் அா்ஜுன், ககன் தங்கம் வென்றார்.
- 17 வயது மகளிா் பிரிவில் ஜாா்க்கண்டின் சுப்ரிதி தங்கம் வென்றார்.
- 17 வயது மகளிா் நீளம் தாண்டுதலில் தெலங்கானாவின் நந்தினி அகஸ்ரா தங்கம் வென்றாா்.
- ஜிம்னாஸ்டிக்ஸ்: 17 வயது மகளிா் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்சிங் பீம், வால்ட், பிரிவில் திரிபுராவின் பிரியங்கா தாஸ்குப்தா தங்கம் வென்றாா்.
- கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா-வெஸ்லி கூல்ஹாப் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சீனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.