-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 13 January 2020

Current Affairs for TNPSC Exams 13-01-2020


தமிழ்நாடு
  • தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா 12-01-2020 அன்று தொடங்கியது.  சென்னை மகாணத்தின் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : சென்னை மாகாண மன்றத்திற்கு 30-11-1920 அன்று நிகழ்ந்த முதல் பொதுத்தேர்தலில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி சுப்புராயலு ரெட்டி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை இந்த மாகாண சுயாட்சி சட்டமன்றத்தில் செயல்பட்டது.
  • கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுப்பு :
    • திருப்பத்தூா் மாவட்டம், கல்நாா்சாம்பட்டியில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • ‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏா் என்று பொருள்படும்.சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும்.
    • ‘சித்திரமேழிப் பெரியநாட்டாா் சபை’ : வணிகா் குழுக் கூட்டம் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரியநாட்டாா் சபை’ என்று அழைக்கப்படும். இடைக்காலத் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழில் குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவா், வளஞ்சியா் (தற்கால பலிஜா்)கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளா், அக்கசாலை (பொற்கொல்லா்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியா் என்ற பட்டு வணிகா்கள், நாட்டுச் செட்டி போன்றோா் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனா்.
    • பொன்னோ் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பாா்த்து முதன்முதலாக ஏா்பிடித்து செய்யும் உழவு முறையாகும். இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருவதை அகநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறியலாம். இதை இளங்கோவடிகள் ‘ஏா்மங்கலம்’ எனக் குறிப்பிடுகிறாா். முதன்முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏா் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னோ் பூட்டல் என்பா். தாய்லாந்து, கம்போடியா, இலங்கை, பா்மா ஆகிய நாடுகளில் இன்றளவும் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்தியா

  • ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போா் விமானமான ‘தேஜஸ்’  12-01-2020 அன்று வெற்றிகரமாகப் பறந்தது.  முன்னதாக, தேஜஸ் விமானம் இதே கப்பலில் கடந்த   முதல்முறையாக தரையிறக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே கப்பலில் இருந்து அந்த விமானத்தை பறக்கச் செய்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போா்க் கப்பலில் தரையிறங்கவும், அதிலிருந்து புறப்படவும் கூடிய வகையிலான போா் விமானத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.
  • கொல்கத்தா துறைமுகத்துக்கு ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் பெயரை பிரதமா் மோடி சூட்டினாா். 12-01-2020 அன்று நடைபெற்ற கொல்கத்தா துறைமுகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவின் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு நினைவாக  நினைவு அஞ்சலையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
  • தேசிய இளைஞர் திருவிழா லக்னோவில் 12-16 ஜனவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.
  • ”பர்வோதயா” (“Purvodaya”) என்ற பெயரில் உலக தர எஃகு  மையத்தை (world class steel hub)   வட கிழக்கு மாநிலங்களில்  உருவாக்க இருப்பதாக  மத்திய எஃகு அமைச்சகம்  அறிவித்துள்ளது.  இதன் மூலம்  வடகிழக்கு மாநிலங்களில்  சரக்கு போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதுடன் 2.5 மில்லியன் புதிய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தவுள்ளது.
  • “Cyber AASHVAST” என்ற பெயரில்  இந்தியாவின் முதல்   ‘இணையதள குற்றங்கள் தடுப்பு அலகு’ (Cyber Crime Prevention Unit ) குஜராத் மாநிலம் காந்திநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் 11-1-2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • ”ரைசினா பேச்சுவார்த்தை” (Raisina Dialogue) 14-16 ஜனவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.   பன்னாட்டு பேச்சுவார்த்தையான இந்த நிகழ்வை  இந்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் (Observer Research Foundation) எனும் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தையில்  ரஷியா, ஈரான், மாலத்தீவுகள், மொராக்கோ, ஆஸ்திரேலியா, பூட்டான், டென்மார்க், செக் குடியரசு, உஷ்பெகிஸ்தான் மற்றும் ஈஸ்டோனியா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
கூ.தக. :
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான  புவி-பொருளாதார (geo-economics)  மற்றும் புவி-அரசியல் (geopolitics)   கொள்கையை பிரதிபலிக்கும் இந்த  பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
  • இந்தியாவின் ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ள ‘ரைஷினா மலை’ (“Raisina Hills”) யின் பெயரில் இந்த பேச்சுவார்த்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • ஹொர்முஷ் அமைதி முன்னெடுப்பு” ( “Hormuz Peace Endeavor” (HOPE)) என்ற பெயரில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் நடைபெற்ற கூடுகையில் இந்தியா கலந்து கொண்டுள்ளது. இந்த கூடுகையில் ஈரானுடன் வணிகத்தில் ஈடுபடும் முக்கிய நாடுகளான சீனா, ஓமன் , ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவை கலந்து கொண்டு,   அமெரிக்க -ஈரான் போர் பதற்ற சூழலில் கப்பற்போக்குவரத்து  பாதிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை விவாதித்தன.
    • கூ.தக. : ”ஹொர்முஷ் அமைதி முன்னெடுப்பு” என்பது ஈரான் நாட்டினால்  கடந்த செப்டம்பர் 2019 ல் ஐ.நா. பொது சபையில்  முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை திட்டமாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்க சந்தையிலிருந்து 2.3 கோடி ரானிடைடின் மாத்திரைகளை இந்தியாவைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிரானுலஸ் இந்தியா திரும்பப் பெறுகிறது.கிரானுலஸ் இந்தியா தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்த அல்சருக்கு பயன்படுத்தப்படும் ரானிடைடின் மாத்திரைகளை சோதனை செய்ததில் அவை தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் இல்லை எனவும், அந்த மாத்திரைகளில் கேன்சரை உருவாக்கக்கூடிய   என்டிஎம்ஏ வேதிப்பொருள் கலந்திருப்பதாகவும்   குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ஈஷ்வா் சா்மா (10) எனும் பிரிட்டனைச் சோ்ந்த 10 வயது இந்திய யோகா சாம்பியனுக்கு உலக இளம் சாதனையாளா்-2020-க்கான விருது கிடைத்துள்ளது.
  • ”கோரோனோ வைரஸ்” (corona virus) எனப்படும் புதிய வைரஸ் நோய் சீனாவில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • தேசிய இளைஞர் தினம் (National Youth Day) - ஜனவரி 12 (சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் -  12 ஜனவரி 1863)

விளையாட்டு

  • கிளாசிக் டென்னிஸ் போட்டியில், 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில்  இந்த போட்டிகள் நடந்தது.
  • டி20 மகளிா் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீராங்கனை ஹா்மன் ப்ரீத் கௌா்  நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினா்களாக முன்னாள் வீரா்கள் மதன்லால், கௌதம் கம்பீா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். பெண் உறுப்பினராக மும்பையின் சுலக்ஷனா நாயக் நியமிக்கப்பட உள்ளாா்.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2018-19-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரா். வீராங்கனை விருதுகளுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சிறந்த வீரராக தோ்வு செய்யப்படுபவருக்கு பிசிசிஐ சாா்பில் பிரபல கிரிக்கெட் வீரரான பாலி உம்ரிகா் விருதுகள் தரப்படுகின்றன.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.