-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 14 January 2020

Current Affairs for TNPSC  Exams 14-01-2020

தமிழகம்

  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
  • அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் 13-01-2020 அன்று தொடங்கி வைத்தார். கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்தியா

  • நீதிபதி விப்லப் குமார் சா்மா தலைமையில், அஸ்ஸாம் பூா்வகுடிகளுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் வழங்குவது தொடா்பாக அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவினா் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 13-01-2020 அன்று சந்தித்தனர். 
    • கூ.தக. : அஸ்ஸாம் பூா்வகுடிகளுக்கு அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் என்று கடந்த 1985-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கும் அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துக்கும் இடையே கையெழுத்தான ‘அஸ்ஸாம் ஒப்பந்தத்தில்’ குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடா்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி விப்லப் குமார் சா்மா தலைமையிலான உயா்நிலைக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. 
  • இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டுக்குள் 30,000 கோடி டாலரை (ரூ.21 லட்சம் கோடி) தொடும் என்று தேசிய முதலீட்டு மேம்பாட்டு அமைப்பான இன்வெஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது.
  • ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை உத்தரகண்ட் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 - 6000 வரை பென்ஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 
    • கூ.தக. : ஆசிட் வீச்குக்கு ஆளான பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு   ”சபாக்” என்ற திரைப்படம்  எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 15-01-2020 முதல் ‘பாஸ்டேக்’ முறை முழு அளவில் அமலுக்கு வருகிறது. அதன்படி, பாஸ்டேக் என்ற தானியங்கி சுங்கக் கட்டணம் செலுத்தும் ஸ்டிக்கர்களை (டேக்) வாகனங்களின் முன்பகுதியில் ஒட்ட வேண்டும். இதனால் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் வாகனம், வரிசையில் நிற்காமல், அதற்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் வழியில் செல்லலாம்.
  • 8-வது அதிசயமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை : எஸ்.சி. ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தனது உலக அதிசய பட்டியலில் படேல் சிலையை 8-வது அதிசயமாக இணைந்துள்ளது.   
    • கூ.தக. :  குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி (182 மீ) உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இச்சிலை ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படுகிறது.
  • ”யாஷாஷ்வினி திட்டம்” (‘Yashaswini scheme’) என்ற பெயரில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 இலட்சம் வட்டியில்லா கடன் (5 ஆண்டு காலத்திற்கு) வழங்கும் திட்டத்தை  கோவா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • AASHVAST (Assured Assistance Service Helpline for Victims at Shortest Time ) எனும் இந்தியாவின் முதல் இணையதள குற்றங்கள் தடுப்பு அலகினையும், VISHWAS (Video Integration and State Wide Advanced Security) எனும்  இணையதள குற்றங்களில் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கான உதவி எண்ணையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 12-1-2020 அன்று தொடங்கி வைத்தார். 
  • ’அன்னி பெசண்ட்’ ( Annie Besant)  மற்றும் ‘அம்ரித் கவுர்’ (Amrit Kaur)  எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்திய கடலோரக் காவல் கப்பல்கள (Indian Coast Guard Ships (ICGS)) கல்கத்தாவில் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளன. இவை , இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குக் கடற்கரைப் பிரிவில் பணியாற்றவுள்ளன.  இந்த கப்பல்களை கல்கத்தாவிலுள்ள Garden Reach Shipbuilders and Engineers Ltd., (GRSE) நிறுவனம் தயரித்துள்ளது. 
  • ”லோக்ரி” (Lohri) என்ற பெயரிலான அறுவடைத் திருவிழா ஜனவரி 13 அன்று வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தில்லி, ஜம்மு மற்றும் சட்டிஷ்கார் மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. 

வெளி நாட்டு உறவுகள்

  • ‘சாஹியோக்-கைஜின்’ என்ற பெயரில் இந்தியா -  ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படை கூட்டு பயிற்சி 16-17 ஜனவரி 2020 தினங்களில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக   ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் ’எச்சிகோ’சென்னைக்கு வந்துள்ளது. 

சர்வதேச நிகழ்வுகள்

  • ”மால்டா” (Malta) நாட்டின் பிரதமராக ராபர்ட் ஆபலா (Robert Abela) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • தைவான் நாட்டின் அதிபர் தேர்தலில் ‘ஷாய் -இங் -வென்’ (Tsai Ing-Wen) வெற்றி பெற்றுள்ளார். 
  • ஓமன் நாட்டின் புதிய ஆட்சியாளராக  ஹைதம் பின் தாரிக் அல் சையத் (Haitham bin Tariq Al Said )  11-1-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய தினங்கள்

  • 31 வது, சாலை பாதுகாப்பு வாரம் (Road Safety Week) 11 - 17 ஜனவரி  2020 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது. 

நியமனங்கள்

  • மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் (சிஆா்பிஎஃப்) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.மகேஷ்வரியை மத்திய பணியாளா் அமைச்சகம் 13-01-2020 அன்று நியமித்துள்ளது.

விளையாட்டு

  • சிட்னியில் நடைபெற்ற ஏடிபி கோப்பை அறிமுக போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சொ்பியா.
  • சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் அணி பட்டம் வென்றது.

புத்தகங்கள்

  • ‘PAX SINICA:Implications for the Indian Dawn’  என்ற புத்தகத்தின் ஆசிரியர்  - சமிர் சரண் மற்றும் அகில் டியோ 
------------------------------------------------- 
TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
STARTS FROM 15-01-2020
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.