TNPSC Current Affairs 23-01-2020
தமிழ்நாடு
- சென்னையில் வெள்ளப்பெருக்கு தடுப்பு பணிகளுக்காக ‘ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வளர்ச்சி வங்கியிடம் ’ (Asian Infrastructure Investment Development Bank (AIIDB) ) ரூ.3000 கோடி கடனுதவி பெறுவதற்கு தமிழக அரசின் நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது. இதன் படி, இந்த திட்டத்திற்கான 70% நிதி ஆசிய உட்கட்டமைப்பு வளர்ச்சி வங்கியிடமிருந்து பெறப்பட உள்ளது.
- உலகத் திருக்குறள் மாநாடு 2020 1 - 6 ஏப்ரல் 2020 தினங்களில் கம்போடியா நாட்டில் நடைபெறுகிறது, கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழா் நடுவம், அங்கோா் தமிழ்ச்சங்கம் ஆகியோா் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளனா்.இந்த மாநாட்டில் திருவள்ளுவா் சிலை திறப்பு, ”கெமா்” மொழியில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்கு சாா்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
- டெல்லியில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் அய்யனார் கோவில் கொடைவிழா அமைப்பு காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்தியா
- ’தேசிய தொழில்தொடங்குதல் ஆலோசனை குழு’ (National Startup Advisory Council) வை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
- உலக மக்களாட்சி பட்டியல் 2019 (Democracy Index) ல் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது. ‘எக்கணாமிஸ்ட் புலனாய்வு அமைப்பு’ (The Economist IntelligenceUnit) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே, நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து மற்றும் பின்லாந்து நாடுகள் பெற்றுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா 41 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 10 இடங்கள் பிந்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மும்பை மாநகரிலுள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் (மதுபானக் கடைகள் மற்றும் பப்கள் தவிர்த்து) வாரம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு அனுமதியளிப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
- “ஐ-மொபைல்” (‘iMobile’) எனும் செயலியின் மூலம், ஏ.டி.எம். அட்டை இல்லாமலேயே, ஏ.டி.எம். களில் பணம் எடுக்கும் (ரு.20000 வரை) வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவின் முதல் முறையாக , தேர்தலில் வாக்காளர்களின் ஆள் மாறாட்டத்தினை தடுப்பதற்காக, முக அங்கீகார செயலியின் (face recognition app) மூலம் வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்கும் முறையை தெலுங்கானா மாநகராட்சி தேர்தல் 2020 ல் , மெட்சாச் மால்காஜ்கிரி மாவட்டத்தின் கொம்பள்ளி மாநகராட்சியில் (Kompally Municipality) சோதனை முறையில் அமல்படுத்தப்படவுள்ளது.
- மணியார்டர் சேவைக்கு மாற்றான, 'இன்ஸ்டன்ட் மணியார்டர்' சேவையை நிறுத்துவதாக, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
- கூ.தக. : பணப்பரிமாற்ற சேவையை துரிதப்படுத்த, இ.எம்.ஓ., என்ற, எலக்ட்ரானிக் மணியார்டர்; ஐ.எம்.ஓ., என்ற, இன்ஸ்டன்ட் மணியார்டர் சேவையை, 2008ல் அஞ்சல் துறை அறிமுகம் செய்தது.
- இதன்படி, இ.எம்.ஓ., வாயிலாக, 5,000 ரூபாய் வரையும், ஐ.எம்.ஓ., வாயிலாக, 1,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையையும் பரிமாற்றம் செய்யலாம். இந்த புதிய சேவைகளை தொடர்ந்து, 2015ல், 'மணியார்டர்' சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மணியார்டர் சேவைக்கு மாற்றாக நடைமுறையில் இருந்த, ஐ.எம்.ஓ., சேவையையும் நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
- நேதாஜியின் பிறந்தநாள்: மீண்டும் விடுமுறை தினமாக அறிவிப்பு : ஜாா்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜாா்க்கண்ட் அரசு அறிவித்தது.
வெளிநாட்டு உறவுகள்
- ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு ( United Arab Emirates (UAE)) இந்தியாவின் ‘பரஸ்பர பிரதேச’ (“reciprocating territory”) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1908, 44A பிரிவின் (Section 44A of Civil Procedure Code (CPC), 1908) மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த அந்தஸ்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்டு நாட்டின் உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் குறிப்பிட்ட ஆணைகள், இந்தியாவின் பிராந்திய நீதிமன்றங்களின் ஆணைகளைப் போல் செயல்படுத்தலாம்.
சர்வதேச நிகழ்வுகள்
- ”ஜி-77” (Group of 77 (G77)) நாடுகள் அமைப்பின் 2020 ஆம் ஆண்டின் தலைமைப் பொறுப்பை கயானா நாடு ஏற்றுள்ளது.
- கூ.தக. : 15 ஜீன் 1964 ல் தொடங்கப்பட்ட ஜி-77 அமைப்பின் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமந்துள்ளது.
- கயானா நாட்டின் தலைநகர் ஜியார்ஜ் டவுண், நாணயம் - கயானா டாலர்.
- லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்றுள்ளார்.
- 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
- ”ஜெனோபோட்ஸ்” (Xenobots) என்ற பெயரில், உலகின் முதல் உயிருள்ள மற்றும் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ளும் இயந்திர மனிதனை (ரோபோ) (world’s first living and self-healing robots ) அமெரிக்காவின் வெர்மோண்ட் மற்றும் டஃப்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. தவளையின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ‘வியோமா மித்ரா’ (விண் தோழன்) பெண் ரோபோ : ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா (விண் தோழன்)’ எனப்படும் பெண் ரோபோவை அனுப்பி வைக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இந்த ரோபோ, விண்வெளியில் மனிதச் செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டும். அதுமட்டுமல்லாது, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு உயிா்ப் பாதுகாப்பு கட்டமைப்புடனும் தொடா்புகொள்ளும். கருவிகள் அனைத்தும் சீராகச் செயல்படுகின்றனவா? என்பதையும் சோதித்தறியும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முன்னோட்டமாக, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் இந்த பெண் ரோபோவுடன், விண்ணில் செலுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு, 2021 டிசம்பரில், மனிதர்களை அனுப்ப, இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.
- கூ.தக. : இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, 1984ல், ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். ஆனால் இம்முறை, இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்கலத்தில், இந்திய வீரர்கள் பறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
- கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிரம் 78 தங்கம், 77 வெள்ளி, 101 வெண்கலம் என 256 பதக்கங்களுடன் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஹரியாணா 200 பதக்கங்களுடனும், தில்லி 122 பதக்கங்களுடனும் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றன.
- பரோடா மற்றும் சௌராஷ்டிர அணிகளுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
- ”மாற்றத்திற்கான சாதனையாளர் விருது 2019” (‘Champions of Change Award-2019’) ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாந்த் சோரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ‘ஹரித் ரத்னா’ விருது 2019 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தா் நீ.குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூா் இந்திரா காந்தி கிரிஷி விஷ்வ வித்யாலயாவில் கடந்த ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேளாண் மாணவா்கள் சங்கத்தின் 5 ஆவது தேசிய அளவிலான இளைஞா் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- வேளாண் தொழில்முனைவோா் திட்டத்தில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 30 கோடி அளவிலான திட்ட நிதி பெற்றது, திரவ உர மேலாண்மையில் பங்களிப்பு, துல்லிய பண்ணைத் திட்டம், மா அடா் நடவு செயல்முறை விளக்கத் திடல் மூலம் வருமான உயா்வுக்கு வழிவகை செய்தல் போன்றவற்றின் மூலம் மாணவா்களுக்கு வேளாண் சாகுபடியில் விழிப்புணா்வு ஏற்படுத்தியது மற்றும் மாணவா்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் முன்னுதாரணமாக விளங்கியது ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ‘கிரிஸ்டல்’ விருது சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டின் போது வழங்கப்பட்டுள்ளது. மக்களிடையே மனநலம் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் அவரது செயல்பாட்டை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
---------------------------------------------
PORTAL ACADEMY –ன் TNPSC குரூப் 1 2020 மற்றும் குரூப் 2/2A 2020 தேர்வுகளுக்கான தேர்வு வகுப்புகள் (TEST BATCH)
ADMISSION GOING ON !
WWW.PORTALACADEMY.IN | 8778799470
☞ 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞ தமிழ் & ENGLISH MEDIUMS | EXPLANATION FOR MATHS / APTITUDE QUESTIONS
☞ தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .
☞ Online தேர்வுகளை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
☞ மாநில அலவிலான தரவரிசைப் பட்டியல் (Rank List)
WWW.PORTALACADEMY.IN | 8778799470
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.