‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் (‘One Nation, One Ration Card’ ) கீழ், தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்க அனுமதி அளித்து தமிழக அரசு 23-1-2020 அன்று அரசாணை வெளியிட்டது. இந்த திட்டமானது, முதற்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
‘கலர்ஸ்’ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும், நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியில் முதல்முறையாக வாய் பேச முடியாத, காது கேளாத மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணான கௌசல்யா கார்த்திகா ஒருவர் ரூ.1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
”ரோபோசெஃப்” : தானியங்கி முறையில் 800 வகையான உணவுகளைத் தயாரிக்கும் வகையில் ரோபோசெஃப் என்ற தானியங்கி இயந்திரம் சரவண சுந்தரமூா்த்தி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பால்பாயாசம் முதல் பிரியாணி வரை சைவம், அசைவம் என 800 வகையான உணவுகள் தயாரிக்கலாம். தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு பிரத்யேக செயலி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் உள்ள கணினி மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ இந்த இயந்திரத்தை இயக்கலாம்.
சென்னை தரமணியில் டிட்கோ மற்றும் டி.எல்.எப் நிறுவனம் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான (டவுன் டவுன்) வளாகம் அமைக் கப்படுகிறது. இதற்கான அடிக்கல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 23-01-2020 அன்று நாட்டப்பட்டது.
இந்தியா
”ஸ்காச் மாநில ஆளுகை பட்டியல் 2019’ (‘SKOCH State of Governance 2019’) ல் ஒட்டுமொத்த பிரிவுகளில் , முதல் ஐந்து இடங்களில் முறையே குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. இப்பட்டியலில் நிதி ஆளுமை மற்றும் ஊர்ப்புற வளர்ச்சி பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
'ஊழல் கண்ணோட்ட பட்டியல் 2019’ (Corruption Perceptions Index 2019) ல் இந்தியா 80 வது இடத்தைப் பெற்றுள்ளது. Transparency International அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முந்தைய ஆண்டில் (2018) ல் இந்தியா 78 வது இடத்தில் இருந்தது. இந்த பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமைதோறும் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையை மாணவா்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
எதிரி சொத்துகளை விற்பனை செய்ய மேற்பாா்வைக் குழு : நாடு முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட எதிரி சொத்துகளை விற்பனை செய்வதை கண்காணிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், எதிரி சொத்துகளை விற்பனை செய்வதற்காக, மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா தலைமையில் ஒரு குழுவும், உள்துறைச் செயலா் அஜய் பல்லா தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளன.
இந்திய ரயில்வேயின் முதல் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஆலை, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் பாலிகிராக்' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளை, திரவ எரிபொருள், எரிவாயு, கார்பன் மற்றும் நீர் போன்ற ஆற்றல்களாக மாற்ற முடியும்.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் மிகவும் காற்று மாசுபாடுள்ள நகரம் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாரியா (Jharia) என கிரீன்ஃபீஸ் இந்தியா (Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள தேசிய காற்றுத் தர கண்காணிப்பு திட்டத்தின் (National Ambient Air Quality Monitoring Programme) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமந்திரி கிரிஷாக் துர்காத்னா கல்யாண் யோஜனா” (‘Mukhyamantri Krishak Durghatna Kalyan Yojana’ ) என்ற பெயரில் விவசாயிகளுக்கான இலவச ஆயுள்காப்பீடு திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 21-1-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மரணமடையும் விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ. 5 இலட்சமும், வேலையின் போது , 60 % க்கும் அதிகமான ஊனமடையும் விவசாயிகளுக்கு ரூ.2 இலட்சமும் வழங்கப்படுகிறது.
”போல்நெட்” (POLNET 2.0) என்ற பெயரில் நாடுமுழுவதுமுள்ள காவல்துறையினருக்கான தகவல் தொடர்வு சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. செயற்கைக் கோள் தகவல் தொடர்வை அடிப்படையாகக் கொண்ட ‘போல்நெட்’ டின் மூலம் ஒலி, ஒளி மற்றும் டேட்டா தகவல்களை நாடு முழுவதும் பகிர முடியும் . குறிப்பாக இந்த புதிய வசதியானது பேரிடர் மீட்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த போல்நெட்’ திட்டமானது ‘போலிஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககம்’ (Directorate of Coordination Police Wireless (DCPW)) மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கடலோர காவல் படையின் அணிவகுப்பை முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா வழிநடத்தி செல்லவுள்ளார்.
இந்தியாவில் ‘யு.பி.ஐ’ (UPI (Unified Payments Interface)) எனப்படும் ஒருங்கமைக்கப்பட்ட பணச்செலுத்தும் சேவையை அறிமுகம் செய்துள்ள முதல் தொலைதொடர்பு நிறுவனம் எனும் பெருமையை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் பெற்றுள்ளது.
உலக திறன் போட்டி பட்டியல் 2020 (Global Talent Competitiveness Index 2020) ல் இந்தியா 72 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
வெளிநாட்டு உறவுகள்
இந்தியாவின் சார்பில் ‘மகாத்மா காந்தி மாநாட்டு மையம்’ (Mahatma Gandhi Convention Centre) மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் 21-1-2020 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் நைஜீரிய அதிபர் மகமது இஷோஃபாவு (Mahamadou Issoufau) ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஷ்கார் (Subhash Chandra Bose Aapda Pra bandhan Puraskar) என்ற பெயரிலான பேரிடர் மேலாண்மைக்கான தேசிய விருது முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி K.M. சிங் -கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை உத்தர்காண்டில் அமைந்துள்ள பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை நிறுவனம் (Disaster Mitigation and Management Centre) வழங்கியுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் : சீனாவை மிரட்டும் உயிர்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் சீனாவின் உவான் நகரின் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவியது என கண்டறியப்பட்டு உள்ளது.
காஸ்னவி அணு ஏவுகணை சோதனை : பாகிஸ்தான், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்த காஸ்னவி அணு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அணுகுண்டுகளுடன், 290 கி.மீ. தொலைவு வரையில் சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும்.
லெபனான் நாட்டின் பிரதமராக ‘ஹாஷன் தியாப்’ (Hassan Diab) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரேக்க நாட்டின் முதல் பெண் அதிபராக காத்தரினா சாகெல்லரொபோலோ (Katerina Sakellaropoulou) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
தேசிய பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123வது பிறந்ததினம் - ஜனவரி 23 ( 23 January 1897)
புத்தகங்கள்
”Where Kindness Spoke” (புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பற்றியது) என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஷிவானி அரோரா
Balwa (Diamond Books) என்ற புத்தகத்தின் (நாவலின்) ஆசிரியர் - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்
“The Story of Yoga: From India to the Contemporary World” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அலிஸ்டையர் சியரெர் (Alistair Shearer)
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.