-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 30 January 2020

தமிழ்நாடு

  • சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்கள் காலை உணவுத் திட்டத்துக்கு தனது விருப்ப நிதித் தொகுப்பில் இருந்து ரூ.2 கோடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா்.
    • ”அட்சய பாத்திரம்” எனும் அறக்கட்டளை மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு காலை உணவை அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1 பிப்ரவரி 2020 முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

இந்தியா

  • உலகின் மிகப்பெரிய தியான மையம் ஸ்ரீ ராம் சந்திர மிஷன் (Shri Ram Chandra Mission) அமைப்பினால்  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள  கான் ஷாந்தி வனத்தில் (Kanha Shanti Vanam) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில்  ஒரு இலட்சம் பேர் தியானத்தில் ஈடுபடலாம்.
  • ’ஆப்பிரிக்க சிறுத்தையை’ (African cheetah) இந்திய காடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • ’புவன் பஞ்சாயத் 3.0’ ( Bhuvan Panchayat V 3.0 web portal) எனும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கான செயற்கைக் கோள் உதவியுடன் மின்னாளுமை இணையதள சேவையின் மூன்றாவது திருத்தியமைக்கப்பட்ட வடிவம்  28-1-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.   ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையத்தினா (National Remote Sensing Center (NRSC)) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புவன் பஞ்சாயத்  இணையதளமானது   இந்தியாவிலுள்ள 2.56 இலட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்தியாவில் புதிதாக மேலும் 10 சதுப்புநிலப் பகுதிகள்   ‘ராம்சார் தலங்களாக’ (Ramsar sites) அறிவிக்கப்பட்டுள்ளன.  இத்துடன் இந்தியாவில் தற்போது காணப்படும் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : ராம்சார் மாநாடு (Ramsar convention)  பற்றி ...
  • உலகிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் மூலம்   ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 2-2-1971 அன்று  சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் தீர்மானங்கள் 1975 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தன.
  • 1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை 29-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    • பின்னணி : ஹோமியோபதிக்கான மத்தியப் பதிவையும், இதுதொடர்பான விஷயங்களையும் பராமரிக்க, ஹோமியோபதிக்கான கல்வி மற்றும் நடைமுறையை முறைப்படுத்த, ஹோமியோபதிக்கான மத்தியக் கவுன்சிலை அமைக்க, ஹோமியோபதி மத்தியக் கவுன்சில் (ஹெச்.சி.சி.) சட்டம் 1973 இயற்றப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 மாதிரியுடன் இந்த சட்டம் உள்ளது. விரிவான செயல்பாடுகள், அமைப்பு விதிகள், முறைப்படுத்தும் அதிகாரங்கள் ஆகியவை இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒத்தவையாக உள்ளன.
  • 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை 29-1-2020 அன்று ஒப்புதல் அளித்தது.
உத்தேச திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
  • 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோரில் இருவரின் கருத்து தேவை என்ற பிரிவு அறிமுகம்.
  • கருவின் கால உச்சவரம்பை சிறப்புப் பிரிவு மகளிருக்கு 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்துவது. சிறப்புப் பிரிவு மகளிர் என்பது மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த விதிகளில் வரையறுக்கப்படும்.
  • இந்தப் பிரிவில் பாலியல் வன்முறையில் பிழைத்தவர்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள், சிறுமியர் போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய இதர பெண்கள் அடங்குவர்.
  • மருத்துவ வாரியம் நோய் அறியும் சோதனைகள் மூலம் கண்டுபிடித்த அதிக அளவில் இயல்பு நிலை மாறிய கரு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகபட்ச கரு வயது பொருந்தாது. மருத்துவ வாரியத்தின் அமைப்பு, பணிகள், இதர விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் விதிகளில் நிர்ணயிக்கப்படும்.
  • கருக் கலைப்பு செய்த பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒரு நபரைத் தவிர வேறு எவருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.

வெளிநாட்டு உறவுகள்

  • ”ஆபரேஷன் வனில்லா” ( ‘Operation Vanilla’) என்ற பெயரில் ”அவா புயலினால்” ( Cyclone Ava ) பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் (Madagascar)  நாட்டிற்கு  உதவி வழங்குவதற்கான  ஆபரேஷனை இந்திய கடற்படை 28-1-2020 அன்று தொடங்கியுள்ளது.  இதற்காக, இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். அய்ராவட்’ (Indian Navy Ship(INS) Airavat) ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
    • கூ.தக. : மடகாஸ்கர் நாட்டைப் பற்றி. . .
    • தலைநகர் - அண்டனானாரிவோ ( Antananarivo ) 
    • நாணயம் - மலாகாஷி அரியர்ய் (Malagasy ariary )
    • அதிபர் - ஆண்ட்ரி நிரினா ராஜோயலினா ( Andry Nirina Rajoelina )
    • பிரதமர் - கிறிஸ்டியன் லூயிஸ் நிஷே ( Christian Louis Ntsay)
  • ’HMAS Toowoomba’ எனப்படும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக  மும்பையிலுள்ள இந்திய கடற்படை  நிலையத்திற்கு வருகை 29-1-2020 தந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கத்தார் நாட்டின் புதிய பிரதமராக ஷேக் காலித் பின் காலிஃபா பின் அப்துல்லாஷிஷ் அல் தானி (Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani)  நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • இந்திய செய்தித்தாள் தினம் (Indian Newspaper Day) - ஜனவரி 29
    • கூ.தக. : இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கீ’ஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ (James Augustus Hickey) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.  இப்பத்திரிகை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை  இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விருதுகள்

  • ” PEN  மக்களாட்சி கருத்தாக்கம் சார்ந்த ஊடகப் பணிக்கான கெளரி லங்கேஷ் விருது 2019-2020’ ( PEN  Gauri Lankesh Award for democratic idealism)   ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் யூசுஃப்  ஜமீல் -க்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  • சுற்றுசூழல் ஆரவலர்களுக்கான நோபல் பரிசு (Nobel Prize for Environment) என அழைக்கபடும் ‘டைலர் பரிசு’ (Tyler Prize)  2020 ,  இந்திய சுற்றுசூழல் ஆர்வலர் பவன் சுக்தேவ் (Pavan Sukhdev) (தற்போது ஐ.நா. சுற்றுழூல திட்டத்தின் (United Nations  Environment Programme (UNEP) ) நல்லெண்ண தூதுவராக உள்ளார்)  மற்றும் அமெரிக்க சுற்றுசூழல் பேராசிரியர் கிரெட்சன்  டெய்லி  (Gretchen C. Daily) ஆகியோருக்கு   வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

  • கொரோனா வைரஸ் பற்றி ..
    • ” 2019-novel coronavirus (2019-nCoV)” அல்லது ‘வூஹான் கொரோனோவைரஸ்’ ( Wuhan coronavirus) மத்திய சீன நகரமான வூஹானில் (ஹீபய் மகாணத்தின் ( Hubei province) தலைநகர்)  முதன் முதலில் கடந்த டிசம்பர் 2019 ஆம்  மாதம் கண்டறியப்பட்டது. வூஹானில் உள்ள கடல் உணவு மற்றும் உயிருள்ள விலங்கு சந்தையில் இருந்து இந்த வைரஸானது பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எந்த விலங்கிடமிருந்து பரவியுள்ளது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
    • கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
    • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
  • சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு முனகளின் படங்களை முதல்முறையாக   எடுப்பதற்காக  “The Solar Orbiter Spacecraft” எனும் புதிய விண்கலத்தினை அமெரிக்காவின் நாஷா (NASA (National Aeronautics & Space Administration))  மற்றும் ஐரோப்பிய யூனியனின் ESA (European Space Agency)  இணைந்து அனுப்பவுள்ளன.

புத்தகங்கள்

  • "The Assassination of  Mahatma Gandhi" என்ற பெயரில் மகாத்மா காந்தியடிகளின் படுகொலையைப் பற்றிய குறும்படத்தை திரைப்பட இயக்குநர் பாரத்பாலா என்பவர் தயாரித்து 30-1-2020 (காந்தியடிகளின் 72 வது நினைவு தினத்தன்று) வெளியிட்டுள்ளார்.
----------------------------------------------------------------

 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.