’இந்தியா சர்வதேச தோல் கண்காட்சி 2020’ (India International Leather Fair) 1-3 பிப்ரவரி 2020 தினங்களில் சென்னையில் நடைபெறுகிறது.
உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்ற பெயரை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது. 57 நாடுகளில் 416 நகரங்களில் டாம் டாம் டிராபிக் இன்டக்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் 30 நாடுகளில் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் தாய்லாந்து முதலிடத்திலும், இதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான், ஹாங்காங் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் தாக்குதல் : கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவிக்கு இந்தியாவில் முதல் முறையாக கரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூஹான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இவர், கரோனா வைரஸ் வூஹானில் தீவிரமாகப் பரவியதையடுத்து இந்தியா திரும்பியிருந்தாா்.
’நிதியறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கை 2020’ (“Transparency In Budgetary Process Report 2.0.”) ல் முதல் மூன்று மாநிலங்களை முறையே அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகியவைப் பெற்றுள்ளன. Transparency International’s India (TII) அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நிதி அயோக் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்களுக்கான ’நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியல் 2019-2020’ (Sustainable Development Goals (SDGs) Index for the year 2019-20) ல் 70 மதிப்பீடுகளுடன் முதலிடத்தை கேரளா மாநிலமும், 69 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், 67 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தை தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கூட்டாகவும் பெற்றுள்ளன. நான்காம் இடத்தை கர்நாடகா ( 66 ) மற்றும் ஐந்தாமிடத்தை கோவா (65) & சிக்கிம் (65) மாநிலங்க கூட்டாக பெற்றுள்ளன.
வெளிநாட்டு உறவுகள்
”சம்பிரிதி IX” (SAMPRITI-IX) என்ற பெயரில் இந்தியா மற்றும் வங்காள தேச நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி 3-16 பிப்ரவரி 2020 தினங்களில் மேகாலயாவிலுள்ள உம்ரோய் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து 31-1-2020 அன்று வெளியேறு கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வினால் கீழ்கண்ட மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
இங்கிலாந்து சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.
ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாடுகளில் இங்கிலாந்து பிரதமர் மற்றும் மந்திரிகள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இங்கிலாந்து பேச ஆரம்பிக்க முடியும்.
இங்கிலாந்து பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் மாறும்.
‘பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் (½ பவுண்ட்) (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46) இன்று புழக்கத்துக்கு வரும்.
நியமனங்கள்
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee) உறுப்பினராக ED ஜானக் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவானது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் செயல்படுகிறது. இக்குழுவில் தற்போதுள்ள உறுப்பினர்கள் வருமாறு, சேத்தன் கேட், பாமி டுவா, ஜானக் ராஜ், ரவிந்திரா H டோலகியா, பிபு பிரசாத் கன்னுங்கோ மர்றும் சக்தி காந்த தாஸ் .
முக்கிய தினங்கள்
மகாத்மா காந்தியடிகளின் 73-வது நினைவு தினம் 30 - 01 -2020 அன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது.
கூ.தக. : காந்தியடிகள் ஜனவரி 30, 1948 அன்றுதான் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) - ஜனவரி 30
கூ.தக. : ஹான்சென்னின் நோய் (Hansen’s disease) என அழைக்கப்படும் தொழுநோயானது ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ ( Mycobacterium leprae.) என்னும் பாக்டீரியாவினால் உருவாகிறது.
விருதுகள்
”ஆயுர் வேதா ரத்னா விருது 2020” (Ayurveda ratan award 2020) டாக்டர்.பிரதாப் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை 2019 விருதை (வோ்ல்ட் கேம்ஸ் அதலெட் ஆஃப் தி இயா்) இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. வோ்ல்ட் கேம்ஸ் கூட்டமைப்பு இவ்விருதை வழங்கியுள்ளது.
புத்தகங்கள்
”The Assassination of Mahatma Gandhi – Trial & Verdict 1948-49” என்ற பெயரில் மகாத்மா காந்தியடிகளின் படுகொலை மற்றும் அதனைத் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடர்பான புத்தகத்தை ‘தி இந்து’ ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.