Current Affairs for TNPSC Exams 3 January 2020
தமிழ்நாடு
- ஊராட்சித் தலைவரான 21 வயது பெண் : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.
- இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை எனும் பெருமையை நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற திருநங்கை ரியா (30) பெற்றுள்ளார்.
- தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளா் விருது : எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற்ற தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளா் விருதை பிரதமா் நரேந்திர மோடி 2-1-2019 அன்று வழங்கினாா்.
- தமிழக அரசின் சாா்பில் இந்த விருதை பிரதமா் நரேந்திர மோடியிடமிருந்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் பெற்றாா். வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்துக்கு 5-ஆவது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது.
- 2017- 18-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ உற்பத்தி திறனுடன் 382 லட்சம் டன் எண்ணெய் வித்துகளை தமிழகம் உற்பத்தி செய்தது. ஆனால், அகில இந்திய அளவில் உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு 1,284 ஆக உள்ளது குறிப்பிடத்தகக்து.
இந்தியா
- புது தில்லியிலுள்ள பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு (Pragati Maidan metro station) ‘உச்ச நீதிமன்ற மெட்ரோ இரயில் நிலையம்’ (Supreme Court metro station) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 14 வது ‘உலக சுகாதார கூடுகை 2021’ (Global healthcare summit in 2021) ஆந்திரப்பிரதேச மாநிலம் விஷாகப்பட்டிணத்தில் 3 ஜனவரி 2021 அன்று நடைபெறவுள்ளது.
- ’மணி’ மொபைல் செயலி ( “MANI” (Mobile Aided Note Identifier) ) என்ற பெயரில் பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான மொபைல் செயலியை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் 1-1-2020 அன்று வெளியிட்டார்.
- 107 வது இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress) 3 -17 ஜனவரி 2020 தினங்களில் ’அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் : ஊரக வளர்ச்சி’ (Science and Technology: Rural Development) எனும் மையக்கருத்துடன் பெங்களூருவில் நடைபெறுகிறது.
- 5 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் ஆராய்ச்சியாளர்கள் சோதனைக் கூடங்களை (DRDO Young Scientists Labs) பிரதமர் மோடி அவர்கள் 2-1-2020 அன்று பெங்களூருவில் தொடங்கி வைத்தார்.
- இந்த புதிய ஆய்வகங்கள் பெங்களூரு, மும்பை, சென்னை , கல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்படவுள்ளன.
- ஆங்கில புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
- 2020-ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஃபிஜி தீவுகளில் பிறந்தது. அதற்கடுத்த குழந்தை அமெரிக்காவில் பிறந்தது. புத்தாண்டு தினத்தில் உலகில் பிறந்துள்ள 3,92,078 குழந்தைகளில் 67,385 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன. அதையடுத்து சீனாவில் 46,299 குழந்தைகள் பிறந்துள்ளன. அதையடுத்து நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் பிறந்துள்ளன. உலகத்தில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் 8 நாடுகளில் மட்டும் பிறந்துள்ளனா்.
- ‘கிருஷி சம்மான்’ திட்டத்தில் ஒரே நாளில் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கும் திட்டத்தை 02-01-2019 அன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 02-01-2019 அன்று ஒரே நாளில் மட்டும் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது.
- 28-ஆவது ‘புது தில்லி உலகப் புத்தக திருவிழா -2020’ 4-12 ஜனவரி 2019 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.
சர்வதேச நிகழ்வுகள்
- உலகில் சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுவதில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.ஒரு நாளைக்கு, சராசரியாக 4 மணி நேரம் 11 நிமிடம் பயன்படுத்துகின்றனர் என 'குளோபல் வெப் இன்டெக்ஸ்' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகள்
- தேசிய சீனியா் வாலிபால்: 6 ஆண்டுகளுக்குப்பின் தமிழகம் சாம்பியன் : புவனேசுவரத்தில் நடைபெற்ற தேசிய சீனியா் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் 6 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.