- SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற பெயரில் பாரம்பரிய தொழிற்சாலைகள் மறுவாழ்விற்கான திட்டத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சகம் (Ministry of Ministry of Micro, Small and Medium Enterprises(MSME)) தொடங்கியுள்ளது. இதன் மூலம், கயிறு, கதர் மற்றும் கிராமப்புற தொழில்களுக்கான பாரம்பரிய தொழிற்சாலை மையங்கள் (traditional industries clusters) நாடுமுழுவதும் அமைக்கப்படவுள்ளன.
”கிராம் நியாயாலயாக்கள்” (‘Gram Nyayalayas’ ) எனப்படும் கிராமப் புற நடமாடும் நீதிமன்றங்களை நான்கு வாரங்களுக்குள் அமல்படுத்த மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.
- கூ.தக. : கிராமப்புற நடமாடும் நீதிமன்றங்கள், ‘கிராம் நியாயாலயா சட்டம் 2018’ ( Gram Nyayalayas Act,2008) மூலம் நாடெங்கிலும் ஏற்படுத்தப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அமைக்கப்பட வேண்டும் என இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ”ஜன் சேவகா திட்டம்” (Janasevaka Scheme) என்ற பெயரில் அரசு சேவைகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.
- 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் திரு நரேந்திர மோடி 05-02-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 5-8 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.
‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை ('Shri Ram Janma Bhoomi Tirtha Kshetra' trust) என்ற பெயரில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடுவதற்கான அறக்கட்டளையை அமைப்பதற்கான பிரதமர் மோடியின் யோசனைக்கு மத்திய அமைச்சரவை 5-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இதைத் தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
- அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளையும் சுயேச்சையான இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்.
- கோயில் அமையுவுள்ள 67 ஏக்கர் நிலமும் அறக்கட்டளைக்கு மாற்றப்படும்.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்ட (திருத்த) மசோதா, 2020-க்கு மத்திய அமைச்சரவை 5-2-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- தற்போதுள்ள 15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் எஞ்சிய 5 நிறுவனங்களை பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையுடன், பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரங்களுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்க மசோதா வகைசெய்யும்.
- 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டின் முந்தைய சட்டங்களில் திருத்தம் செய்வதற்காக இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்த மசோதா 2020 அறிமுகம் செய்யப்படுகிறது.
- பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையில், சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ராய்ச்சூர் ஆகிய 5 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்கப்படுவதுடன், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பொதுத் துறை – தனியார் கூட்டாண்மை) சட்டம் 2017-ன்கீழ் ஏற்கனவே இயங்கும் 15 நிறுவனங்களுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்று அறிவிக்கப்படும்.
- சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ராய்ச்சூரில் ஐஐஐடி-க்களை அமைப்பதே அங்கீகாரம் வழங்குவதன் நோக்கமாகும்.
- ’உலகப் பசி பட்டியல் 2019’ (Global Hunger Index 2019) ல் இந்தியா 102 வது இடத்திலுள்ளது. Concern World Wide எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா 103 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மத்தியப் பிரதேச அமைச்சரவையில் 5-2-2020 அன்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்வதற்காக, 5 ஏக்கா் நிலத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- ”டி.என்.சேஷன் இருக்கை” : தில்லியில் உள்ள இந்திய சா்வதேச ஜனநாயகம் மற்றும் தோ்தல் மேலாண்மை கழகத்தில் டி.என்.சேஷன் இருக்கை அமைக்கப்பட உள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.