-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 07 February 2020

தமிழ்நாடு

  • காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த விமான நிலையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட உள்ளது.
  • 2020-21-ம் ஆண்டில் கடன் வழங்க தமிழகத்துக்கு தேவையான நிதி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 629 கோடி என தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மதிப்பீடு செய்துள்ளது. இது 2019-20-ம் ஆண்டு மதிப்பீட்டை காட்டிலும் 25 சதவீதம் கூடுதல் ஆகும். இதில், விவசாயத் துறைக்கு வழங்கப்பட உள்ள கடன் 1 லட்சத்து 33 ஆயிரத்து 6 கோடி ரூபாயும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு வழங்கப்பட உள்ள 46 ஆயிரத்து 899 கோடி ரூபாயும் அடங்கும்.
  • ”ஃபோர்டு” நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ‘தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை’ (Ford’s technology and innovation centre)  ’எல்காட்’ (Electronics Corporation of Tamil Nadu (ELCOT)) நிறுவனத்தின்  சென்னை சோழிங்க நல்லூரில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (Special Economic Zone (SEZ) at Sholinganallur) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 6-2-2020 அன்று தொடங்கி வைத்தார். 

இந்தியா

  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்காக, ராமர் கோவில் அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மத்திய அரசு ரூ. 1 (ஒரு ரூபாய்) வழங்கியுள்ளது.
  • யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் இயக்குநர் ஜெனரல் (Director General) திருமதி. ஆட்ரே அசோலே (Audrey Azoulay) மூன்றுநாள் அலுவல் ரீதியான பயணமாக 6-2-2020 அன்று இந்தியா வந்துள்ளார்
  • இரண்டாவது, தேசிய நீதித்துறை சம்பள குழு (Second National Judicial Pay Commission) தனது அறிக்கையை உச்சநீதிமன்ற பதிவுத் துறையிடம் 29-01-2020 அன்று சமர்ப்பித்துள்ளது.
    • கூ.தக. : இரண்டாவது, தேசிய நீதித்துறை சம்பள குழு 11.2017 அன்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி   P.V. ரெட்டி (Justice P.V. Reddi,) அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 2வது இந்தியா சர்வதேச கடலுணவுக் கண்காட்சி 2020 (India International Seafood show 2020)  7-9 பிப்ரவரி 2020 தினங்களில்  கொச்சியில் நடைபெறுகிறது.
  • சர்வதேச அறிவுசார் சொத்துரிமை பட்டியல் 2020 (International Intellectual Property (IP) Index) ல் இந்தியா 40 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 36 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. S.(United States) Chamber of Commerce’s Global Innovation Policy Center (GIPC) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், முதல் ஐந்து இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய-ரஷிய ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை, ‘பிரிட்டிஷ் - ஆசிய அறக்கட்டளை’ ( British Asian Trust) மூலம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தொடங்கியுள்ளார்.  இந்த நிதியத்திற்கான புதிய நல்லெண்ண தூதராக அமெரிக்க பாடகி  கேட்டி பெர்ரி (Katy Perry) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 2‘பிரிட்டிஷ் - ஆசிய அறக்கட்டளை’ ( British Asian Trust) யை 2007 ஆம் ஆண்டில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தொடங்கினார்.

சர்வதேச நிகழ்வுகள்

  • உலக வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநர் (Chief Economist of the World Bank)  பினெலோபி கோஜியானோ கோல்ட்பெர்க் (Pinelopi Koujianou Goldberg) தனது பதவியை 6-2-2020 அன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

  • 2019-2020 ஆம் நிதியாண்டின் கடைசி நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ளது.  முக்கிய அம்சங்கள் வருமாறு,
    • Repo Rate - 5.15%
    • Reverse Repo Rate - 4.90%
    • Marginal standing facility (MSF) Rate - 5.40%
    • Bank Rate - 5.40%
    • Cash reserve Ratio (CRR) - 4%
    • Statutory Liquidity Ratio (SLR) - 18.25%
    • *நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும். இது, 2020 - -21ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக உயரும்
    • 'பொதுத் துறை வங்கிகளுக்கு, 'ரெப்போ' வட்டியில்,1-3 ஆண்டுகளில் திரும்பப் பெறும் ஒப்பந்தப்படி, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டம் 15 பிப்ரவரி 2020 ல்  அறிமுகப்படுத்தப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வங்கிகள் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும்.தற்போது, பொதுத் துறை வங்கிகளுக்கு, 'ரெப்போ' வட்டி விகிதத்தில், 1--15 நாட்களுக்கு குறுகிய கால கடன் மட்டுமே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
    • காய்கறிகள், பருப்பு விலையேற்றத்தால் உணவுப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு
    • நடப்பாண்டு ஜன., - மார்ச் வரை, சில்லரை பணவீக்கம், 6.5 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
    • நடுத்தர நிறுவனங்களின் வங்கிக் கடனுக்கு, நிதிச் சந்தையின் அடிப்படை வட்டி விகிதத்தை அளவுகோலாக்கும் முறை, வரும் 1 ஏப்ரல் 2020 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
    • பிப்ரவரி 2020 நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு, 33 லட்சத்து, 47 ஆயிரத்து, 224 கோடி ரூபாய்.
    • ஏப்ரல் 2019 - நவம்பர் 2019  வரை, நிகர அன்னிய நேரடி முதலீடு, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 440 கோடி ரூபாய். இது, 2018ல், இதே காலத்தில், 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 520 கோடி ரூபாயாக இருந்தது.
  • ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க, ‘ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம்’ என்ற பெயரில் குலுக்கல் முறையில் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டத்தின் மூலமாக ஜி.எஸ்.டி. வரியுடன் வாங்கும் ஒவ்வொரு பில்லும் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி பரிசை வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இது ஜி.எஸ்.டி. வரி செலுத்த அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமையும்.
    • கூ.தக. : கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி அமல்படுத்தப்பட்டது. நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி.யின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

விருதுகள்

  • ”தொழுநோய் ஒழிப்பிற்கான சர்வதேச காந்தி விருது 2020” (International Gandhi Awards for Leprosy) டாக்டர்.S. தர்மசக்து (N.S. Dharmashaktu ) விற்கு வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

  • அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையோடு பூமி திரும்பிய அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச்  கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் 6-2-2020 அன்று  தரை இறங்கினார்.  கடந்த   மார்ச் 14, 2019  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற இவர்,  சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328  நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கிறிஸ்டினா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார்.

-------------------------------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.