-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 08,09 February 2020

தமிழ்நாடு

  • கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது,
  • நாட்டில் முதல் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் ஆதாா் எண்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதாா்) துணை இயக்குநா் ஆா்.சந்தான கோபாலன் தெரிவித்துள்ளார்.
  • சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் 9-2-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
    • 3 பிரிவுகளாக அமைய உள்ள இப்பூங்காவின் முதல் பிரிவில் கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படவுள்ளது. நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை இந்த வளாகத்தில் அமைகின்றன.உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியின பிரிவுகள், நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்க பிரிவுகளை இந்த வளாகம் கொண்டிருக்கும்.
    • இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
    • 3வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன பூங்கா, தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
    • இதுதவிர மரபு திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.
  • சேலம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.இந்த மைதானம், 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 'சதிர் -- 10,000' என்ற பெயரில் ஒரே சமயத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் ஒன்று கூடி, நடனமாடி, 'கின்னஸ்' சாதனை படைத்த நிகழ்வை சென்னை, மேடவாக்கம் அடுத்த கவுரிவாக்கம், எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரியில்,  தமிழக சுற்றுலாத் துறை நடத்தியது. இதில், பள்ளி, கல்லுாரிகள், நடனப் பள்ளிகளில் உள்ள பரத நாட்டிய மாணவர்கள் பங்கேற்று நடனமாடினர்.
  • தமிழகம் முழுவதும் 8-2-2020 அன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 50 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.397 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.
    • தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களுக்கும் உத்தரவிட்டதன்படி, ஆண்டுதோறும் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இதில், காசோலை மோசடி வழக்கு, வங்கிக்கடன், தொழிலாளா் வழக்கு, மின்சாரம், குடிநீா் கட்டணம், ஜீவனாம்ச வழக்கு, விபத்து வழக்கு உள்ளிட்ட 21 வகையான வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.

இந்தியா

  • "குடும்பஸ்ரீ ஓட்டல்கள்" என்ற பெயரில் கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000 மலிவு விலை உணவகங்களை அமைக்க இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
  • நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ இரயில் திட்டம் எனும் பெருமையை 2 கி.மீ   தொலைவிலான  பாதையுடன், ஹைதராபாத் மெட்ரோ (Hyderabad Metro Rail ) திட்டம் பெற்றுள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோவாக  231 கி.மீ. தொலைவிலான பாதையுடன் தில்லி மெட்ரோ உள்ளது குறிப்பிடத்தக்கது.45.1   கி.மீ. தொலைவிலான பாதையுடன் சென்னை  மெட்ரோ மூன்றாவது இடத்திலுள்ளது.
  • இந்தியாவின் முதல் கண்ணாடி தரையுடன் கூடிய பாலம் (India’s first Glass floor bridge) உத்தர்காண்ட் மாநிலத்தில், கங்கை நதியின் குறுக்கே ரிசிகேசில் (Rishikesh) அமைக்கப்படவுள்ளது.  தற்போது  அந்த இடத்தில் ‘லக்‌ஷ்மன் ஜீலா’ ( Lakshman Jhula) என்ற பழமைவாய்ந்த பாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்திற்கு மாற்றாக புதிய கண்ணாடி பாலம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் பெண்கள் காணாமல் போவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், குழந்தைகள் காணாமல் போவதில்  மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்திலும் உள்ளதாக,   தேசிய குற்றவியல் ஆவணங்கள் அமைப்பு (National Crime Records Bureau (NCRB)) வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான குற்றவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த அறிக்கையின் படி, பெண்கள் காணாமல் போவதில்,  மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும், குழந்தைகள் காணாமல் போவதில்  மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்கள் முறையே 1,2 மற்றும் 3 ஆம் இடங்களையும் பெற்றுள்ளன.
  • 23 வது தேசிய மின்னாளுமை மாநாடு (National Conference on E-Governance) மும்பையில் நடைபெற்றது.

வெளிநாட்டு உறவுகள்

  • இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபட்ச 5 நாள் அரசுமுறைப் பயணமாக 7-2-2020 அன்று இந்தியாவுக்கு வந்தாா். பிரதமரான பிறகு அவா் மேற்கொள்ளும் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
  • BBIN (Bangladesh, Bhutan, India and Nepal) எனப்படும், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளுக்கிடையே பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம்  8-2-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • இங்கிலாந்து நாட்டின் இந்தியாவிற்கான புதிய ஹைகமிஷனராக பிலிப் பார்டன் (Philip Barton) நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

  • எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினர் நடத்திய   ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
  • ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சுமாா் ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூஜொ்ஸி நீதிமன்றம் 6-2-2020 அன்று தீா்ப்பளித்தது.
  • ”சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பு” ( International Religious Freedom Alliance) எனும் அமைப்பை அமெரிக்கா 6-2-2020 அன்று தொடங்கியுள்ளது. இதில், ஆஸ்திரியா, பிரேசில், இங்கிலாந்து, இஸ்ரேல், உக்ரைன், நெதர்லாந்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினராகவுள்ளன.

முக்கிய தினங்கள்

  • நிதி எழுத்தறிவு வாரம் 2020 (Financial Literacy Week)  10-14 பிப்ரவரி 2020 தினங்களில் , ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள்’ (Micro, Small and Medium Enterprises (MSMEs)) எனும் மையக்கருத்தில் அனுசரிப்பதாக  இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பம் , இராணுவம்

  • உலகின் முதல் துப்பாக்கி குண்டு துளைக்காத தலைக்கவசத்தை    (ஹெல்மெட்)  இந்திய ராணுவத்தை சேர்ந்த மேஜர் அனூப் மிஸ்ரா ( Anoop mishra ) உருவாக்கி உள்ளார் .ராணுவ வீரர்களுக்காக ஸ்னைப்பர் தோட்டாக்கள் தாக்காத வகையிலான புல்லட் புரூப் ஜாக்கெட்டை உருவாக்கிய இவர், தற்போது குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார். இந்த ஹெல்மெட், 10 மீட்டர் தொலைவில் இருந்து ஏகே 47 துப்பாக்கியால் சுட்டாலும் குண்டுகள் துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 'பிரணாஷ்' என பெயரிடப்பட்டுள்ள , 200 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணையை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தரையிலிருந்து பாய்ந்து, தரையில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணையாக, பிரணாஷ் உருவாகிறது.

விளையாட்டு

  • கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மகளிா் பிரிவில் மீராபாய் சானு, ஆடவா் பிரிவில் ஜெரேமி லால்ரின்னுன்கா ஆகியோா் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.
  • தேசிய அளவிலான சீனியா் ராக்கிட் பால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தன.
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மார்னஸ் லாம்பஷே தன்னை பிரதிபலிப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
  • ”அயன்மேன் டிரையத்லான்’ ( Ironman triathlon ) எனப்படும் ஓட்டம் மற்றும் நீச்சல் கலந்த மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக  முடித்த உலகின் முதல் பார்வையற்ற தடகள வீரர் எனும் பெருமையை  மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த  நிகெட் தலால் (Niket  Dalal) பெற்றுள்ளார். இந்த போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது.
-------------------------------------------------
 TNPSC குரூப் 1, 2/2A 2020 (New Syllabus) Test Batch  
30 Tests | 200 Questions Per Tests | Tamil & English Mediums
ADMISSION GOING ON !!!
Download Test Batch Schedule 

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !!!
(Your Registration No. and Password to attend Free Tests and PDF Files of the Exam will be send via Email)

For Queries 
Call : 8778799470  
Email : support@portalacademy.in 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.