தமிழ்நாடு
- தமிழக பட்ஜெட் 2020 :
2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 14-02-2020 அன்று தாக்கல் செய்தார்.
தமிழ் நாட்டின் நிதி நிலைமை
- 2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது. 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது. 2019-20 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்தது.
- நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்.
- மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும்
கூ.தக. : தமிழகத்தில் 2019-20 ஆம்நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
- தமிழ் வளர்ச்சித்துறை - ரூ.74 கோடி
- பேரிடர் மேலாண்மைதுறை - ரூ.1360 கோடி
- தமிழக காவல்துறை - ரூ.8,876 கோடி
- தீயணைப்புதுறை - ரூ.405 கோடி
- உள்ளாட்சிகளுக்கு - ரூ.6,754 கோடி
- வேளாண்துறைக்கு - ரூ.11,894 கோடி
- நெடுஞ்சாலைத்துறைக்கு - ரூ.15,850 கோடி
- உயர்கல்வித்துறைக்கு - ரூ.5052 கோடி
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு - ரூ. 18,540 கோடி
- பள்ளி கல்வித்துறை - ரூ.34,181 கோடி
- எரிசக்திதுறைக்கு - ரூ.20,115 கோடி
- போக்குவரத்துதுறைக்கு - ரூ.2,716 கோடி
- தொழில்துறைக்கு - ரூ.2,500 கோடி
- சுகாதாரத்துறைக்கு - ரூ.15,863 கோடி
- ஜவுளித்துறைக்கு - ரூ.1,224 கோடி
- தகவல் தொழில்நுட்பத்துறைக்கு - ரூ.153 கோடி
- இந்து சமய அறநிலையத்துறைக்கு - ரூ.281 கோடி
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு - ரூ.1,064 கோடி
- மின்சார துறைக்கு - ரூ. 20,115.58 கோடி
- தொல்லியல் துறைக்கு - ரூ.31.93 கோடி
- சிறைசாலைதுறைக்கு - ரூ. 392 கோடி
- ஊரக வளர்ச்சித்துறைக்கு - ரூ.23,161 கோடி
- கால்நடைத்துறைக்கு - ரூ.199 கோடி
- நீதி நிர்வாகத்துக்கு - ரூ.1,403.17 கோடி
- மீள்வளத்துறைக்கு - ரூ.1,229.85 கோடி
கூ.தக. : அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2020 - ன் முக்கிய அம்சங்கள்
- கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியம் அமைக்க 12.21 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றப்படும்.
- தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.
- உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டானில், 94 கோடி ரூபாய் செலவில் மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- உணவு மானியத்துக்கு 6500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இணைப்புக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த மற்றும் பணிகள் மேற்கொள்ள ரூ.700 கோடியும், பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5,439 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
- காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்
- பிரதான் மந்திரி கிஷான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 218 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.
- தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.70 கோடி ஆகும்.
- ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்கள் திருவண்ணாமலை, திருச்சி, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்
- சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு.
- தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்
- 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரி, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.
- ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும். விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
- அம்மா விபத்து-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி.
- முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 956.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அம்மா உணவக திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கப்படும். மேலும் இத்திட்டத்திற்காக, சிறப்பு நோக்கு முகமை உருவாக்கப்படும்.
- மதிய உணவு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசுப் பேருந்துகளில் சிசிடிவி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 13 பணிபுரியும் பெண்கள் விடுதி அமைக்கப்படும்.
- சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைப்பு பணிக்கு 25 கோடி ஒதுக்கீடு.
- ராமநாதபுரம், விழுப்புரத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,041 கோடி மதிப்பில் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.
- சேலம் மாவட்டம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக `சிப்காட் தொழிற்பேட்டைகள்' அமைக்கப்பட உள்ளன.
- சென்னை- பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
- தூத்துக்குடி அருகே, அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும்.
- 2020-21 -ம் நிதியாண்டில் முத்திரை தாள் வரியானது 1 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்குக் கட்டுமானச் செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படும்.
- பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி.
- போக்குவரத்து மானியங்களுக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
- சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்கப்படும். சாலைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை பெற, உழவா் -அலுவலா் தொடா்புத் திட்டம் உருவாக்கப்படும்.
- சென்னை மாநகரம் நிலையான பொருளாதார வளா்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும் தனித்தன்மை வாய்ந்த வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
- கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் : சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இவா்கள் 9 பேரையும் நியமித்து, குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
- தமிழ் நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர் 01.01.2020-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்த இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
- புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயா் : வெளிநாடுவாழ் இந்தியா்களை இணைக்கும் கலாசார மையமான பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜின் பெயா் வைக்கப்பட்டது.
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஆா்.கே.பச்சௌரி (79) 13-2-2020 அன்று காலமானாா்.
- வாக்காளர்கள் அவர்கள் வசிக்கும் ஊரிலேயே ஓட்டளிக்க கூடிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்,
- ”We Think Digital” என்ற பெயரில் இந்தியாவில் 7 மாநிலங்களிலுள்ள (உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், பீகார்) 1 இலட்சம் பெண்களுக்கு ‘டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சி’ (digital literacy training) வழங்கும் திட்டத்தை ஃபேஷ்புக் (Facebook) நிறுவனம் 11-2-2020 அன்று தொடங்கியுள்ளது.
- ”பாபா கவாச்” (Bhabha Kavach) என்ற பெயரில் இந்தியாவின் மிகவும் மெலிதான குண்டு துளைக்காத உடை மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் (CISF (Central Industrial Security Force)) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த உடையை இந்திய அரசின் பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
- போதைப் பொருள் கடத்துதலை தடுப்பதற்கான பிம்ஸ்டெக் அமைப்பின் மாநாடு (BIMSTEC ‘Conference on Combating Drug Trafficking’) 13-14 பிப்ரவரி 2020 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
- இந்தியாவில் இரயில்வே தண்டவாளங்களுக்கு மேல் அமையும் முதல் ஐந்து நட்சத்திர விடுதி குஜராத்திலுள்ள காந்திநகரில் கட்டப்படவுள்ளது.
- ஜம்மு காஷ்மீரின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏப்ரல் 2020 ல் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- இந்தியா-போர்ச்சுகல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து : பிரதமா் நரேந்திர மோடி, போர்ச்சுகல் அதிபா் மார்சேலோ ரெபேலோ டிசெளசா ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே அறிவுசார் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாசாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் 14-2-2020 அன்று கையெழுத்தாகின.
- நாக்பூர் ஆரஞ்சுகள் முதல் முறையாக 13-2-2020 அன்று துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச நிகழ்வுகள்
- இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39) பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டாா். இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல், அலோக் சா்மா ஆகியோரைத் தொடா்ந்து ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் இணைந்துள்ளாா்.
- இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தற்போது இலங்கை ராணுவத் தளபதியாக இருக்கும் ஷாவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதியாக பதவி வகிக்கும் ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
- 2020-2021 ஆம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சியை முந்தைய கணிப்பாகிய 2.3% த்திலிருந்து 2.2% க்கு குறைந்து Economist Intelligence Unit (EIU) அமைப்பு மறுமதிப்பிட்டுள்ளது.
- கூ.தக. : லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட Economist Intelligence Unit (EIU) அமைப்பு 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.
முக்கிய தினங்கள்
- புல்வாமா தாக்குதலின் முதலாம் நினைவு தினம் 14 -02- 2020 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
- தேசிய பெண்கள் தினம் (National Women’s day) - பிப்ரவரி 13 (இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைப்படும் சரோஜினி நாயுடுவின் பிறந்த தினம் 13-2-1879)
- பாதுகாப்பான இணையதள தினம் (Safer Internet Day) - பிப்ரவரி 11
விருதுகள்
- ”டான் டேவிட் பரிசு 2020” (Dan David Prize 2020) இந்தியாவைச் சேர்ந்த பெண்ணியவாதி கீதா சென் -னிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
- ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் 2-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அறிவியல் தொழில்நுட்பம்
- ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ளது. சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ்-அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத ‘டிஜிட்டல் லாக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இதன்மூலம் ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
- இந்தியாவின் தேசிய விளையாட்டாக எதையும் அறிவிக்கவில்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய பதிலில் கூறியுள்ளது. நமது நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கி உள்ளது என பல்வேறு தரப்பினா் கருதி வருவது குறிப்பிடத்தக்கது.
- கெயிர்ன்ஸ் கோப்பை செஸ் போட்டி மகளிர் பிரிவில் உலக சாம்பியன் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார்.
- சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை முதன்முறையாக வென்ற இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா் கேப்டன் மன்ப்ரீத் சிங்.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின் சிங் (Robindra Ramnarine Singh) ஐக்கிய அரபு எமிரேட்டு நாட்டின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள்
- “Messages from Messengers” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பிரீத்தி கெ ஷெரோஃப் (Priti K Shroff)
- “A Commentary and Digest on The Air, Act 1981” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - K K கந்தல்வால் (K K Khandelwal)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.