-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

Current Affairs for TNPSC Examination 18,19 February 2020

தமிழ்நாடு

  • தமிழக அரசின் உள்ளாட்சித் துறைக்கு ஒரே ஆண்டில் 12 தேசிய விருதுகள் : மத்திய அரசு சாா்பில் ஊரக வளா்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி,
    • கடந்த 2019-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 12 தேசிய விருதுகளுக்குத் தமிழக ஊரக வளா்ச்சித் துறை தோ்ந்தெடுக்கப்பட்டது.
    • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிகளை விரைவாக முடித்ததற்காகவும், நீா் மேலாண்மைப் பணியைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவும் இரண்டு தேசிய விருதுகள், இத்திட்டத்தின்கீழ், நீா் கட்டமைப்பை உருவாக்கியதற்காக வேலூா் மாவட்டத்துக்கு இரண்டு தேசிய விருதுகளும், தொழிலாளா்களுக்கு உரிய காலத்துக்குள் ஊதியம் அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருது, சிறந்த செயல்பாட்டுக்காக கரூா் மாவட்டத்துக்கு தேசிய அளவில் 2-ஆம் இடத்துக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளன.
    • ஊராட்சி ஒன்றிய அளவில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தொழிலாளா்களுக்கு குறித்த காலத்துக்குள் ஊதியம் வழங்கியதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், புனிததோமையா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருதும், கிராம ஊராட்சி அளவில் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட செலுகை கிராம ஊராட்சிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்பட்டு வரும் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்துக்கும் தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.
    • மேலும், மத்திய அரசின் ரூா்பன் திட்டம் மற்றும் தீன தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழும் தலா ஒரு தேசிய விருது என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • அதுமட்டுமில்லாமல், மத்திய அரசின் சாா்பில் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளைத் திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாகத் தோ்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னை ஐ.ஐ.டி.க்கு ஜெர்மன் பல்கலை பாராட்டு : சென்னை ஐ.ஐ.டி., 1959ல், ஜெர்மனியின் ஆசென் பல்கலை உதவியுடன் துவங்கப்பட்டது. பின், 1966ல் ஜெர்மன் பல்கலை மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, ஆராய்ச்சி பணிகளை துவங்கின. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக, இந்திய மாணவர்கள் ஜெர்மன் பல்கலைகளில், இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யின் சிறப்பான செயல்பாடுகளுக்கு ஜெர்மனின் ஆசென் பல்கலைக்கழகம்  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.     
  • இந்தியாவின் முன்னணி பெருநகரங்களில் ஒலி மாசுபாட்டில் சென்னை முதலிடம் :     ஒலி மாசு குறித்து , மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்ட,  2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கணக்கெடுப்பு விவரங்களின் படி,  இந்தியாவின் முன்னணி பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் சென்னையில்தான் அதிக ஒலி மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் பகல் நேரங்களில் 55 டெசிபல் அளவையும், இரவு நேரங்களில் 45 டெசிபல் அளவையும் தாண்டக்கூடாது என விதிகள் கூறுகின்றன. ஆனால், சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் இரைச்சல் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
    • சென்னையில் ஒலி மாசு அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமானது வாகனங்கள் எழுப்பும் ஒலி ஆகும்.
    • 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்கெடுப்பின்படி ஒலி மாசு நிறைந்த பெரு நகரங்களில் சென்னை நான்காவது இடத்தில்தான் இருந்தது.

இந்தியா

  • 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளிய இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ (World Population Review)  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை முறையே  அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன               
    • வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில், இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலராக உள்ளது, இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும். இருப்பினும், இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக (7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக) சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் (Institute for Defence Studies and Analyses) என்ற நிறுவனத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிகர் நினைவாக மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கூ.தக. : 11 நவம்பர் 1965 ல் தொடங்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் அமைப்பின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தின் கீழ், குடிமக்கள் விபரங்களை சேகரிக்கும் பணி, 1 ஏப்ரல் 2020 முதல் டில்லி மாநகராட்சி பகுதி யில் இருந்து துவங்க உள்ளது. முதலாவதாக, நாட்டின் தலைமகன் என்ற முறையில், ஜனாதிபதியிடம், விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.
  • நீதிபதி விப்லப் குமார் சர்மா குழு பரிந்துரைகள் :
    • அஸ்ஸாம் சட்டப் பேரவையில் அந்த மாநில பூா்வகுடிமக்களுக்கு 67 சதவீத இடஒதுக்கீடு (மூன்றில் இரு பங்கு) அளிக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி விப்லப் குமாா் சா்மா தலைமையிலான 13 போ் அடங்கிய உயா்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
    • பூா்வகுடிமக்கள் என்பவா்கள் 1951-இல் இருந்து அஸ்ஸாமில் வாழ்ந்து வருபவா்கள் என்று வரையறை செய்ய வேண்டும்.இதில் ஜாதி, மதம், மொழி பாகுபாடு காட்டப்படக் கூடாது.
    • அஸ்ஸாமில் சட்ட மேலவையை உருவாக்க வேண்டும்.
    • வெளியில் இருந்து குடியேறியவா்கள் அஸ்ஸாமில் முழுமையாக பரவுவதைக் தடுக்க, ‘நூழைவு அனுமதிச் சீட்டு’ உருவாக்கப்பட வேண்டும்’ எனவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பின்னணி :
  • அஸ்ஸாமில் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் என்று அந்த மாநிலத்தில் மாணவா் அமைப்பினா் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 6 ஆண்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, கடந்த 1985-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி மற்றும் அஸ்ஸாம் மாணவா்கள் சங்கம் இடையே ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
  • இந்நிலையில், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குமுன் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் உள்ளது. இது அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருக்கிறது என்பதே அங்கு தீவிர எதிா்ப்பு நிலவுவதற்கு முக்கியக் காரணமாகும்.
  • நாடு முழுவதும் 4,499 கி.மீ. தூரத்துக்கு 31 புதிய இரட்டை பாதை திட்டப்பணிகளுக்கான ஆய்வுப் பணி (இடம் கணக்கெடுப்பு) மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இதில், தமிழகத்தில் சென்னை கடற்கரை-எழும்பூா் (4.3 கி.மீ), காட்பாடி-வேலூா்-திருவண்ணாமலை-விழுப்புரம் (160.10 கி.மீ), சேலம்-கரூா்-திண்டுக்கல் (160 கி.மீ.), ஈரோடு-கரூா் (65 கி.மீ.), தா்மாவரம்-பாகாலா-காட்பாடி (290 கி.மீ.) ஆகிய இடங்களில் 4 இரட்டைப்பாதை திட்டங்களுக்கான ஆய்வுப் பணி நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.    அதேநேரம் குறிப்பிட்ட 400 ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட 5600 ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதி தொடர்ந்து வழங்கப்படும் என்று ரயில்டெல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது 
    • கூ.தக. : 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை வழங்குவதற்காக  கூகுள் நிறுவனம் மற்றும்  இந்திய  ரயில்வேயின் தொழில்நுட்பப் பிரிவான ரயில்டெல் ஆகிவைகளிடையே 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.  அதனபடி இந்த திட்டமானது தற்போதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது.  
  • ”கலா கும்ப்” (Kala Kumbh) என்ற பெயரில் கருத்துசார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி (Handicrafts Thematic Exhibition) நாடெங்கிலும்    மத்திய  ஜவுளி அமைச்சகத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளது.  இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் நாட்டின் பாரம்பரியத்தைப் போற்றுவதும், புவியியல் குறியீடுகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதுமாகும்.
  • இடம்பெயரும் பறவை இனங்கள் தொடர்பான ஐநா அமைப்பின் 13-ஆவது மாநாடு (Thirteenth Conference of the Parties to the Convention on Migratory Species ) குஜராத் மாநிலம் காந்தி நகரில்02.2020 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டனர்.  130 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயிரி பன்முகத் தன்மை வல்லுநர்கள்  இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
    • இந்த மாநாட்டில், இடம்பெயரும் பறவைகளுக்கான ஐநா அமைப்பின் (UN body on Migratory Species) அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக் கொண்டது.
  • ”பயோ ஆசியா 2020” (Bio Asia 2020) என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய  உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி அறிவியல்  மன்றத்தின் கூடுகை  “நாளைக்கான இன்று” (Today for Tomorrow) எனும் மையக்கருத்தில்  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில்  17-19 பிப்ரவரி  2020 தினங்களில் நடைபெற்றது.
  • ’வான் பாதுகாப்பு கமாண்ட்’ (“Air Defence Command (ADC)”) என்ற பெயரில் ஒருங்கிணைந்த முப்படை கமாண்டை ,  ஜீன் 2020 மாதத்திற்குள்ளாக உருவாக்க இருப்பதாக   முப்படையின் முதல் தலைமைத் தளபதி  (Chief of Defence Staff (CDS) ) பிபின் ராவத்  அறிவித்துள்ளார்.
  • ”யோதவு” (”Yodhavu”) மொபைல் செயலி : பொதுமக்களின் ஈடுபாட்டுடன் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக, ”யோதவு” (”Yodhavu”) எனும் மொபைல் செயலியை கேரள அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம்,  போதைப் பொருள் கடத்தல் பற்றி, பொதுமக்கள் நேரடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க முடியும்.
  • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்ட , இந்தியாவின் முதல் விமான நிலையம் எனும் பெருமையை  புது தில்லியிலுள்ள ‘இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்’ (Indira Gandhi International Airport (IGIA)) பெற்றுள்ளது.
  • ”மின்வாரியங்களுக்கான செயல் திறன் ஒழுங்குமுறை சட்டம் 2019” (Performance Regulation Act 2019 for the electricity department) ஐ 18-2-2020 அன்று அமல்படுத்தியதுடன், இச்சட்டத்தை  அமல்படுத்தியுள்ள முதல் மாநிலம் எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலம் பெற்றுள்ளது.
    • கூ.தக. : இந்த சட்டமானது ,  பொது மக்களின்  குறைகளை மின்வாரியங்கள் விரைந்து தீர்ப்பதை உறுதி செய்கிறது. தாமதமாகும் ஒவ்வொரு சேவைக்கும்  சம்பந்தப்பட்ட மின் வாரியங்கள் பொது மக்களுக்கு  இழப்பீடு வழங்குவதையும் இச்சட்டம் உறுதி செய்கிறது.
  • சஞ்சீவ் பூரி குழு (Sanjiv Puri panel) :    விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய ஐ.டி.சி. நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர் சஞ்சிவ் பூரி தலைமையிலான எட்டு நபர் குழுவை     15 வது நிதிக்குழு  17-2-2020 அன்று அமைத்துள்ளது.
  • ராணுவத்தில் உள்ள அனைத்துப் பெண் அதிகாரிகளும் தங்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம், அதற்கு அடுத்த 3 மாதங்களுக்குள் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெண் அதிகாரிகளுக்கு உயர்ந்த பதவிகள் வழங்குவதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
  • நாட்டிலேயே ஹெச்ஐவி/ எய்ட்ஸ் பாதிப்பில் மிஸோரம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

  • ”லுயி-ங்காய்-நி’ (‘Lui-Ngai-Ni’ ) என்ற பெயரில் விதை விதைக்கும்   திருவிழா  மணிப்பூர் மாநிலத்தில் 15-16 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெற்றது.

வெளிநாட்டு உறவுகள்

  • ஆஸ்திரேலியா நாட்டிற்கான இந்தியாவின் ஹை கமிஷனராக ‘பாரி ஓ ஃபாரல்’ (Barry O’Farrell ) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியா - நார்வே நாடுகளுக்கிடையே  நீடித்த வளர்ச்சிக்கான நீலப் பொருளாதார   செயல் குழு (India-Norway Task Force on Blue Economy for Sustainable Development today)  18-2-2020 அன்று புது தில்லியில்    தொடங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஆப்கானிஸ்தானில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் அந்நாட்டின் அதிபராக அஷ்ரப் கானி மீண்டும் தேர்வாகி உள்ளார்.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் நிறுவனம் சார்பாக ரூ.71 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பெஷோஸ் எர்த் பண்ட்’  (Bezos Earth Fund) எனும் நிதியம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ‘ராட்-2’ என்ற பெயரில், விமானத்திலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையை பாகிஸ்தான் 18-2-2020 அன்று வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது.
  • ஐ.நா. காலநிலை மாநாட்டின் பங்குதாரர் நாடுகளின்  26 வது கூடுகை (26th session of the Conference of the Parties (COP 26) to the UNFCCC (United Nations Framework Convention on Climate Change ) )   9-19 நவம்பர் 2020 தினங்களில்  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் , இங்கிலாந்து அரசின் தலைமையில்  நடைபெறுகிறது.

பொருளாதாரம்

  • 2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் 5.4 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வளா்ச்சி 2021-இல் 5.8 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • ”சர்வதேச தாய்மொழி தினத்தை” (International Mother Language Day)   முன்னிட்டு   21 பிப்ரவரி 2020 அன்று  “மத்ரிபாஷா திவாஸ்” (Matribhasha Diwas)  எனும் நிகழ்வை  நாடு முழுவதும் அனுசரிக்கவுள்ளதாக மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.
  • மண் ஆரோக்கிய அட்டை தினம் (Soil Health Card Day) - பிப்ரவரி 19
    • கூ.தக. : இந்தியாவில் மண் ஆரோக்கிய அட்டை திட்டம் (Soil Health Card Scheme) , 19 பிப்ரவரி 2015 அன்று பிரதமர் மோடி அவர்களால் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார்க் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 2015 ஆம் ஆண்டு சர்வதேச மண்  வருடமாக (International Year of Soils ) அனுசரிக்கப்பட்டது.
 விருதுகள்
  • லாரியஸ் விருதுகள் 2020 : விளையாட்டு உலகின் ஆஸ்கா் என்று கருதப்படும் லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜொ்மனித் தலைநகா் பொ்லினில் நடைபெற்றது.
    • இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருது எஃப்1 காா்பந்தய வீரா் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து), கால்பந்து வீரா் லியோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா) ஆகியோருக்கும்,
    • சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்காவைச் சோ்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பில்ஸ் -க்கும் வழங்கப்பட்டது.
    • சிறந்த விளையாட்டு அணிக்கான விருது, கடந்த ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு வழங்கப்பட்டது.
    • லாரியஸ் விருது வென்ற முதல் இந்திய வீரா் சச்சின் டெண்டுல்கர் : விளையாட்டின் சிறந்த தருணம் (2000-2020) என்ற பிரிவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு விருது வழங்கப்பட்டது.
    • 2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்த தருணம், விளையாட்டு உலகில் 20 ஆண்டுகளின் சிறந்த தருணமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நியமனங்கள்

  • ஜம்மு-காஷ்மீரின் தொகுதி மறு வரையறை ஆணையத்தின் உறுப்பினராக தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திராவை தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா நியமித்துள்ளாா்.
கூ.தக. :
  • ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், கடந்த ஆகஸ்ட் 2019  மாதம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பு, லடாக்கில் உள்ள 4 தொகுதிகள் உள்பட ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகள் காலியாகவே இருக்கும்.
  • மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, ஜம்மு-காஷ்மீரின் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 107-இல் இருந்து 114-ஆக அதிகரிக்கவுள்ளது.
  • மக்களவைத் தொகுதிகளைப் பொருத்தவரை, ஜம்மு-காஷ்மீரில் 5 தொகுதிகளும், லடாக்கில் ஒரு தொகுதியும் இருக்கும்.
  • ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு

  • அமெரிக்காவில் நடைபெற்றுவந்த கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.
  • ’டோக்கியோ ஒலிம்பிக் 2020’ (Tokyo Olympics 2020) இன் மையக்கருத்தாக   “ உணர்ச்சியினால் ஒன்றுபட்டோம்” (United by Emotion)  என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

  • 'உலகத் தமிழ்க் கவிதை ஓராயிரம்' என்ற புத்தகத்தை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தொகுத்துள்ளது.  இந்த புத்தகத்தில்,  இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், சவுதி அரேபியா உள்ளிட்ட 17 நாடுகளில் வசிக்கும் ஆயிரம் கவிஞர்களின் ஆயிரம் கவிதைகள் இடம் பெற்றுள்ளது.மரபுக்கவிதை, புதுக்கவிதை, ைஹக்கூ ஆகிய மூன்று வகையான கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.
  • ”Chanakya Niti: Verses on Life and Living” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆதித்யா நாரயண் தைர்யஷீல் ஹஸ்கர் (Aditya Narayan Dhairyasheel Haksar)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.