-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

Union Budget 2020 -2021 Important Facts in Tamil for TNPSC Examinations

மத்திய பட்ஜெட் 2020 - 21:   01 ஏப்ரல் 2020 அன்று தொடங்கும்  2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01-02-2020 அன்று தாக்கல் செய்தார். 

ஒரு ரூபாயில் வரவு /  செலவு (ஒரு ரூபாயில்) 

மத்திய  பட்ஜெட் 2020 வரவு   (1 ரூபாயில்) 

  • கடன் வாங்குவதன்  மூலம் (Borrowing and other liabilities)  - 20 பைசா
  • சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி மற்றும் இதர வரிகள்  (GST and Other Taxes) - 18  பைசா 
  • நிறுவன வரிகள்   -  18 பைசா
  • வருமான வரி   -  17 பைசா 
  • வரியில்லா வருமானம்-10  பைசா  
  • மத்திய ஆயத்தீர்வை  (Union Excise duties) -   7  பைசா
  • கடன் அல்லாத மூலதனங்களைப் பெறுவதன்(Non debt capital receipts)  -  6 பைசா 
  •  சுங்க வரிகள்  (customs)  - 4 பைசா  

குறிப்பு : ஒரு ரூபாய் வரவில், 64 பைசா  வரிகள் மூலமாக பெறப்படுகிறது. 

மத்திய  பட்ஜெட் 2020  செலவு  (1 ரூபாயில்)


  • மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு (States share of Taxes and Duties)  - 20 பைசா 
  • கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்காக (Interest Payments)  - 18 பைசா 
  • மத்திய அரசின் திட்டங்களுக்காக (Central Sector Schemes)  -13 பைசா 
  • நிதிக் குழு மற்றும் பிற செலவுகளுக்காக (Finance Commission and Other Transfers)  - 10 பைசா 
  • பிற செலவுகளுக்காக  - 10 பைசா 
  • மத்திய அரசின் உதவி  பெறும் திட்டங்களுக்காக (Centrally Sponsored Schemes) - 9 பைசா 
  • பாதுகாப்புத் துறை  (Defence)  - 8 பைசா 
  • மானியங்களுக்காக - 6 பைசா 
  • ஓய்வூதியங்கள்  - 6 பைசா 

2019-20 ஆம் நிதியாண்டில் 
  • திருத்தியமைக்கப்பட்ட செலவு கணக்கீடு (Revised Estimates of Expenditure)  - ரூ. 26.99 இலட்சம் கோடி
  • திருத்தியமைக்கப்பட்ட வரவுக் கணக்கீடு (Revised Estimates of Receipts) - ரூ. 19.32 இலட்சம் கோடி 

 2020-21 ஆம் நிதியாண்டில் 
  • பெயரளவிலான  மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Nominal growth of GDP) கணிப்பு  - 10 % 
  • வரவு கணிப்பு  - ரூ.  22.46 இலட்சம் கோடி 
  • செலவு கணிப்பு  - ரூ. 30.42 இலட்சம் கோடி  

மத்திய பட்ஜெட் 2020 - 21: துறைவாரியாக ஒரு பார்வை (நன்றி  : தினமணி, PIB, இந்து தமிழ்) 

வேளாண் துறை
  • வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  
  • இதற்காக, வேளாண் துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  •  விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேயின் அரசு-தனியார் ஒத்துழைப்பில் "கிசான் ரயில்' திட்டம். பால், பழங்கள், காய்கறிகளை கொண்டு செல்ல, குளிர் சாதன வசதியுடன் கூடிய கிசான் ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
  • விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் 'கிருஷி உடான்' எனும் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் துறையை மேம்படுத்த உதவும். 
  • சூரியசக்தியில் இயங்கும் பம்புகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி.
  • பால் பதப்படுத்துவதற்கான திறனை 2025-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குதல்.
  • மீன் உற்பத்தியை 2022-23 நிதியாண்டுக்குள் 200 லட்சம் டன்னாக அதிகரித்தல்.
  • 2024-25 நிதியாண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தல்.
  • கால்நடைகளில் கோமாரி உள்ளிட்ட நோய்களை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான திட்டம்.
  • சாகர் மித்ரா திட்டத்தின் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். 
  • விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்
  • ஜல் ஜீவன் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜல்ஜீவன் திட்டத்தை மொத்தம் ரூ.3.60 இலட்சம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.) 
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கால்நடை வளர்ப்பு 
  • கால்நடைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக செயற்கை கருவூட்டல் திட்டத்துக்காக 30 சதவீதமாக உள்ள நிதி ஒதுக்கீட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. 
  • 2022-ஆம் ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயா்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது 
  • 2021ம் ஆண்டிற்குள் 101 டான் பால் உற்பத்திக்கு இலக்கு. 


சுகாதாரத் துறை
  • சுகாரத்துறைக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  •  "ஆயுஷ்மான்' திட்டத்தின் கீழ் அரசு-தனியார் ஒத்துழைப்பில் மருத்துவமனைகள் தொடங்குதல்.
  • 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான திட்டம்.
  • தொற்றா நோய்களை எதிர்கொள்ள "ஃபிட் இந்தியா' திட்டம்.
  • வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் குறைந்த விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்வதற்கான, "ஜன் ஒளஷதி' (மக்கள் மருந்தகம்) திறக்கப்படும். தற்போது 6,000 மருந்துக் கடைகள் உள்ளன. 
  • நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.
  • தூய்மை இந்தியாதிட்டத்துக்கு ரூ.12,300 கோடியும் 2020-21ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


கல்வித்துறை
  • கல்வித் துறைக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
  • உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்.
  • வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்' திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
  • தேசிய காவல் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.
  • வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கான திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள்.
  • ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி.


தொழில்துறை
  • செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.
  • ரூ.1,480 கோடி செலவில் தேசிய ஜவுளி தொழில்நுட்பத் திட்டம்.
  • ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டை அதிகரிக்க "நிர்விக்' திட்டம்.
  • ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரிகளை இணையவழியில் திரும்பப் பெறுவதற்கான வசதி.
  • 2020, ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு எளிய வழிமுறை அமல்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் கணக்கு தணிக்கை வருமான வரம்பு அதிகரிப்பு : நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான வருமான வரம்பு ரூ.5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது; மேலும், எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கு துணைக் கடன் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை
  • போக்குவரத்துத் துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • "உடான்' திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும்.
  • 2023-ஆம் ஆண்டுக்குள் தில்லி-மும்பை விரைவுவழிச் சாலை.
  • நாட்டின் 3-ஆவது தனியார் ரயில், இந்தூர்-வாராணசி இடையே இயக்கப்படவுள்ளது. 
  • சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.
  • "உடான்' திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். 
  • கூ.தக. : நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை நகரங்களை விமானப் போக்குவரத்து சேவை மூலம் இணைப்பதற்காகவும், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் நோக்குடன், உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-இல் அறிமுகம் செய்தது.  
  • "சென்னை-பெங்களூரு இடையே விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்' இதன் மூலம், கர்நாடக மாநிலம், ஹொசக்கோட்டே நகரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 262 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது.
  • முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.
  • அரசு-தனியார் ஒத்துழைப்பில் 150 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.
  • தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை விரைவில் அறிமுகம்.
  • தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படும்.
  • வீடுகளில் 3 ஆண்டுக்குள் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை.
  • குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



 நிதித்துறை
  • வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
    • ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
    • ரூ. 5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20% வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
    • இதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
    • மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம்  வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
    • ரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
    • ரூ.15 லட்சத்துக்கும் மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.
    • குறிப்பு : ஆனால், புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் முறைப்படி வரி செலுத்த முன்வருவோர், பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற வரிச் சலுகை ஏற்பாடுகள் எதையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
    • ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக் கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளையே தொடர விரும்பினால் பழைய விகிதப்படியே கணக்கிட்டு வரி செலுத்தலாம். 
    •  கார்ப்பரேட் பங்குப்பத்திரங்களில் எப்பிஐ முதலீட்டை 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • 2020-21 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீதமாக அதிகரிப்பு.
  • நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதமாக அதிகரிப்பு.
  • ஆதார் எண் அடிப்படையில் நிரந்தரக் கணக்கு எண் (பான்) வழங்கப்படும்.
  • வங்கி டெபாசிட்டுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
  • ரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டும் "ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு.
  • குறைந்த விலை வீட்டுக் கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு
  • வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வங்கி திவாலானால் டெபாசிட் பணத்தில் ரூ.5 லட்சம் வரையிலான பணம் திரும்பக் கிடைக்கும்.
  • நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எல்ஐசி-யின் 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம், எல்ஐசி-யில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. இதேபோல் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்


பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்
  • பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருப்பதை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக் குழு.
  •  6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிதிறன்பேசிகள் வழங்குதல்.
  •  கருவுற்ற தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய சிறப்புக் குழு.


கலாசாரம் மற்றும் சுற்றுலா
  • தமிழகம் (ஆதிச்சநல்லூர்) உள்பட 5 மாநிலங்களில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த அருங்காட்சியகங்கள்.  தொல்லியல் துறையின் ஆய்வுப் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். 
  • மேலும், ஹரியாணாவின் ராக்கி கார்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், மகாராஷ்டிராவிலுள்ள திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 
  • 2020-21 மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.  
  •  இந்தியப் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கப்படும்.
  • நாணயம் சேகரித்தல், வர்த்தகம் தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  •  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • குஜராத்தின் லோத்தல் பகுதியில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.


பாதுகாப்புத் துறை
  • பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ராணுவத்தை நவீன மயமாக்குவதற்கான எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதற்காக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீட்டுத் தொகை 5.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  •  பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் ஏறத்தாழ 1.5 சதவீதமாக உள்ளது. இது, கடந்த 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்குப் பிறகு பாதுகாப்புத் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டிலேயே குறைந்த மதிப்பாகும்.
  • மத்திய பட்ஜெட்டில், உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.


இதர முக்கிய தகவல்கள்
  • இந்திய  வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரை :  1-2-2020 அன்று  காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை சுமாா் 2.45 மணியளவில் முடிவடைந்தது. சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளாா் நிா்மலா சீதாராமன். இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட பட்ஜெட் உரையை அவா் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.20 லட்சம் கோடி (284 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
  • கூ.தக. : இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூா் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. 
  • 2014 -2019 ஆண்டுகளில் இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 7.4% என உள்ளது. 
  • 2006-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில்  271 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 
  • 2020 - 21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்துறை வளர்ச்சியானது 2.5% ஆகவும், வேளாண் துறையின் வளர்ச்சியானது 2.8% ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-21-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும்.
  • 2020-21-ம் ஆண்டில் அரசின் பங்குவிலக்கல் மதிப்பு ரூ.1.20லட்சம் கோடி இலக்கு. நடப்பு நிதியாண்டில் ரூ.65ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது
  • கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்த ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 
  • மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், இடையே, காஷ்மீர் மொழியிலும் பேசினார்.
  • இதுவரையில்  40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர் எனவும்,  புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்தப்படும்.
  • இந்தியா தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடுத்தர குடும்பங்களின் அன்றாட செலவு 4% குறைந்து சேமிப்பாக மாறியுள்ளது.
  • பட்ஜெட் உரையில்  ஆத்திசூடி , திருக்குறள் பாடல்களின்  மேற்கோள்கள் : 
    • திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்கு முன்பாக ஔவையாா் எழுதிய ஆத்திசூடியையும் நிா்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினாா். ‘‘பூமி திருத்தி உண்’’ என்ற வரியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையாா் தெரிவித்துள்ளதாக அவா் கூறினாா். 
      • நிலத்தை பண்படுத்தி, அதில் பயிா் செய்து, விளைந்த நெல்லை உண்ண வேண்டும் என்பது இந்த வரியின் அா்த்தமாகும்.
    • ஒரு சிறந்த நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளின் 74-ஆவது அதிகாரத்தின்(நாடு) கீழ் வரும் 738 -ஆவது குறளில் திருவள்ளுவா் தெரிவித்திருப்பதாக கூறிய அவா்,  ‘‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து’’  என்ற திருக்குறளை மேற்கோளாக கூறினாா். 
      • பொருள் : ஒரு நாடு என்பது 5 அணிகலன்களைக் கொண்டதாக இருக்கும். அதாவது, நோய் இன்மை, செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு ஆகியவையே நாட்டின் ஐந்து அணிகலன்கள் ஆகும்.


பட்ஜெட்டின் வரலாறு : 
o சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் , இந்தியாவின் முதலாவது நிதியமைச்சர் ஆர்.கே . சண்முகம் செட்டி அவர்களால் 26 நவம்பர் 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.   குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ஜான் மாத்தாய்.
o அதிக முறை  பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் எனும் பெருமையை மொரார்ஜி தேசாய்  (10 முறை) பெற்றுள்ளார். அவரையடுத்து ப.சிதம்பரம் இரண்டாமிடத்தை (8முறை) பெற்றுள்ளார். 
o பட்ஜெட் தாக்கல் செய் த  நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் – இந்திராகாந்தி (28 பிப்ரவரி 1970)
o இரயில்வே பட்ஜெட் மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட ஆண்டு – 2017 
o மிக நீளமான பட்ஜெட் உரை  வழங்கிய நிதியமைச்சர்  - நிர்மலா சீத்தாராமன் (2020)
o மிகக்குறுகிய பட்ஜெட் உரை (800 வார்த்தைகள்)  - எச்.எம்.பட்டேல் (1977 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்)


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.