-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 22-30 April 2020

நடப்பு நிகழ்வுகள் 22-30 ஏப்ரல் 2020

தமிழ்நாடு

  • கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
    • மேலும், இத்துடன், மணிப்பூர் கருப்பு அரிசி, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு  புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரை மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இருந்தது.
    • பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றவுடன் நீா் தொடா்பான அனைத்து பிரச்சினைகளையும் கையாள ஜல் சக்தி துறையை ஏற்படுத்தினாா். நீா் வளம், நதி மேம்பாடு, கங்கை புத்தாக்கம் போன்றவைகளும் இந்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவைகளைப் போன்று முந்தைய மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் இருந்த மற்ற நதிகள் நீா் மேலாண்மை ஆணையங்களும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன
  • கூ.தக. : தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் காவரி நடுவா் மன்ற தீா்ப்பின்படி காவிரி நதி நீரை பகிா்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி 2018 - ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
  • தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கு : ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளது.
  • கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

  • உலகளவில் பட்ஜெட்  வெளிப்படைத்தன்மை மற்றும்   பொறுப்புடைமை (Budget Transparency and Accountability)  பட்டியல் 2020 ல் இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது. International Budget Partnership என்ற அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில்  முதல் நான்கு  இடங்களை முறையே நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • 2020 ஆம் நிதியாண்டில் நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில்   கர்நாடகா மாநிலம் 15,232 மெகாவாட்  உற்பத்தி திறனுடன் முதலிடத்தையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே தமிழ்நாடு (14,347 மெகா வாட்)  மற்றும் குஜராத் (10,586 மெகா வாட்) மாநிலங்களும் பெற்றுள்ளன.  CRISIL எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    • இவ்வறிக்கையின் படி, புதிதாக சேர்க்கப்பட்ட, சூரிய ஆற்றல் உற்பத்தி திறனில்  முதல் மூன்று இடங்களை முறையே ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களும்,
    • காற்று ஆற்றல் உற்பத்தி திறன்களில்  முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களும் உள்ளன.
  • பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட் நடிகர் ‘இர்ஃபான் கான்’ (Irrfan Khan) தனது 53 வது வயதில் 29-4-2020 அன்று காலமானார்.
  • “ஜீவன் அம்ரித் யோஜனா” (Jeevan Amrit Yojana) என்ற பெயரில் கொரானா நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கான ”திரிகுட் சர்னா” (three peppers)  என்ற ஆயுர்வேத மருந்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய  பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமப்புறங்களில் மின்சார இணைப்பு வழங்குவதற்கான திட்டத்திற்கு  346 மில்லியன் டாலர்  கடனுதவி வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி  ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கோவிட் - 19 நோய்க்கு பிளாஸ்மா  தெரபி சிகிச்சை முறையை (Convalescent Plasma Therapy (CPT) ) தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் அரசு மருத்துவமனை எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள ’கிங் ஜியார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம்’ (King George Medical University (KGMU)) பெற்றுள்ளது.
  • ”ஜீவன் சக்தி யோஜனா” (Jeevan Shakti Yojana) என்ற பெயரில் நகர்ப்புற பெண்கள், அரசு நிதியுதவியுடன், வீட்டிலிருந்தே  மாஸ்க் தயாரிப்பதை ஊக்குவிக்கும்  திட்டத்தை   மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • ”முதலமைச்சர் கோவிட்-19 யோதா கல்யாண் யோஜனா” (‘Chief Minister COVID-19 Yoddha Kalyan Yojana’) என்ற பெயரில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கு ரூ.50 இலட்சம் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், உலகளவில் இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ’ஸ்டாக் கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ (Stockholm International Peace Research Institute (SIPRI)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை  முறையே  அமெரிக்கா (732 பில்லியன் டாலர்) , சீனா (261 பில்லியன் டாலர்)   , இந்தியா (71.1 பில்லியன் டாலர்), ரஷியா (65.1  பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • ”இ-கார்யாலாய்” (‘e-karyalay’) என்ற பெயரில்  மின்னணு அலுவலக (e-office)   முறைமையை   மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force(CISF)) தொடங்கியுள்ளது.
  • ”தன்வந்தரி” ( ‘Dhanwantari’) என்ற பெயரில் மருந்துகளை நோயாளிகளின் வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை அஸ்ஸாம் மாநில அரசு  தொடங்கியுள்ளது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடனுதவி திட்டத்தை ஆந்திரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • ”ஸ்வாமித்வா திட்டத்தை” (Swamitva Scheme) தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24) முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் 24-4-2020 அன்று தொடங்கி வைத்தார்கள்.  உரிமைத்துவம்(Ownership)  எனப்பொருள்படும்  ’ஸ்வாமித்வா’ திட்டத்தின் முக்கிய அம்சம்  கிராமப்புறங்களில்   ஒருங்கிணைந்த சொத்து சரிபார்த்தல் வசதியை வழங்குவதாகும்.  இத்திட்டம் முதற்கட்டமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, உத்தரக்காண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.
  • ”இ-கிராம் ஸ்வராஜ் செயலி” (”E-Gram Swaraj application”) என்ற பெயரில்  கிராமப் புறங்களில் வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிட  பஞ்சாயத்து  அமைப்புகளுக்கு உதவிடும் செயலியை  பிரதமர் மோடி அவர்கள் தேசிய பஞ்சாயத்து தினமான 24-4-2020 அன்று வெளியிட்டார்.
  • ”அப்தாமித்ரா” (“Apthamitra”) என்ற பெயரில் கோவிட்-19 பாதிப்பு பகுதிகளில் மருத்துவ வசதி மற்றும்  தொலைதூர மருத்துவ கவுண்சிலிங் வழங்குவதற்கான மொபைல் செயலியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலக ஊடக சுதந்திர பட்டியல் 2020 (“The World Press Freedom Index 2020” )  ல்  இந்தியா  142 வது இடத்தைப் பெற்றுள்ளது.  பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ’Reporters Without Borders’ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில்  முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, பின்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.
  • ”eSanjeevaniOPD” என்ற பெயரில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனையை வழங்குவதற்கான சேவையை  ஹிமாச்சல் பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • கோவிட்-19 நோய்க்கான பிளாஸ்மா ஆராய்ச்சியை மேற்கொள்ள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சிலின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள முதல் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெருமையை  குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நிறுவனம் (Sardar Vallabhbhai Patel Institute)   பெற்றுள்ளது.
  • மிதமிஞ்சிய அரிசியை சானிட்டைசர் தயாரிப்பதற்கான எத்தனாலாக மாற்றுவதற்கு  இந்திய உணவுக் கழகத்திற்கு  (Food Corporation of India (FCI))   தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு   (National Biofuel Coordination Committee (NBCC) ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ’ஹங்பன் தாதா பாலம்’ (Hangpan Dada Bridge) -  அருணாச்சலப் பிரதேசத்தில்  சுபன்சிரி (Subansiri) ஆற்றின் குறூக்கே அமைந்துள்ளது. 
  • புயல்களுக்கான பெயர் பட்டியலில், முதன் முதலாக 'முரசு, நீர்' என்ற இரண்டு தமிழ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
    • இந்திய பெருங்கடலில் இணைந்துள்ள வங்கக்கடல், அரபிக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பெயர் சூட்டப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதிகளை, கரைகளாக கொண்ட நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு, இந்த பெயர் சூட்டப்படுகிறது. கடந்த, 2004ல் தயாரான பெயர் பட்டியல், இதுவரை பயன்படுத்தப்பட்டது. எட்டு நாடுகள் சார்பில், 64 பெயர்கள் இடம் பெற்றன. தற்போது, அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'அம்பான்' என்ற, பெயர் மட்டும் மீதம் உள்ளது.
    • இந்நிலையில், புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த, எட்டு நாடுகளுடன், புதிதாக, ஐந்து வளைகுடா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஈரான், கத்தார், ஏமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தலா, 13 பெயர்கள் வழங்கியுள்ளன. அதன்படி, 139 பெயர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியா அளித்த பெயர்களில், முதல் முறையாக, இரண்டு தமிழ் பெயர்கள் உள்ளன. 'முரசு, நீர்' என்ற, இரண்டு பெயர்களையும்,சென்னை வானிலை மையம் தேர்வு செய்து கொடுத்துள்ளது.மேலும், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காள மொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
  • உலக அளவில் 2019-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிய நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
    • பாதுகாப்புப் படைக்கு அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் சீனா, இந்தியா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தியா பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.98 லட்சம் கோடியை 2019-ஆம் ஆண்டில் செலவிட்டது. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் அதிகமாகும். பட்டியலில் ரஷியா, சவூதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
  • உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுவுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா மே 2020 மாதத்தில் ஏற்கவுள்ளது.மேலும், உலக சுகாதார அமைப்பின் நிதிநிலைக் குழுவிலும் இந்தியா இடம்பெறவுள்ளது. இந்தோனேசியாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
  • ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்பட்ட ஆண்டு - 1918
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புதிய திட்டம் “ஸ்வமித்வா” ( SVAMITVA scheme) : கிராமப்புறப் பகுதிகளில் திட்டமிடலை ஒழுங்குபடுத்துதல், வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இந்தத் திட்டம் உதவும் . தங்கள் வீட்டு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்றும், இந்த விவரங்களைப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
  • ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஜாக் மாவை விட 3 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

வெளிநாட்டு உறவுகள்

  • ’அந்திகுவா’ (Antigua) நாட்டிற்கு கொரோனா நோயை எதிர்த்து போராடுவதற்கான நிதியுதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்தியா வழங்கவுள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஜி-20 நாடுகளின் மெய்நிகர்  பொருளாதார அமைச்சர்கள் கூடுகை (G20 Digital Economy Ministers meeting)  30-4-2020 அன்று  நடைபெற்றது.  இந்தியாவின் சார்பாக மத்திய சட்டம் மற்றும் நீதி,  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.
  • ”பீட்டர்ஸ்பர்க் பருவநிலை பேச்சுவார்த்தையின் (Petersberg Climate Dialogue) ” 11 வது கூடுகை இணைய வழியில் 27-28 ஏப்ரல் 2020 தினங்களில் நடைபெற்றது.   ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து தலைமையேற்று நடத்திய இந்த கூடுகையில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.
    • ”பிட்ச் பிளாக் இராணுவ ஒத்திகை” (Exercise Pitch Black) என்ற பெயரில்  இரண்டாண்டுகளுக்கொரு முறை ஆஸ்திரேலிய நாட்டினால்  நடத்தப்படும்  பன்னாட்டு விமானப்படை ஒத்திகையின்  2020 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு  கோவிட்-19  பரவலினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
  • சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்திற்கு ‘ தியான்வென்1’ (Tianwen-1) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • “விட்டல்” (VITAL - Ventilator Intervention Technology Accessible Locally) என்ற பெயரில் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிறப்பு வெண்டிலேட்டர்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ உருவாக்கியுள்ளது.
  • ”நூர்” ( “Noor” ) என்ற பெயரில் ஈரான் நாட்டின் முதல்  இராணுவ செயற்கைக் கோள் “காசெட்” (‘Qased’) எனும்  ஏவுகணையின் மூலம் 22-4-2020 அன்று  விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
  • சார்க் (South Asian Association for Regional Cooperation (SAARC)) அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் மெய்நிகர் மாநாடு  (virtual conference)  23-4-2020 அன்று நடைபெற்றது. பாகிஸ்தான் நாடு நடத்திய இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில்  சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் ராஜிவ் கார்க் பங்கேற்றார்.
  • ”கஞ்சா” (cannabis) சாகுபடியை சட்டபூர்வமாக்கியுள்ள முதல் அரபு நாடு எனும் பெயரை லெபனான் பெற்றுள்ளது.
  • ரஷிய பிரதமா் மிகயீல் மிஷுஸ்டினுக்கு (54) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
  • சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையத்தின் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) 2020 ஆம்  ஆண்டு அறிக்கையில்  மத சுதந்திரத்தை மீறும்  நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். இதன் பரிந்துரைகள் வெளியுறவுத்துறைக்கு கட்டுப்படாதவை ஆகும்.
    • 2004 முதல் முதல் முறையாக பாகிஸ்தான், சீனா, வட கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளது.
  • 24 ஆயிரம் கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் அளவுடைய உலகின் மிகப்பெரிய சரக்குக்கப்பல் ஒன்று சீனாவின் ச்சிங்தாவ் துறைமுகத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • சௌதி அரேபியாவில் புகழ்பெற்ற பிரம்படி தண்டனைக்கு முற்றுப்புள்ளை வைப்பதற்கான அறிவிப்பை சௌதி உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இனி பிரம்படிக்குப் பதிலாக, அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியல்லாத சமுதாய சேவைகள் போன்றவற்றைத் தண்டனைகளாக நீதிபதிகள் விதிப்பார்கள்.
  • அமெரிக்காவின் கலை அறிவியல் அகாதெமியில் இந்திய-அமெரிக்கரான ரேணு கத்தோா் (61) சோ்க்கப்பட்டுள்ளாா்.  கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்களித்த நபா்கள் அமெரிக்க கலை அறிவியல் அகாதெமியில் இணைக்கப்படுவா். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், புலிட்ஸா் விருது வென்றோா் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் அந்த அகாதெமியில் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா்.
  • ”டிஜிட்டல் கரன்சி எலக்ட்ரானிக் பேமெண்ட் (DC/EP) ” என்ற பெயரில் சீனா யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷனை சீனா நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.   ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது பயனர்களின்  வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும். அதில் இந்த பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
  • “நூர் செயற்கைக்கோள்” என்ற பெயரில் ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை  இரண்டடுக்கு காசெத் கலம் மூலம் ஏவி,  வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் ஈரான்  நிலைநிறுத்தியுள்ளது.

பொருளாதாரம்

  • வங்கி சேவைகளை அக்டோபர் 2021 வரையில்  ‘பொது பயன்பாட்டு சேவைகளாக’ (Public Utility Services)   தொழிற்சாலைகள்  தர்க்க சட்டம் 1947 (Industrial Disputes act, 1947) கீழ்  மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சர்வதேச நிதி சேவைகள் அனைத்தையும்  ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக  “சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம்” (International Financial Services Centres Authority(IFSCA)) எனும் புதிய அமைப்பை மத்திய அரசு 27-4-2020 அன்று உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமையவுள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனத்தின் 9.99 % பங்குகளை  ஃபேஷ்புக் (Facebook)  நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
  • கோவாவின் மிகப் பழமையான வங்கியான மாபூஷா நகர்புற கூட்டுறவு வங்கியின் (Mapusa urban co-operative bank of Goa Ltd) உரிமத்தை ரிசர்வ் வங்கி  16-4-2020 அன்று இரத்து செய்துள்ளது.
  • சுட்டுரையில் அதிக நபா்களால் பின்தொடரப்படும் மத்திய வங்கியாக, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 7.45 லட்சம் போ் சுட்டுரையில் ரிசா்வ் வங்கியை பின்தொடா்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்பிஐ-க்கு அடுத்தபடியாக, இந்தோனேசியாவின் ’பேங்க் இந்தோனேசியா’ 2-ஆவது இடத்திலும், மெக்ஸிகோவின் ’ பேங்கோ டி மெக்ஸிகோ’ 3-ஆவது இடத்திலும் உள்ளன.

முக்கிய தினங்கள்

  • உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week)   -  ஏப்ரல் கடைசி வாரம் | மையக்கருத்து 2020-  அனைவரிலும் செயல்படும் தடுப்பூசிகள்  (Vaccines work for All)
  • சர்வதேச நடன தினம் (International Dance Day) - ஏப்ரல் 29   
  • பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான உலக தினம் (World Day For Safety And Health At Work 2020) - ஏப்ரல் 28
  • உலக மிருகங்களுக்கான மருத்துவ தினம் (World Veterinary Day) - ஏப்ரல் 25
  • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) - ஏப்ரல் 23
    • உலக புத்தக தலைநகரம் 2020 (World Book Capital 2020) - கோலாலம்பூர், மலேசியா
    • உலக புத்தக தினமான ஏப்ரல் 23 ஐ முன்னிட்டு #எனது புத்தகம், எனது நண்பன் (#MyBookMyFriendcampaign) என்ற பரப்புரையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - ஏப்ரல் 26  | மையக்கருத்து  2020 - பசுமை எதிர்காலத்திற்காக கண்டுபிடியுங்கள் (“Innovate for a Green Future”)
  • உலக பெங்குயின்கள் தினம் (World Penguin Day ) - ஏப்ரல் 25
  • உலக மலேரியா தினம் (World Malaria Day) - ஏப்ரல் 25
  • முதலாவது ஐ.நா. சர்வதேச பிரதிநிதிகள் தினம் (International Delegate’s Day) - ஏப்ரல் 25
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) - ஏப்ரல் 24
  • உலக சோதனைக் கூட விலங்குகள் தினம் (World day of laboratory animals) - ஏப்ரல் 24
  • உலக நோய்த்தடுப்பு வாரம் 2020 (World Immunization Week 2020)  - ஏப்ரல் 24-30
  • சர்வதேச தகவல் தொழில்நுட்பத்தில் பெண்குழந்தைகள் தினம் (International Girls in ICT day)   -  ஏப்ரல் 23
  • தேசிய தீயணைப்பு சேவைகள் தினம்  (National Fire Service Day )   - ஏப்ரல் 14
  • ஐக்கிய நாடுகளவை ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் தினம்  - ஏப்ரல் 23
  • புவி தினம் (Earth Day) - ஏப்ரல் 22 | மையக்கருத்து 2020- ‘பருவநிலை செயல்பாடு’ (“Climate Action”)
  • உலக படைப்பாற்றல் மற்றும் கண்டு பிடிப்பு தினம் (World Creativity and Innovation Day)   - ஏப்ரல் 21
  • தேசிய குடிமைப் பணிகள் தினம் (National Civil Service Day) - ஏப்ரல் 21

விருதுகள்

நியமனங்கள்

  • பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (Public Enterprises Selection Board(PESB) ) தலைவராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய கப்பல் போக்குவரத்து வாரியத்தின் (National Shipping Board (NSB)) தலைவராக மாலினி சங்கர் (Malini Shankar.) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (International Motorcycle Manufacturers Association (IMMA)) தலைவராக  இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊழல் கண்காணிப்பு ஆணையராக (vigilance commissioner) , பிரபல வங்கி அதிகாரி சுரேஷ் என்.படேல் (Suresh N Patel) 29-4-2020 அன்று பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு, தில்லியில் இருந்து காணொலி வழியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவா் சஞ்சய் கோத்தாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
  • ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஒடிஸா உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் மற்றும் மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஸ்வநாத் சோமாதர் ஆகியோர்   27-4-2020 அன்று  பதவியேற்றுக் கொண்டனா்.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி 25-5-2020 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

அறிவியல் தொழில்நுட்பம்

  • ”HCARD” (Hospital Care Assistive Robotic Device) என்ற பெயரில் கோவிட்-19 சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிடும் ரோபோவை   துர்க்காப்பூரிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர். (CSIR-Council of Scientific & Industrial Research)   ஆய்வகம் உருவாக்கியுள்ளது.
  • ”ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் கொண்டு இயங்கும் பேருந்துகளை’ (Hydrogen Fuel Cell based buses) தேசிய தெர்மல் பவர் கார்பரேசன் (National Thermal Power Corporation)  தயாரித்துள்ளது.
  • ”எக்ஸ்-ரே ஸ்கேன்” (X-ray scan) மூலமாக ஐந்து நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான  மென்பொருளை   ரூர்கே ஐ.ஐ.டி.   பேராசிரியர்    கமல் ஜெயின் (Kamal Jain) என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
  • "ரூதார்” (Rudhaar) என்ற பெயரில் குறைந்த விலை வெண்டிலேட்டரை மும்பை ஐ.ஐ.டி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீநகர், இஸ்லாமிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து    உருவாக்கியுள்ளனர். 
  • ”வார்ட் பாட்” ( ‘WardBot’ ) என்ற பெயரில் கோவிட்-19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்குவதற்கான ரோபோவை  ஐ.ஐ.டி ரோபாரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • ”ஃபெலூடா” ( ”Feluda” ) என்ற பெயரில் குறைந்த விலை கொரானா வைரஸ் சோதனைக் கருவியை  CSIR-IGIB ( Genomics and Integrative Biology, The Council of Scientific and Industrial Research)  அமைப்பு  உருவாக்கியுள்ளது.
  • “ஃபக் ஸ்னிப்பர்” ( “bug sniffer” ) என்ற பெயரில் பாக்டீரியா நோய்க்கிருமிகளை  30 நிமிடத்தில் கண்டுபிடிப்பதற்கான கருவியை  மகாராஷ்டிர மாநிலம் பூனேவைச் சேர்ந்த ஆகாகர் ஆராய்ச்சி நிறுவனம் (Agharkar Research Institute (ARI) உருவாக்கியுள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த "இன்ஜெனியூயிட்டி" என்ற  பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  • “ருஹ்தார்” (RUHDAAR) என்ற குறைந்த செலவிலான, உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய செயற்கை சுவாசக் கருவியை  இந்தியத் தொழில்நுட்பக்கழகம் (IIT), மும்பை; தேசிய தொழிநுட்பக்கழகம் (NIT), ஸ்ரீநகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இஸ்லாமிக் பல்கலைக்கழகம், அவந்திபுரா, புல்வாமா, ஜம்மு காஷ்மீர் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது.
  • மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தை (Mobile Virology Research and Diagnostics Laboratory (MVRDL)) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 23-4-2020 அன்று  திறந்து வைத்தார்.  இதனை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழக மருத்துவமனை (ESIC) மற்றும் ஹைதராபாத் தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளன.  

விளையாட்டு

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மால் (Umar Akmal) மேட்ச் பிக்சிங் குற்றசாட்டுகளுக்காக  அடுத்த மூன்றாண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
  • உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின்(Badminton World Federation (BWF)) “I am Badminton” என்ற பரப்புரைக்கான நல்லெண்ணத் தூதுவராக இந்தியாவைச் சேர்ந்த  உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து  22-4-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ’பிளிட்ஸ் கோப்பை 2020’ ( Blitz Cup 2020 ) செஸ் போட்டியில் ஈரானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ‘அலிரேஷா ஃபிரோஷ்ஜா’ (Alireza Firouzja)  தற்போதைய உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த  ஸ்வன் மாக்னஸ் கார்ல்சனை (Sven Magnus Oen Carlsen) தோற்கடித்துள்ளார்.
  • அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கர்நாடக முன்னாள் வீரர் ஜே. அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தகங்கள்

  • ” Sayajirao Gaekwad III: The Maharaja of Baroda” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உமா பாலசுப்ரமணியம்   
  • “Midnight in Chernobyl: The Untold Story of the World’s Greatest Nuclear Disaster” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஹிக்கின்பாதம்ஸ் (Adam Higginbotham)

----------------------------------------------------------------

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.