-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020

TNPSC Current Affairs 3-5 April 2020
இந்தியா
  • ”என்.சி.சி யோதான்” (‘Exercise NCC Yogdan’) என்ற பெயரில் தேசிய மாணவர் படை ( NCC )யின்   உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள் தங்களை கொரோனா ஒழிப்புப் பணியில் தன்னார்வலராக இணைத்து , மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைத்துப் பணியாற்றுவதற்கான திட்டம்  2-4-2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா நோய்க்கான சிகிச்சையை  ”ஆரோக்கிய சஞ்சீவானி” (“Arogya Sanjeevani”)  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என  நாட்டிலுள்ள அனைத்து  காப்பீட்டு நிறுவனங்களையும்    இந்திய காப்பீட்டு  மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI))  அறிவுறித்தியுள்ளது. 
  • ”புராஜக்ட் பிராணா” (project Praana) எனப்படும் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ்   கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான  நோயாளிகளுக்கு உதவிடும் வகையிலான, முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கும்   வெண்டிலேட்டருக்கான வடிவமைப்பு மாதிரியை  இந்திய அறிவியல் நிறுவனம் ( Indian Institute of Science (IISc)) (பெங்களூரு)   உருவாக்கியுள்ளது. 
  • சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் ப்ரீத்தி வர்மா  தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கரோனா, கொவைட் எனப் பெயரிட்டுள்ளனர்.
உலகம்
  • கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்து உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராடுவதற்கான தீர்மானம் ஒன்று  (‘Global solidarity to fight the coronavirus disease 2019 (COVID-19))  3-4-2020 அன்று , ஐ. நா. பொது சபையில், இந்தியா உட்பட  188 உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 
  • ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 9-19 நவம்பர் 2019 தினங்களில் நடைபெறுவதாக இருந்த  ‘ஐ.நா. பருவநிலை மாநாடு 2020” (26th session of the Conference of the Parties (COP 26) to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC))   2021 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா வைரஸ் தாக்கத்தினால்  நடப்பு நிதியாண்டிற்கான உலக பொருளாதார வளர்ச்சி 1% ஆக இருக்கும் என  ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகார அமைப்பு (United Nations (UN) Department of Economic and Social Affairs (DESA) World Economic Forecasting Model )  மதிப்பிட்டுள்ளது. ( முன்னதாக  2020 ஆம் ஆண்டில் உலகளவில்  2.5% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என இவ்வமைப்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது) 
பொருளாதாரம் 
  • நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம்   4 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது. கரோனா வைரஸால் ஏற்பட்ட சா்வதேச இழப்பு 2 டிரில்லியன் டாலா் முதல் 4.1 டிரில்லியன் டாலா் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3-4.8 சதவீதத்துக்கு சமமானதாகும் என ஆசிய வளா்ச்சி வங்கி 2020-க்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • கூ.தக. : மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டில இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • EMI விரிவாக்கம்  - Equated Monthly Installment 
  • பிரதம மந்திரி குடிமக்கள் அவசர கால நிதி ( Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM-CARES FUND) ) க்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு  “வருமான வரி சட்டம் 1961” ( Income Tax (IT) Act, 196) இன் 80G பிரிவின் கீழ் 100% வருமான வரி விலக்கு  வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக இந்தியாவுக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடியை (1பில்லியன் டாலர்கள்)  அவசரகால நிதியாக வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 
    • உலக வங்கி முதற்கட்டமாக  உதவியாக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர்கள், ஆப்கானுக்கு 100 மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்கி உள்ளது. இந்தியாவுக்குக்தான் அதிக அவசரகால நிதியாக 1 பில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது. 
நியமனங்கள்
  • ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக ரஜ்னேஷ் ஆஸ்வால் 2-4-2020 அன்று  பதவியேற்றுக் கொண்டாா். அந்த யூனியன் பிரதேசத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று பதவியேற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை அவா் பெற்றுள்ளாா்.
அறிவியல் தொழில்நுட்பம்
  • "ஐவர்மெக்டின்" என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • ”ஜியோ-ஃபென்சிங் மொபைல் செயலி” ( Geo-fencing app) என்ற பெயரில்  க்கொரோனா வைரஸினால் தனிமைப்படுத்தலுக்குள்ளான (quarantine)  நபர்களை  கண்காணிப்பதற்கான மொபைல் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
  • ஸ்பெயின் ஃபுளூ , 1918  : 
    • 102 ஆண்டுகளுக்கு முன்னா், இன்றைய கரோனா நோய்த்தொற்றை போலவே உலகை இன்னொரு கொள்ளை நோய் உலுக்கியெடுத்து. அமெரிக்க ராணுவ முகாமில் முதலில் பரவத் தொடங்கினாலும், அப்போது நடைபெற்று வந்த முதலாம் உலகப் போரில் பங்கேற்காத ஸ்பெயினில் அந்த நோய் குறித்து செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படாமல் வெளி வந்த ஒரே காரணத்தால் ‘ஸ்பெயின் ஃபுளூ’ என்று தவறாகப் பெயரிடப்பட்ட அந்த நோய், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்டவா்களை காவு வாங்கியது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவா்களைவிட அந்த நோய்க்குப் பலியானவா்களின் எண்ணிக்கை அதிகம்.
    • கரோனா நுண்கிருமியை (கொவைட்-19) போலத்தான் ஸ்பெயின் ஃபுளூ நுண்கிருமியும் (ஹெச்1என்1) விலங்கின் உடலில் வளரும் தனது தன்மையை மனித உடலுக்குள் வளரும் வகையில் தகவமைத்துக் கொண்டது.
    • இரண்டு நோய்த்தொற்றுகளுமே இருமல், தும்மலின்போது வெளியேறும் துளிமங்களை சுவாசிப்பதன் மூலமோ, கைகளால் தொடுவதன் மூலமோ பிறருக்கு மிக வேகமாக பரவும் வல்லமை கொண்டவை.
    • தற்போதை விமானப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் படையெடுத்தது என்றால், 1918-ஆம் ஆண்டின் அதிவேக போக்குவரத்து வசதியான நீராவிக் கப்பல்களைப் பயன்படுத்தி ஸ்பெயின் ஃபுளூ உலக நாடுகளை ஆக்கிரமித்தது.
    • அந்த தொற்று நோயும் கரோனாவைப் போலவே மனிதா்களை மூச்சு விடுவதில் சிரமம், இருமல், தும்மல் எனத் தொடங்கி, நிமோனியோ காய்ச்சலுக்குக் கொண்டு சென்று, மரணத்தை நோக்கி இட்டுச் சென்றது.
முக்கிய தினங்கள் 

  • உலக ஆட்டிஷம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day)   - ஏப்ரல்  2 
விளையாட்டுக்கள்
  • மூன்றாவது, ஆசிய இளைஞர் விளையாட்டுக்கள்  (Asian Youth Games)  20-28 நவம்பர் 2021 தினங்களில் சீனாவில் நடைபெறவுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுண்சில் (Olympic Council of Asia (OCA) )  அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.