-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 11-20 May 2020

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 11-20 மே 2020 

தமிழ்நாடு

  • மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
  • திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு வட்டத்தில்  உள்ள நல்லூர் கிராமப்பகுதியில்   ரூ.337 கோடியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19-5-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோகாரி கோவார் வண்ணங்கள் (Sohrai Khovar painting ) மற்றும் தெலுங்கானாவின்  தெலியா ரூமால் ஆடைகள் (Telia Rumal cloth )  ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம்  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மன்னாா் வளைகுடாவில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 எம்எல்டி) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.இந்தத் திட்டமானது, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான க.மீனாட்சிசுந்தரம்14-5-2020 அன்று காலமானார்.  இவர், வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்னார்.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில் அர்ச்சர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 8.39 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு 13-5-2020 அன்று நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் மீனவா் நல வாரியம், பட்டாசு தொழிலாளா், சிறு வணிகா்கள் நல வாரியம், பழங்குடியினா் நலவாரியம், பூஜாரிகள் நல வாரியம், திரைப்படத் தொழிலாளா் நல வாரியம் உள்ளிட்ட 14 வகையான நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போன்றே, இந்தத் தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கும் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

  • ”சரண் படுகா” (Charan Paduka) என்ற பெயரில் தனது மாநிலத்தினூடாக நடந்து செல்லும்  புலம் பெயர் தொழிலாலர்களுக்கு  இலவசமாக  காலணி வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • விசாகப்பட்டிணம் எல்.ஜி.பாலிமர்  நிறுவனத்தின் , ஸ்டைரின் (styrene)  விஷவாயு  கசிவு தொடர்பாக விசாரிக்க ‘நீரப் குமார் பிரசாத்’ (Neerabh Kumar Prasad ) தலைமையில் 5 நபர் குழுவை ஆந்திரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.
  • இந்தியாவின் குழந்தைகள் இறப்பு வீதம் (infant mortality rate (IMR) )  2018 ஆம் ஆண்டில் 32 ஆக உள்ளது.  இதற்கு முந்தைய ஆண்டில் (2017) இந்த வீதம் 33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் , 2009 ஆம் ஆண்டில்  50 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு வீதம் 2018 ல் 32 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது.
  • இந்தியாவில் முதல் மாநிலமாக, முதல் தகவல் அறிக்கையை (First Information Report(FIR)) பொது மக்கள் இல்லங்களிலிருந்தே 100 என்ற எண்ணை அழைப்பதன்  மூலம் விண்ணப்பிப்பதற்கான ’ஆப்கே திவார் யோஜனா’  (Aapke Dwar Yojana‘(FIR at your doorstep) )  திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • பிரதமர் வய வந்தனா திட்டத்தை (‘Pradhan MantriVayaVandanaYojana’ ) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பிரதம மந்திரியின் மத்ஸய சம்ப்பட திட்டத்தை (Pradhan Mantri Matsya Sampada Yojana) – நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை  20-5-2020 அன்று  அனுமதி அளித்துள்ளது.
    • இந்தியாவில் மீன்வளத் தொழிலில் நீடித்த மற்றும் பொறுப்புடைமையான வளர்ச்சி மூலம் நீலப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான இந்தத் திட்டத்தில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன: அவை மத்திய பிரிவுத் திட்டம் (Central Sector Scheme) மற்றும் மத்திய நிதி உதவித் திட்டம் (Centrally Sponsored Scheme) ஆகும்.  இந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.20,050 கோடி ஆகும்.  இதில்
      • மத்திய அரசின் பங்கு ரூ. 9,407 கோடி
      • மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி மற்றும்
      • பயனாளிகளின் பங்கு ரூ.5,763 கோடி ஆகும்.
    • இந்தத் திட்டத்தின் செயலாக்க காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது இந்தத் திட்டமானது 2020-2021 நிதியாண்டில் இருந்து 2024-2025 நிதியாண்டு வரை நடைமுறைப்படுத்தப்படும்.
பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டத்துக்கு கீழ்வரும் முறையில் நிதி அளிப்பு இருக்கும்:
  • மத்திய பிரிவுத் திட்டம்
    • அ. செயல்திட்டம் / அலகு முழுமைக்குமான செலவை மத்திய அரசு ஏற்கும் (அதாவது 100% மத்திய அரசு நிதியுதவி)
    • ஆ. திட்டமானது பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருந்தால் அதாவது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (National Fisheries Development Board - NFDB) போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தனிநபர் / குழு சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொதுப்பிரிவில் அலகு / செயல்திட்ட செலவில் 40 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும். எஸ்சி / எஸ்டி / மகளிர் பிரிவுக்கு 60 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும்.
  • மத்திய நிதி உதவித் திட்டம்
    • சிஎஸ்எஸ் பிரிவின் கீழ் பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருக்காத துணைக்கூறுகள் / நடவடிக்கைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்தும். செயல்திட்டம் / அலகின் மொத்த செலவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம்.
  • பயனாளியைத் சார்ந்த திட்டங்களுக்கு அதாவது சிஎஸ்எஸ் கூறின் கீழ் தனிநபர் / குழு நடவடிக்கைகள் தொடர்பான துணைக்கூறுகள் / செயல்பாடுகள் மாநில / யூனியன் பிரதேசங்களால் நடைமுறைப்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மொத்தமாகச் சேர்ந்து பொதுப்பிரிவில் செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 40 சதவீதம் என்ற அளவுடன் இருக்கும்.  எஸ்சி / எஸ்டி / பெண்கள் ஆகிய பிரிவுக்கு செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 60 சதவீதம் என்று இருக்கும்.  அரசு நிதி உதவி என்பது மத்திய அரசு மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு இடையில் கீழ்வரும் விகிதங்களில் பகிரப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம் (யூனியன் பிரதேசத்தின் பங்கு ஏதும் இல்லை.
(ஆதாரம் : https://pib.nic.in/PressReleasePage.aspx?PRID=1625314)
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special Trains) மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • எல்லைப்புறக் கட்டமைப்பு தொடர்பாக லெப். ஜெனரல் டி.பி. ஷேக்கட்கர் (ஓய்வு) தலைமையிலான நிபுணர்கள் கமிட்டி (Shekatkar Committee) அளித்த மூன்று முக்கியப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு அமல் படுத்தியுள்ளது. எல்லைப்புறப் பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துதல், தொடர்பான பரிந்துரைகளாக இவை உள்ளன.
    • எல்லைப்புறக் கட்டமைப்பு உருவாக்குதல் தொடர்பான விஷயத்தில், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation – BRO) அதிகபட்சத் திறனுக்கும் அதிகமான சாலை அமைக்கும் பணிகளை வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் செயல்படுத்தலாம் என்று, கமிட்டி அளித்த பரிந்துரையை அரசு அமல் செய்துள்ளது. ரூ.100 கோடிக்கும் மேலான மதிப்புள்ள அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துவதற்கு பொறியியல் கொள்முதல் ஒப்பந்த (ஈ.பி.சி.) நடைமுறையைk கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்முதல்கள் மூலம், பி.ஆர்.ஓ.வுக்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.100 கோடி வரையில் கொள்முதல் செய்ய அதிகாரத்தை உயர்த்தி, நவீன கட்டுமானத் தளங்கள், சாதனம் மற்றும் இயந்திரங்கள் அறிமுகம் தொடர்பான பரிந்துரை அமல் செய்யப் பட்டுள்ளது.  சாலைகள் அமைத்தலை விரைவுபடுத்த Hot-Mix Plant 20/30 TPH வசதியை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு பெற்றுள்ளது. கடினமான பாறைகளை அறுப்பதற்கு தொலைவில் இருந்து ரிமோட் மூலம் இயக்கக் கூடிய hydraulic Rock Drills DC-400 R  இயந்திரத்தையும், பனிக் கட்டிகளை வேகமாக அகற்றுவதற்கு, தானே முன்னேறிச் சென்று பனிக்கட்டியை அறுத்தல் மற்றும் தள்ளுதலுக்கான எப்-90 வகை இயந்திரங்களும் வாங்கப் பட்டுள்ளன.
    • சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, துல்லியமாக வெடி வைப்பதற்கு புதிய வெடி வைப்புத் தொழில்நுட்பம், மண்ணை உறுதிப்படுத்த ஜியோ-டெக்ஸ்டைல்ஸ், நடைபாதைகளுக்கு சிமெண்ட் பிடிமானப் பலகைகள், மேற்பரப்புக்கு பிளாஸ்டிக் பூச்சு கொண்ட கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கள அதிகாரிகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை அதிகரித்துக் கொடுத்திருப்பதன் மூலம், பணிகளுக்கான நிதி வழங்கும் பணிகள் வேகமாக மேம்பட்டுள்ளன.
  • ”பிரதமர் மின்-கல்வி” (”PM e-VIDYA”) என்ற பெயரில் டிஜிட்டல்/இணையம்/காற்றில் வரும் கல்வி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஒன்று சேர்க்கும் ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மிஷன் சாகர்” (Mission Sagar)  எனும் திட்டத்தின் கீழ்,  கோவிட் 19 பெருந்தொற்று  பாதிப்பான  , இந்தியாவிடம் நட்புறவு கொண்ட  5 தீவு நாடுகளுக்கு (மாலத்தீவு, மொரிசியஸ், செஷல்ஸ்,  மடகாஸ்கர் மற்றும் காமரோஸ்)   இந்திய அரசு  உதவியளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்  ஐ என் எஸ் கேசரி, 580 டன் உணவுப் பொருட்களுடன், மாலத்தீவின் மாலே துறைமுகத்துக்கு  மே  12 ம் தேதி அன்று சென்று சேர்ந்தது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனடைந்த ஒரு கோடியாவது நபர் -  பூஜா தாபா (Pooja Thapa) , மேகாலயா
    • கூ.தக. : 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமாக கருதப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சையை ஏழைகள் இலவசமாக பெற முடியும். 
  • இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19-5-2020 அன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
  • 'அம்பான்' ('Amphan')  புயல் :  வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்'  ('Amphan') புயல் ஒடிசா   மற்றும் மேற்கு வங்கம் இடையில் 20ம் தேதி கரையை கடந்தது.
    • கூ.தக. : ஆம்பன் புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - தாய்லாந்து .  (2004 ஆம் ஆண்டில் 8 நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 64  பெயர்களின் பட்டியலில் , இதுவே கடைசி பெயராகும்.
புயல்களுக்கு பெயரிடும் முறை பற்றி...
  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்த பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள் லெஹர் (அலை),மேக், சாஹர், வாயு ஆகியவையாகும்.
  • 2000 ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. 5 முறை புயல் ஏற்பட்டது.
  • ’ஸ்நேகர் போரோஷ்’ (‘Sneher Porosh’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையால் புலம் பெயர் தொழிலாளருக்கு ஏற்படுட்டுள்ள  துயர் நீக்க திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’ப்ரோசெஸ்டா” ( ‘Prochesta’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையில் அமைப்புசாரா தொழிலாளருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’மதிர் சம்ரிஷ்டி’ (‘Matir Smristi’) என்ற பெயரில் 50,000 ஏக்கர் தரிசு நிலங்களை  அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்புடன்   தோட்டக்கலை மற்றும்  மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான திட்டத்தை மேற்கு வங்க அரசு 14-5-2020 அன்று அறிவித்துள்ளது.
  • ’உலக ஆற்றல் மாறுநிலை பட்டியல் 2020’ (global Energy Transition index(ETI) 2020) ல் இந்தியா 74 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum(WEF)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • GOAL’ (Going Online As Leaders Programme) என்ற பெயரில்  மலைவாழின இளைஞர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு திட்டத்தை மத்திய  பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும்  ஃபேஷ்புக் (Facebook)  நிறுவனம் இணைந்து  15-5-2020 அன்று தொடங்கியுள்ளன.
  • ”சமர்த்” (SAMARTH) என்று பெயரிடப்பட்டுள்ளநிறுவனங்கள் வள திட்டமிடல் என்ற இணைய தள செயல்பாட்டை ,  மனிதவளத் துறை அமைச்சகம்,  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தேசிய கல்வித் திட்டத்தின் (NMEICT - National Mission of Education in Information and Communication Technology Scheme ) கீழ் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரமான திறந்த ஆதாரக் கட்டமைப்பாகும்.இது பல்கலைக்கழகம் / உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரிய, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டமானது, குருக்ஷேத்ராவிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின்(NIT Kurukshetra)  மூலம்  செயல்படுத்தப்படுகிறது.
  • கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” (Indian Coast Guard Ship ‘Sachet’ -  ICGS)  மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் ( interceptor boats (IBs))  சி -450 (C-450) மற்றும் சி -451(C-451)  ஆகியவற்றை கோவாவில் இருந்து 15-5-2020 அன்று  காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும்.  முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் தரம் வாய்ந்த திசைகாட்டும் மற்றும் தொடர்பியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • 105 மீட்டர் நீளமுள்ள ”சாஷே” கப்பல் தோராயமாக 2350 டன் பாய்பொருளை இடம்பெயர்க்கிறது மற்றும் 26 நாட் என்ற அதிகபட்ச வேகத்தை அடைவதற்காக இரண்டு 9,100 கிலோ டீசல் எஞ்சின்கள் மூலம் உந்து சக்தி தரப்படும். இதன் தாங்கும் ஆற்றல் 6,000 நாட்டிகல் மைல் ஆகும்.
  • நாட்டிலேயே முதல் மாநிலமாக அரியானா மாநிலம் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை அரியானா மாநிலம் 15-5-2020 அன்று  தொடங்கியுள்ளது.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் (www.Champions.gov.in) இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும்.சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்

வெளிநாட்டு உறவுகள்

  • கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு 200 செயற்கை சுவாசக் கருவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
  • 73வது உலக சுகாதாரக் கூட்டத்தில் (73rd World Health Assembly) 18-5-2020 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
  • உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், காலாபாணி உள்ளிட்ட பகுதிகள் தொடா்பாக இந்தியா-நேபாளம் இடையே பிரச்னை காணப்படும் சூழலில், அப்பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் நேபாளம் இணைத்துள்ளது.
    • இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. அதேபோல், அப்பகுதிகள் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தைச் சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
    • இந்தச் சூழலில், திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்வதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சாா்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.
    • இந்நிலையில், காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இணைக்க நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியது.
  • உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் 22-05-2020 அன்று பதவியேற்றார். தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்தயொட்டி, இவ்வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
  • பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் பணியில் உள்ள ஈடுபட்டுள்ள ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்புக்கு இந்தியா 2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.15.13 கோடி) நிதியுதவி அளித்துள்ளது. ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் குழுவுக்கு இந்தியா அளித்து வரும் நிதி ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு 1.25 மில்லியன் டாலா் அளிக்கப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு இதுவே 5 மில்லியன் டாலா் நிதியுதவியாக அதிகரிக்கப்பட்டது. இப்போது 2 மில்லியன் டாலா் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 மில்லியன் டாலா் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருந்துகளையும் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க இருக்கிறது.
  • இரவீந்திர நாத் தாகூரின் 159 வது பிறந்ததினத்தையொட்டி(7 May 1861) , அவரின் பெயரை இஸ்ரேல் நாட்டின், டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘iFeel-You’ என்ற பெயரில் சமூக இடைவெளியை பேணுவதற்கான கையில் அணியும் கருவியை  இத்தாலி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Italian Institute of Technology (IIT)  ) தயாரித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்தனர்.
  • இஸ்ரேலுக்கான சீனத் தூதா் டூ வெய் (58), டெல் அவிவ் நகரிலுள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு 17-5-2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டது. ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ அண்ட் ஒயிட் கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமா் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆட்சி அதிகாரத்தைப் பகிா்ந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 18 மாதங்களுக்குப் பிறகு பென்னி கான்ட்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்பாா்.
  • உலக சுகாதார சபையில் தைவான் இடம் பெறுவதற்கு நியூஸிலாந்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அந்த நாட்டை தங்களது அங்கமாக சீனா கருதி வருகிறது. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான உலக சுகாதார சபையில் தைவானுக்கு இடமளிக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தி வருகிறது. எனினும், அந்த சபையில் இடம் பெற்றால்தான் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்று தைவான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு, நியூஸிலாந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
  • ஜொ்மனியில் பயன்பாடு நிறுத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் இரு குளிரூட்டு கோபுரங்கள் அழிக்கப்பட்டன.மின்சாரத்துக்காக அணு மின் நிலையங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த ஜொ்மனி முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நாட்டு அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் அனைத்தையும் மூட ஜொ்மனி அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு 13-5-2020 அன்று காணொலி முறையில் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாட்டை மாஸ்கோவில் ஜூன் 9, 10 தேதிகளில்தான் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை கருதி, முன்னதாகவே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. 26 ஏப்ரல் 1996 ல்  நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அமைப்பில் இணைந்தன.
  • பல்வேறு அகராதிகளின் 2019 இன் சிறந்த ஆங்கிலச் சொற்கள் :
    • கிளைமேட் எமர்ஜென்சி (Climate emergency) - ஆக்ஸ்போர்டு
    • அப்சைக்கிளிங் (upcycling) - கேம்பிரிட்ஜ்
    • தே (they) - மெரியம் வெப்ஸ்டர்
    • கிளைமேட் ஸ்ட்ரைக் (Climate strike) - காலின்ஸ்
    • எக்சிஸ்டென்சியல் (existential) - டிக் ஷனரி இணையதளம்
    • ’சம்விதான்’ (Samvidhan) - ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்திச் சொல்

விருதுகள்

  • இங்கிலாந்து அரசின் ‘அலெக்சாண்டர் தால்ரிம்பிள் விருது 2019’ (Alexander Dalrymple Award 2019)  இந்திய அரசின் தேசிய ஹைட்ரோகிராபர்   (National Hydrographer to the Government of India)  வைஸ் வினய் பாட்வர் (Vice Admiral Vinay Badhwar) க்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation(FIH) ) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் துருவ் பத்ரா (Narinder Dhruv Batra)  மே 2021 வரையில் தொடர்வதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக எயிட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day) - மே 18
  • சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day) - மே 18
  • உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day) - மே 17
  • உலக தொலைதொடர்பு மற்றும் தகவல் சமுதாய தினம் (World Telecommunication and Information Society Day) - மே 17
  • சர்வதேச அமைதியாக இணைந்து வாழும் தினம் (International Day of Living Together in Peace)  - மே 16
  • சர்வதேச ஒளி தினம் (International Day of Light) - மே 16
  • தேசிய டெங்கு தினம் (National dengue day) - மே 16
  • தேசிய அருகிவரும் விலங்கின தினம் (National Endangered Species Day) - மே 15
  • சர்வதேச குடும்ப தினம் (International Day of Families) - மே 15
  • சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) - மே 12  | மையக்கருத்து 2020 - செவிலியர் :  தலைமைக்கான ஒரு குரல் -  உலகின் ஆரோக்கியத்திற்கான சேவை (Nurses: A voice to lead - Nursing the World to Health)
  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) - மே 11
    • கூ.தக. : 11-5-1998 அன்று பொக்ரான் அணு குண்டு சோதனை நடைபெற்ற தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

 அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ரெயில் பாட்” (“RAIL-BOT” (R-BOT)) என்ற பெயரில் இரயில்வே மருத்துவமனை மருத்துவர்களுக்கு உதவிடும் ரோபோவை தென் மத்திய இரயில்வே மண்டலம் (South Central Railway) உருவாக்கியுள்ளது.
  • ”ட்ரோக்லோமைசிஸ் டிவிட்டரி” ( ‘Troglomyces Twitteri’ ) என்ற பெயரில் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையை (parasitic fungus) டென்மார்க்கைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் அனா சோஃபியா ரெபோலேய்ரா (Ana Sofia Reboleira) கண்டுபிடித்துள்ளார்.
  • ”ஸ்வஸ்த் வாயு” (‘Swasth Vayu’) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டரை பெங்களூரிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர்.  - தேசிய  விண்வெளி ஆய்வகம் (Council of Scientific & Industrial Research – National Aerospace Laboratories(CSIR-NAL)) உருவாக்கியுள்ளது.
  • ’ஜிங்யுன்-2 01, 02’ (Xingyun-2 01, 02) எனும் இரண்டு தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை சீனா   தனது குயாஷோ -1 A (Kuaizhou-1A) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
  • “போஸ்கியூ” (Bosque) என்ற பெயரில், மேகக் கணினியின் (cloud computing) செயற்கை நுண்ணறிவு  நிரல்களை வடிவமைப்பதற்கான புதிய  நிரலாக்க மொழியை (programming language)  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய இரண்டு செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ”செவிலி ரோபோ” என்ற பெயரில்,  நேரடி மருத்துவ பணியாளர்களை நோய் தொற்றிலருந்து காத்திடும் நோக்கில்  இந்துஸ்தான் (HITS) பல்கலைகழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (Centre for Automation and Robotics-ANRO)  ஒரு ரோபோவை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. நோயாளிகளுக்கு நேரடி உதவி, கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பணிகளை மேற்கொள்வதால் 'செவிலி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு ரோபோட் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், மேலும் 4 ரோபோட்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த முயற்சிக்கு ரெனால்ட் நிஸ்ஸான் துணை நின்றது

விளையாட்டுகள்

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் , ’ஃபெட் கப் ஹார்ட் விருது 2020’ (Fed Cup Heart Award 2020) பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையை சானியா மிர்ஷா (Sania Mirza) பெற்றுள்ளார்.
  • 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை (U-17 Women’s World Cup) கால்பந்து போட்டி 17 பிப்ரவரி 2021 முதல் 7 மார்ச் 2021 வரையில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • கோவிட்-19 ஊரடங்கிற்க்குப் பின்னர்  விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி கட்டுப்பாடுகளுக்கான  வரையறைகளை வகுப்பதற்காக   இந்திய விளையாட்டு ஆணையத்தின்  செயலர் ரோகித் பரத்வாஜ் (Rohit Bharadwaj) தலைமையில்  6 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது. கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என டாக்டா் பீட்டா்ஹாா்கோா்ட் தலைமையிலான மருத்துவக் குழு எச்சரித்தது. இதனால் உமிழ்நீரை பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • Wuhan Diary: Dispatches from a Quarantined City” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஃபங்க் ஃபங்க் (Fang Fang)
  • “Fear of God” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வதான் (Vadhan)   எனும் புனைப்பெயரைக் கொண்ட  பொம்ம தேவரா சாய் சந்த்ரவதன் (Bomma Devara Sai Chandravadhan) 

பொருளாதாரம்

  • ”தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு” ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
    • முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி
      • பி.எப். நிறுவனத்துக்கு - ரூ.2,800 கோடி
      • பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி
      • நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி - ரூ 30,000 கோடி
      • என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி
      • மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி
      • டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி
    • இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி
      • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி
      • முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி
      • சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி
      • CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி
      • நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி
      • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி
    • மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி
      • குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி
      • பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி
      • ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி
      • விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி
      • கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி
      • மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி
      • தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி
    • நான்காம் , ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி
      • நம்பகத்தன்மை, இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி
      • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி
    • பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை (PM CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations) Fund Trust), கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்காக ரூ.3,100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரூ.3,100 கோடியில் செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடியும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.100 கோடியும் பயன்படுத்தப்படும்.
      • கூ.தக. : பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை அறக்கட்டளை மார்ச் 27, 2020-இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக (அலுவல்சாரா) பிரதமரும், மற்ற உறுப்பினர்களாக (அலுவல்சாரா) (ex officio) பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் இருப்பர்.
    • கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக ”பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி” இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி அளித்தது.


கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுகட்டமைப்பு செய்ய ரூ.20 இலட்சம் கோடியில் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இணையான வகையில்)  சுயசார்பு பாரதம் திட்டம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் ) (“Atmanirbhar Bharat Abhiyaan” / self-reliant India Movement))  என்ற பெயரில்  விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி 12-05-2020 அன்று அறிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான ஐந்து தூண்களாக  பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம்,  துடிப்புள்ள ஜனநாயகம் மற்றும் தேவைகள் ஆகியவற்றை பிரதமர் அறிவித்துள்ளார்.  இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் வருமாறு. Click here to Read in details


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.