-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Group 2 / 2A 2021 புதிய பாடத்திட்டத்திற்கு தயாராவது எப்படி ?

how to prepare for tnpsc group 2 exam new syllabus
How to prepare for TNPSC Group 2, 2A 2021 New Syllabus ?
 ”அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க வேலையாக இருக்க மேண்டும்”  என்று கூறுவார்கள்.   என்ன தான் தனியார் துறைகள் அதிக ஊதியம் வழங்கினாலும்,   பணி திருப்தி (job satisfaction) மற்றும்  பணி பாதுகாப்பு (job security) போன்றவற்றில் அரசுப் பணி போன்று வராது.  மேலும்,  மக்களுக்கு சேவை செய்வதற்கான நேரடி வாய்ப்பு, அரசுப் பணியாளர்களுக்கே வழங்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் , அரசு ஊழியர்களின் பணிகள் எவ்வளவு விலை மதிப்பற்றவை என்பதை நாம் அறிவோம். மேலும், தற்போதைய சூழலில் ,  பெரும்பாலான இளைஞர்களின் பார்வை  அரசு வேலைகளை நோக்கி திரும்பியுள்ளது அதிக போட்டியையே உருவாக்கும்.   இங்கே வழங்கப்பட்டிருக்கும்   வழிமுறைகளைப் பின்பற்றி தீவிரமான கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் படித்தால் நீங்கள் எந்த ஒரு பயிற்சி நிறுவங்களுக்கும் செல்லாமலேயே, குரூப் 2,2A முதனிலைத் தேர்வில் (Preliminary exam) எளிதாக வெற்றி பெற இயலும். 
TNPSC குரூப் 2 (Interview) தேர்வின் கீழ் வரும் பதவிகள் வருமாறு 
 (10.08.2018 வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பின் படி) 
  • Industrial Co-operative Officer in the Industries and Commerce Department
  • Deputy Commercial Tax Officer
  • Probation Officer in Social Defence Department
  • Junior Employment Officer
  • Probation Officer in Prison Department
  • Assistant Inspector of Labour in the Labour Department
  • Sub Registrar, Grade-II
  • Special Assistant in the Vigilance and Anti corruption Department
  • Municipal Commissioner, Grade-II
  • Assistant Section Officer in Secretariat
  • Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department
  • Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments Administration Department
  • Assistant Inspector in Local Fund Audit Department
  • Handloom Inspector in Handlooms and Textiles Department
  • Senior Inspectors in Milk Production and Dairy Development Department
  • Senior Inspector of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies
  • Supervisor / Junior Level-11 Superintendent in Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department
  • Audit Assistant in Accounts Branch of Highways and Rural Works Department
  • Executive Officer, Grade-II Level-8 in Town Panchayats Department, Tirunelveli District
  • Revenue Assistant in Revenue Department

TNPSC குரூப் 2A (Non-Interview) தேர்வின் கீழ் வரும் பதவிகள் வருமாறு 
 (27.04.2017 வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பின் படி) 
  • Personal Clerk in Secretariat and TNPSC
  • Steno-Typist in Tamil Nadu Legislative Assembly
  • Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service, Divisions of Commercial Taxes Department and Tamil Nadu Secretariat Service / Tamil Nadu Public Service Commission/ Legislative Assembly Secretariat Service
  • Lower Division Clerk in Tamil Nadu Legislative Assembly Secretariat
முதன்மைத் தேர்வில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் எனென்ன ? 
TNPSC  குரூப் 2 மற்றும் 2A தேர்வு முறை மற்றும் தேர்விற்கான பாடத்திட்டத்தில்  செப்டம்பர் 2019 ல் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டதை (https://www.tnpscportal.in/2019/09/tnpsc-group-2-syllabus-change-september-2019.html) நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, 
  • முதனிலைத் தேர்வில் (Preliminary Exam)  நீண்டகாலமாக இருந்துவந்த   மொழி (பொதுத்தமிழ் / General English) தாள்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 200 மதிப்பெண்களுடன் ஒரே பொது அறிவுத் தாளாக  மாற்றப்பட்டுள்ளது
  • TNPSC தேர்வு வரலாற்றில் முதல் முறையாக அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் மற்றும் அலகு – IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என இரண்டு புதிய அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே TNPSC தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டத்தின் படி, முதனிலைத் தேர்வுக்கு (Preliminary) தயாராக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள தேவையில்லை, அலகு 8,9 மட்டுமே கூடுதலாக  படித்தாலே போதுமானது. ஆனால்,  இப்போது தான் புதிதாக TNPSC தேர்வுகளுக்கு தயாராவோருக்கு , இந்த புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது ? எப்படி துவங்குவது ? என பலவிதமான குழப்பங்கள் இருக்கும். ஆகவே இந்த வழிகாட்டி கட்டுரை  புதிய போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டே எழுதப்படுகிறது.  


'புதிய பாடத்திட்டம், எப்படி தயாராவது ?' என்று பதட்டத்துடன் இருக்கிறீர்கள் எனில், இனிமேல் அந்த கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல பள்ளிப் பாட புத்தகங்களே உங்கள் வெற்றியின் மந்திரம். அதற்காக நீங்கள் வேறு எந்த கையேடுகளையோ, குறிப்புகளையோ படிக்காதீர்கள் என்று கூற வரவில்லை. ஆறாவது முதல் பத்தாவது வரையிலான அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் 11,12 வகுப்புகளின் குறிப்பிட்ட பாடப்புத்தகங்களை  ஒரு வரி கூட விடாமல்  குறிப்பெடுத்து படித்து முடித்து விட்டு, நீங்கள்  அதற்கு மேல்  என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள். 

Group 2 தேர்வைப் பொறுத்தவரை பொது அறிவுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பட்ட படிப்பு தரத்தில் (degree standard) இருக்கும். அதற்காக நீங்கள் அறிவியல் என்றால் BSc பாடத்திட்டங்களையும், வரலாறு, பொருளாதாரம், அரசியல் என்றால் BA பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும் என்று தேவையில்லை. கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களிலே தான் கேட்கப்படும். ஆனால், வெளிப்படையான (open type) கேள்விகள் மட்டும் இல்லாமல் மறைமுக (indirect type) கேள்விகளும் அதிக அளவில் கேட்கப்படும். மேலும் 6 முதல் 10 வகுப்புகளிலிருந்து மட்டும் கேட்காமல் 11, 12 வகுப்பு பொருளாதாரம், வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது.  பொது அறிவைப் பொறுத்த வரையில்  நாளிதழ்கள், வார இதழ்கள் என எங்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் இருந்தாலும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். 
மறைமுக கேள்விகள் உதாரணம் 
Question : பின்வரும் உணவுப் பொருட்களை, அவற்றில் அடங்கியுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ?
1.  காளான்
2. முட்டை
3. பால்
4. வெள்ளரி
Options : 
A) 1 - 2 - 3 - 4
B) 2 - 4 - 1 - 3
C) 4 - 1 - 3 - 2
D) 3 - 2 - 1 - 4
Answer : C)    4 - 1 - 3 - 2
Explanation : (நீரின் அளவு)-  வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %

இந்த தகவல்கள் ஆறாம் வகுப்பு  (பழைய) அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.எதைப் படித்தாலும் கேள்விகள் இது போன்று மறைமுகமாகவே வரும் என்ற நோக்கில் நீங்களே ஒரு கடினமான் கேள்வியாக் மாற்றி, படித்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கேள்விகள் எவ்வளவு கடினமாகக் கேட்கப்பட்டாலும் உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும்.

எப்படி படிப்பது ? 

கனவு காணுங்கள் !
”உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு”என்றார் அய்யா அப்துல் கலாம்.  எந்த ஒரு இலக்கிலும் வெற்றி பெறுவதற்கு, ’என்னால்  நிச்சயம் அந்த இலக்கை அடைந்து விட முடியும்’ என்ற தன்னம்பிக்கை அவசியமாகிறது. அந்த தன்னம்பிக்கை உங்கள் கனவாக மாறும் போது, அந்த கனவே உங்களை அந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது, வெற்றியை நோக்கி உங்களைச் செயல்பட வைக்கிறது.   எனவே,  குரூப் 2 / 2A தேர்விற்கு தயாராகும் போதே,  நீங்கள் ஒரு குரூப் 2 அலுவலராகி விட்டதாகவே கனவு காணுங்கள், அனு தினமும் அதை நோக்கியே பயணியுங்கள். கனவு நிச்சயம் நிறைவேறும். 

”கனவுகளைச் சுமக்கின்ற
கண்களைக்
கண்டதும் திறக்கின்றன
வாய்ப்புகள் என்னும்
வாசல் கதவுகள் ....
கனவு மெய்ப்பட
வேண்டும் என்றால்
கனவு “மெய்” எனப்
பட வேண்டும்
கனவு மெய்யாகப்
பாடுபட வேண்டும்/
”மெய்யாகப்” பாடுபட வேண்டும்”
-முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன்.ஐ.ஏ.எஸ். (சிறகுக்குள் வானம்)

திட்டமிடுங்கள் !
எந்த ஒரு செயலையும் நினைத்தவண்ணம் செய்து முடிக்க வேண்டுமானால் திட்டமிடுதல் மிக மிக அவசியம். "நீங்கள் திட்டமிடத் தவறினால், நீங்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறீர்கள்" ( “If you fail to plan, you are planning to fail!” ― Benjamin Franklin)  என்பது ஆங்கில பொன்மொழி. குரூப் 2/2A தேர்வுக்கு தயாராகும் நீங்கள் , குறுகிய காலத்திற்குள் அதற்கான பாடத்திட்டத்தை படித்து முடிப்பதற்கு ஒரு  திட்டத்தை உருவாக்குங்கள்.   எவ்வளவு பெரிய செயலையும்,  சிறிது சிறிதாக பிரித்து திட்டமிட்டு செய்யும் போது  அந்த செயல் 100% சாத்தியமாகிறது.  இதையே, “அளவிடப் படும் எதுவும் மேம்படும்” (What Gets Measured Gets Improved.) என்று உலகின் மிகச்சிறந்த மேலாண்மை வல்லுநரான பீட்டர் டிரக்கர் கூறுகிறார்.   எனவே குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டத்தை 2 அல்லது 3  மாதத்திற்குள் படித்து முடிக்கவுள்ளேன்,   அதில், அறிவியலை இவ்வளவு நாட்களில், வரலாறை இவ்வளவு நாட்களுக்குள் முடிப்பேன் என நீங்களாகவே திட்டத்தை  வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் திட்டத்தை எழுத்து வடிவமாக்குங்கள்,  அந்த திட்டத்தின் படி படிக்க தொடங்குங்கள்.  வெற்றி நிச்சயம்!

உங்களுக்கான மாதிரித் திட்டம் (Our Test Batch Schedule for Group 2,2A 2021)

இன்றே தொடங்குங்கள் !
நல்ல துவக்கம் பாதி வெற்றி என்பர்.  எனவே உங்களால் முடியும் என்று தன்னம்பிக்கையோடு குரூப் 2 தேர்வுக்கு தயாராக முடிவெடுத்தப் பின்னர், அதனை நாளை தொடங்கலாம், அடுத்த வாரம் தொடங்கலாம் என எக்காரணம் கொண்டும் தள்ளிப் போட வேண்டாம்.  எனவே , நல்ல நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம். இன்றே தொடங்குங்கள், அதுவும் இப்போதே தொடங்குங்கள்.
ஒத்திப் போடுவதென்பது முன் கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட தோல்வி. தாமதிக்கப்படுகிற செயல்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது.
-முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன்.ஐ.ஏ.எஸ். (சிறகுக்குள் வானம், ப.71) 
தொடர்ந்து படியுங்கள் !
”தொடங்குவதில் இல்லை, தொடர்வதில் தான் இருக்கிறது வெற்றி”  என்று கூறுவார்கள்.  புதிதாக போட்டித் தேர்விற்கு படிக்க தொடங்குபவர்கள், மிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் தொடர்ந்து படித்து விட்டு,  பின்னர் ஏதோ சூழ்நிலைகளினால்,  ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு விடுவார்கள். இவ்வாறு இடைவெளி விட்டு விட்டு, மறுபடியும்  படிப்பை தொடர்வதற்கு  பேட்டரி பழுதான வாகனத்தை ஸ்டார்ட் பண்ணுவதற்கு முயல்வதைப் போல சிரமப்பட வேண்டியிருக்கும்.
போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிக்கும் மிகவும் தொடர்பு இருக்கிறது.   மாரத்தான் பந்தைய மைதானத்திலிருந்து தொடங்கும் போது  ஆயிரக்கணக்கில் கூட்டமாகக் குவிந்திருப்பார்கள். நெடுந்தூர ஓட்டம் என்பதால் யார் முன்னால் நிற்கிறார்கள், யார் பின்னல் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி எவரும் கவலைப் படுகிறதில்லை,   பந்தையம் தொடங்கி  நேரம் செல்ல செல்ல தொடர்ந்து ஓடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதி இலக்கை நெருங்கும் போது வெகு சிலரே ஓடிக் கொண்டிருப்பார்கள். கடைசியில் அவர்களில் சிலரே வெற்றி  பெறுவார்கள். இதிலிருந்து  ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் “விரைந்து ஓடுதலை விட தொடர்ந்து ஓடுதலே வெற்றியைத் தரும்”   எனவே  எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கடின  உழைப்பே வெற்றிக்கான ஒரே வழி !
”எறும்பூர கல்லும் தேயும்”  , ”பையத் தின்றால் பனையையும் தின்னலாம்” என்று படித்திருப்பீர்கள். எறும்பில் கால்கள் எவ்வளவு மென்மையானவை, அவை ஊரும் போதது கல்லும் தேய்கிறது என்றால்,  தொடர்ந்து செய்யும் முயற்சியினால் நம்மால் அடைய முடியாத செயல்களே இல்லை எனலாம்.  எனவே உங்கள் குரூப் 2 தயாரிப்பில் உங்களால் இயன்ற வரையில் கடின உழைப்பைச் செலுத்துங்கள். ஏனெனில் வெற்றிக்கு ஒரே வழி ’கடின உழைப்பு’ , அந்த  கடின உழைப்பிற்கு மாற்று வழி எதுவுமே கிடையாது.

என்னால் முடியுமா ? 
உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழ்ந்து செல். நீ என்ன செய்தாலும் (உன் இலக்கை நோக்கி) முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங்
ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும், பல மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு, எவ்வளவு நேரம் படித்தாலும் படித்தது நினைவில் நிற்கவில்லை, நான் வேலைக்கு சென்று விட்டு படிக்கிறேன்...நேரம் போதவில்லை, நான் இல்லத்தரசி ... நேரம் போதவில்லை என பலவிதமான  காரணங்களைக் கூறி அவர்களின் தோல்வியை தாங்களாகவே நியாயப் படுத்திக் கொள்ளுவதுண்டு.  அதற்கு நான் அடிக்கடி கூறும் பதில்களையே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 

’எவ்வளவு நேரம் படித்தாலும் நினைவில் நிற்கவில்லை’ என்பதற்கான பதில், போட்டித் தேர்விற்கு படிப்பதாக நினைக்காமல் வாழ்க்கைக்காக படிப்பதாக, புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதாக நினைத்துக் கொண்டு படித்தால்  எளிதாக நினைவில் நிற்கும். இறைவனின் படைப்பில்  அனைவருக்குமே  மூளை சராசரி 1.5  கிலோ கிராம் எடை தான்.   ' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ (தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே மாந்தர்க்கு அறிவு ஊறும்) என வள்ளுவர் கூறுவது போல,  நாம் பயன்படுத்த பயன்படுத்த தான் மூளையின் கற்றல் திறன் அதிகரிக்கும்.  எனவே,  எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை உங்களுடன் ஒப்பிடாதீர்கள் (அவர்கள் உங்களை விட அதிகமாக மூளையைப் பயன்படுத்தியிருக்கலாம், உங்களுக்கும் அந்த வாய்ப்பை இறைவன் சமமாகவே வழங்கியுள்ளார்)  நீங்களும் தொடர்ந்து படிக்கும் போது அவர்களை விட சிறந்தவர்களாக மாற முடியும். தய்வு செய்து தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.

’நான் வேலைக்கு சென்று விட்டு படிக்கிறேன்...நேரம் போதவில்லை, நான் இல்லத்தரசி ... நேரம் போதவில்லை’ என்பது நிச்சயம்  ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் இல்லை.  நாம் ஒரு நாளில் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரையில்,  தேவையில்லாத காரியங்களுக்கு (டி.வி. , மொபைல் etc.) எவ்வளவு நேரங்களை செலவிடுகிறோம் என சுய பரிசோதனை செய்தால், அவற்றில் நாம் படிப்பதற்கான சில மணிநேரங்கள் நிச்சயம் மிஞ்சும்.  எனக்கு தெரிந்த எத்தனையோ பேர், இல்லத்தரசிகளாக இருந்து கொண்டே,  தனியார் நிறுவனங்களில், அரசு வேலைகளில் இருந்து கொண்டே  டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகி வென்றிருக்கிறார்கள்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் . (குறள் 605)
சோம்பலும், காலம் நீட்டித்துக் காரியம் செய்யும் குணமும், மறதியும், உறக்கமும் ஆகிய  இந்த நான்கு குணங்களும் அழியும் இயல்புடையோர் விரும்பி ஏறும் மரக்கலமாகும். 

எதைப் படிப்பது ?  எங்கு படிப்பது ? 

நான் ஏற்கனவே கூறியிருந்த படி,  டி.என்.பி.எஸ்.சி  தேர்வுகளைப் பொறுத்த வரையில்,    6-12 வரையிலான தமிழக அரசு பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து பெரும்பாலான கேள்விகள் இடம்பெற வாய்ப்புள்ளதால், உங்கள் தயாரிப்பில்  முதற்கவனம்  இந்த பள்ளிப் புத்தகங்களிலுள்ள TNPSC தேர்வு பாடப்பகுதிகள் அனைத்தையும் முழுவதுமாக படித்து முடிப்பதில் இருக்க வேண்டும். அதற்கு பின்னரே, வேறெந்த  கைடு புத்தகங்களையோ,  பயிற்சி நிறுவனங்களின் பாடக் குறிப்புகளையோ நீங்கள் தொட வேண்டும்.   TNPSC குரூப் 2  2A தேர்விற்கு தயாராவதற்கான புத்தகப் பட்டியல் பின்வருமாறு, 
1. பொது அறிவியல்
6-12 வரையிலான பாடப்புத்தகங்கள். (6 முதல் 10 வரையிலான அறிவியல் பகுதிகள் அனைத்தையும் படிப்பது நல்லது. 11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்  TNPSC பாடத்திட்டத்திற்கேற்ப தெரிந்தெடுத்து படிக்கவும்.) 
2. நடப்பு நிகழ்வுகள் 
தினமணி, தி இந்து நாளிதழ்கள்,  www.tnpscportal.in  நடப்பு நிகழ்வுக் குறிப்புகள்
3. இந்தியாவின் புவியியல் 
6 – 10 சமூக அறிவியல் புத்தகங்களிலுள்ள புவியியல் பாடப்பகுதிகள், 11-12 புவியியல் புத்தகங்கள்.
4.இந்தியாவின் வரலாறும் பண்பாடும் 
6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள் (குறிப்பிட்ட பகுதிகள் மட்டும். உதாரணமாக TNPSC தேர்விற்கு உலக வரலாறு பகுதிகளை படிக்க தேவையில்லை.) 
இந்திய மற்றும் தமிழக பண்பாடு : 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய)  புத்தகம் முழுவதும்,  12 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் புதிய மற்றும் பழைய புத்தகங்கள்
5. இந்திய ஆட்சியியல்
6-10 வரையிலான குடிமையியல் பகுதிகள், 11, 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகங்கள்.
இந்திய அரசியலமைப்பு - டாக்டர் க வெங்கடேசன்
6. இந்தியப் பொருளாதாரம்
6-10 வரையிலான பொருளாதாரப் பகுதிகள் மற்றும் 11,12 ஆம் வகுப்பு பொருளாதாரம் புத்தகங்கள்
7. இந்திய தேசிய இயக்கம்
6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு  - க.வெங்கடேசன் 
8. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
தமிழ் இலக்கிய வரலாறு  :  
6-12 வரையிலான  புதிய மற்றும் பழைய தமிழ்  புத்தகங்களிலிருந்து (இலக்கணம் தவிர்த்து)  அனைத்து இலக்கிய  பகுதிகளும் மற்றும்   தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – தேவிரா  அல்லது ஏதேனும் ஒரு தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம்.  
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் 
  • 6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு  பாடப்புத்தகங்கள்
  • முற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க. வெங்கடேசன்    
  • தற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன் 
(மேற்கண்ட இரு புத்தகங்களையும் www.tnpscexambooks.com இணியதளத்தின் மூலம் வாங்கலாம்)
9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழக அரசின் இணையதளங்கள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் மற்றும் பல்வேறு  ஆதாரங்களிலிருந்து தகவல்களைப் பெறலாம்.   (Portal Academy சார்பாக இந்த அலகிற்கான முழு பாடக்குறிப்புகள் PDF  வடிவில் தொகுத்துள்ளோம்) 
10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)
  • 6 முதல் 10 வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளி கணித பாடப் புத்தகங்களில்,  TNPSC திறனறிவு பாடத்திட்டத்திலுள்ள பகுதிகள் மட்டும். 
  • கணியன் (பாகம் 1,2) புத்தகங்கள் 
  • டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை முடிந்த வரை பயிற்சி செய்வது அவசியம்.
முந்தைய கேள்வித்தாள்கள் 
உங்களால் இயன்ற வரையில் முந்தைய குரூப் 1, 2  மற்றும் பிற துறைசார்ந்த (Degree Standard) தேர்வுகளின்   வினாத்தாள்களைப் பயிற்சி செய்யுங்கள். 
மாதிரித் தேர்வுகள் / தேர்வு வகுப்புகள் (Test Series) 
சாதாரணப் போட்டியாளருக்கும் வெற்றி பெறுபவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு “பயிற்சியே”. எனவே,  உங்களால் இயன்றவரையில் TNPSC புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட மாதிரித் தேர்வுகளையும்  பயிற்சி செய்யுங்கள்.

தமிழக அரசின் பள்ளி புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்வதற்கான இணையதளங்கள்
புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் :  http://tnschools.gov.in/textbooks  
பழைய புத்தகங்கள் : https://www.tntextbooks.in/p/school-books.html  

Portal Academy ன் TNPSC Group 2/2A 2021 Test Batch Starts from January 2021  
45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்) | திறனறிகேள்விகளுக்கு விளக்கங்கள்
Online Exam & PDF | ரூ.1200/-

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.