-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 13-15 ஜீன் 2020

TNPSC Current Affairs 13-15 June 2020

இந்தியா

  • ”I-FLOWS” (Integrated Flood Warning System) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வெள்ள அபாய முறைமையை   மும்பை நகரில்    மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர். இதனை,  மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், பூனேவைச் சேர்ந்த ’இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்)’ ( Indian Institute of Tropical Meteorology (IITM))  உருவாக்கியுள்ளது.
  • “ஆரோக்கியபாத்” (Aarogyapath) என்ற பெயரில் ’தேசிய சுகாதார விநியோகச் சங்கிலி இணையதளத்தை (www.aarogyapath.in)’ (National Healthcare Supply Chain Portal)  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் வங்கிகளின் உரிமையாளர்களைப் பற்றி ஆராய பி.கே.மொகந்தி (P K Mohanty) தலைமையிலான பணிக்குழுவை ரிசர்வ் வங்கி 12-6-2020 அன்று அமைத்துள்ளது.
  • QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2021 (QS World University Rankings 2021) ல் முதல் 200 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து மூன்று பல்கலைக்கழகஙக்ள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவையாவன,
    • IIT மும்பை -  172 வது இடம் 
    • IISc பெங்களூரு - 185 வது இடம்
    • IIT டெல்லி - 193 வது இடம்
இப்பட்டியலில் உலகளவில் முதல் மூன்று இடங்களை முறையே  மாசாசூட் பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) (அமெரிக்கா), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) (அமெரிக்கா) மற்றும் Harvard University (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)  (அமெரிக்கா) ஆகியவை பெற்றுள்ளன.
  • ’ஷேகர் மித்ரா’ ( ‘Shakar Mitra’ ) என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டமானது  தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation  - NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • ”பால ஷ்ராமிக் வித்யா யோஜனா” (Bal Shramik Vidya Yojana) என்ற பெயரில், 8-18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும்  அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை    உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.   
  • பழங்குடி பள்ளி மாணவர் தங்குமிடங்களுக்கு   ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் ( ISO (International Organization for Standardization) 9001:2015 ) பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிஷா பெற்றுள்ளது.
  • ஆதார் அட்டை மூலம் ஆன்லைன் வழியாகவே சேமிப்பு வங்கி கணக்கை தொடங்குவதற்கான சேவையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக பாவித்துள்ள  புதிய வரைபடத்துக்கு  ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 13-6-2020 அன்று நேபாள  நாட்டின் நாடாளுமன்றத்தில்  நிறைவேறியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்ட , அமெரிக்காவின், மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக கேத்தி லூதர்ஸ் ( Kathy Lueders) எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, 2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம்  ‘ஓரியன் ராக்கெட்’  மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்

விருதுகள்

  • விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) (Dr Rattan Lal ) ”சா்வதேச உணவு விருது” (World Food Prize) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய அரசின்’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா பதக்கம்’ (“the Medal of the Order of Australia”) இந்திய இசை  (வீணை)  வல்லுனரும் ’கலாக்ருதி’(Kalakruthi) எனும் அமைப்பின் நிறுவனருமான சோபா சேகருக்கு ( Shobha Sekhar ) அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக முதியோர் நிந்தனை விழிப்புணர்வு தினம் ( World Elder Abuse Awareness Day   )   - ஜீன்  15 
  • உலக இரத்த தானம் செய்வோர் தினம் (World Blood Donor Day) - ஜீன் 14 | மையக்கருத்து 2020 - ‘பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது’ (Safe Blood Saves Lives)
  • சர்வதேச அல்ஃபினிஷம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) - ஜீன் 13

விளையாட்டுகள்

  • இந்தியாவின் மூத்த முதல் தர கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (100) 13-6-2020 அன்று தெற்கு மும்பை வால்கேஷ்வரில் முதுமை காரணமாக காலமானாா்.கடந்த 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சாா்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானாா். வலது கை பேட்ஸ்மேனான அவா், 1940-இல் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடினாா். மொத்தம் 277 ரன்களை குவித்தாா். அதில் அதிகபட்சம் 68 ஆகும். விஜய் மொ்ச்சண்ட் தலைமையிலான மும்பை அணி சாா்பில் 1941-இல் அறிமுகமாகி மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஆடினாா். வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.
  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (Federation Internationale de Football Association) 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 108 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியைல் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Lockdown Liaisons: Leaving and Other Stories” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஷோபா டே (Shobha De) 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.