-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 16-18 ஜீன் 2020

TNPSC Current Affairs 16-18 June 2020

தமிழ்நாடு

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
  • தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை மாண்பு மிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைப்பதற்கும், நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும், அல்லாள இளைய நாயகருக்கு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைப்பதற்கும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும் , எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்குமான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-6-2020 அன்று நாட்டினார்கள்.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட ”சிவகளையில்” நடைபெற்றுவரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் 15-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டன.

இந்தியா

  • உலக போட்டி குறியீடு 2020 (World Competitiveness Index) ல் இந்தியா 43 வது இடத்தைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் லஷானே ( Lausanne ) நகரிலுள்ள மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (Institute for Management Development (IMD)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தாக்கத்தை எதிர்த்து போராடுவதில் உதவும் வகையில் இந்தியாவிற்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 17-6-2020 அன்று அறிவித்துள்ளது.
    • கூ.தக.: 16 ஜனவரி 2016 ல் தொடங்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைமையிடம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது. இவ்வமைப்பில் தற்போது 102 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவின் முதல் வாயு பரிமாற்ற அமைப்பு (Indian Gas Exchange (IGX) ) 15-6-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை வாயுவை வர்த்தகர்கள் கொள்முதல் மற்றும் விற்பதற்கான டிஜிட்டல் சந்தையாக இருக்கும். மேலும் , ஏற்கனவே இருக்கும் ’இந்திய ஆற்றல் பரிமாற்ற அமைப்பின்’ (India Energy Exchange (IEX)) கீழ் இந்த புதிய அமைப்பு செயல்படும்.
  • அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 150 அணு ஆயுதங்களுடன் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Stockholm International Peace Research Institute (SIPRI)) மூலம் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனை குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • கூ.தக. : இந்த பட்டியலின் படி, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இந்தியாவை விட சீனா (360 அணு ஆயுதங்கள்) மற்றும் பாகிஸ்தான் (160அணு ஆயுதங்கள்) நாடுகள் அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) எனும் ஸ்டீராய்டு மாத்திரை உதவலாம் என பிரிட்டனைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council), 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை 17-6-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டன.ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
    • கூ.தக. :15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • நேபாள நாட்டிலுள்ள பசுபதிநாத் கோயில் வளாகத்தை (Pashupatinath temple) மேம்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவின் சார்பாக ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - நேபாள் இடையே 15-6-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கூ.தக. : இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள துலுங் லா பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
  • ’செயற்கை நுண்ணறிவிற்கான உலக கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence) அமைப்பின் நிறுவனர் உறுப்பினராக இந்தியா 15-6-2020 அன்று இணைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கஷகஸ்தான் நாட்டின் பிரதமர் முகமது கால்யி அபில்காஷியேவ் ( Mukhammedkalyi Abylgaziyev ) ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
  • “வெரிஃபைடு”(Verified) என்ற பெயரில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்பை இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் உதவியுடன் ஐக்கிய நாடுகளவை 21-5-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூன்று கருப்பொருட்கள் ( themes) வருமாறு,
    • அறிவியல் - உயிர்களைக் காப்பாற்ற; (science – to save lives)
    • ஒற்றுமை - உள்ளூர் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்க; (solidarity – to promote local and global cooperation)
    • தீர்வுகள் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை ஆதரிக்க.(solutions – to advocate support for impacted populations.)
  • பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீடு பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா (51 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீட்டுடன்) 9 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. உலக முதலீடுகள் அறிக்கை 2020 (UN-World Investment Report 2020) ன் படி, இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா (246 பில்லியன் டாலர்), சீனா (141 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூர் (92 பில்லியன் டாலர்) ஆகியவைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் ஐந்தாவது பொருளாதார மந்தத்தை கோவிட்-19 நெருக்கடி உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில், பொருளாதார மந்த நிலைகள் ஏற்பட்ட ஆண்டுகள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் வருமாறு,
    • 1958 - பருவ மழைப்பொழிவு பொய்த்து விவசாய உற்பத்தி வீழ்ச்சியினால் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை பிரச்சனை (balance of payments crisis)
    • 1966 - சீனாவுடன் போர் (1962) மற்றும் பாகிஸ்தானுடன் போர்(1965) மற்றும் வறட்சி (Drought)
    • 1973 - ஆற்றல் பிரச்சனை( Energy Crisis ) - OAPEC (Organisation of Arab Petroleum Exporting Countries) நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறைவினால் ஏற்பட்டது.
    • 1980: ஈரான் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் ஏற்பட்ட எண்ணெய் இறக்குமதி பிரச்சினை (Oil Shock)
  • 40 ஜி.எஸ்.டி. கவுண்சில் கூடுகை (காணொளி) 12-6-2020 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
    • கூ.தக. : ஜி.எஸ்.டி. கவுண்சில் (GST Council) 15 செப்டம்பர் 2016 ல் அரசியலமைப்புச் சட்டம் 279A பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது.
    • ஜி.எஸ்.டி வரி முறை 1 ஜீலை 2017 முதல் இந்தியா முழுவதும் (ஜம்மு காஷ்மீர் தவிர்த்து) அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் 7 ஜீலை 2017 ல் நிறைவேறியது.

முக்கிய தினங்கள்

  • உலக காற்று தினம் (Global Wind Day 2020) - ஜீன் 15
  • உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் (World Day to Combat Desertification and Drought) - ஜீன் 17 | மையக்கருத்து 2020 - உணவு, உணவளி, நாரிழை - நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு (Food, Feed Fibre-The links between consumption and land)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா ( Japan Aerospace Exploration Agency (JAXA)) உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது. இதன்படி, இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் எச்-3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
  • "கேப்டன் அர்ஜீன்” ( 'Captain Arjun - Always be Responsible and Just Use to be Nice) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ரோபோவை இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே மண்டலம் ( Central Railway zone ) அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுகள்
  • ’விளையாடு இந்தியா’ திட்டத்தின் (Khelo India Scheme) கீழ் ”கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள்” (Khelo India State Centres of Excellence) அருணாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, தெலுங்கானா மற்றும் மிஷோராம் ஆகிய எட்டு மாநிலங்களில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் முக்கிய நோக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க செய்வதாகும்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Klara and the Sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நோபல் பரிசு (2017) பெற்ற ஜப்பான் - பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகுரோ(Kazuo Ishiguro)
  • "Naoroji: Pioneer of Indian Nationalism" என்ற பெயரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ’தாதாபாய் நெளரோஜி’ (Dadabhai Naoroji) அவர்களின் வாழ்க்கை வரலாறை தின்யார் பட்டேல் (Dinyar Patel) எழுதியுள்ளார்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.