TNPSC Current Affairs 19,20 June 2020
தமிழ்நாடு
- வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” 2020 : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியா
- 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 இலட்சம் கோடி) சந்தை மதிப்பை பெற்ற முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” (Reliance Industries Limited (RIL)) 19-6-2020 அன்று அடைந்துள்ளது.
- "சத்தியபாமா” (‘Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement (SATYABHAMA)’) என்ற பெயரில் இணையதள சேவை மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி, சுரங்க துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும்.
- இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை (I-Lab (Infectious disease diagnostic lab)) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 18-6-2020 அன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
- கரிப் கல்யாண் ரோஜ்கார் ( Garib Kalyan Rojgar Abhiyaan) என்ற பெயரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி ஜீன் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்
சர்வதேச நிகழ்வுகள்
- ”ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக்கான உயர் நிலைக் கூட்டம் காணொலி மூலம் 18 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதற்கு தலைமை தாங்கினார்.
- 75 வது ஐக்கிய நாடுகளவை பொதுச் சபையின் தலைவராக (75th United Nations(UN) General Assembly) துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர் (69) (Volkan Bozkir) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர். இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் 178 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15, 2020 அன்று துவங்கும் வருடாந்திர அமர்வில் வோல்கன் போஸ்கிர் தலைமையேற்பார்.
- கூ.தக. : இதற்கு முன்னர் (2019 ஆம் ஆண்டில்) ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை நைஜீரியாவைச் சேர்ந்த டிஜ்ஜானி முகமது பாண்டே(Tijjani Muhammad-Bande) வகித்து வந்தார்.
- கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் பிரதமராக குபாதேக் போரோனோவ் (Kubatbek Boronov) நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரம்
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation -EPFO) இன் ஊதிய தரவுகளின்படி, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் 28.6% அதிகரித்து 78.58 லட்சமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-20 ஆம் நிதியாண்டில் இது 61.12 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
- மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(National Institute of Public Finance and Policy (NIPFP)) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவர் இந்த பதவியில் நான்காண்டுகளுக்கு இருப்பார்.
முக்கிய தினங்கள்
- நாடுகளுக்கிடையே மோதலின் போது பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) - ஜூன் 19
- ஐ.நா. உலக அகதிகள் தினம் (World Refugee Day) - ஜீன் 20 | மையக்கருத்து 2020 - ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகின்றன (Every Action Counts)
- உலக அரிவாள்செல் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease day) தினம் - ஜீன் 19
- கர்நாட அரசு ‘ஜீன் 18’ ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
- நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day) - ஜீன் 18
விளையாட்டுகள்
- 4 வது ஆசிய இளையோர் மாற்றுத்திறன் கொண்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Para Games ) 1-10 டிசம்பர் 2021 தினங்களில் பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- “A Burning” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர் - மேலா மஜீம்தார் (Megha Majumdar)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.