-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020

TNPSC Current Affairs 27-29 June 2020

தமிழ்நாடு

  • கொடுமணல் அகழாய்வில் 2,300 ஆண்டு பழமையான ஊது உலைகண்டுபிடிப்பு : திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது. இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.

இந்தியா

  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • "நாஷா முக்த் பாரத்” (Nasha Mukt Bharat) திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா 26-6-2020 (சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான தினத்தன்று-International Day Against Drug Abuse and Illicit Trafficking) வெளியிட்டுள்ளார். "நாஷா முக்த் பாரத்” திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறார் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் ஆயில் இந்தியா லிமிடெட் எண்ணைக் கிணறில் 27-5-2020 அன்று ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்தைக் குறித்து ஆராய முன்னாள் கவுகாத்தி உயர்நீத்மன்ற நீதிபதி BP கடாகே (BP Katakey) தலைமையில் உயர்மட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 25-6-2020 அன்று அமைத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையின் படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு (வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 / Banking Regulation (Amendment) Ordinance, 2020) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 27-06-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத் திருத்தத்தின் படி,  வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949 )ன்  பிரிவுகள் 45 மற்றும் 56 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • ”இ-பஞ்சாயத்து புரஸ்கார் 2020” ( e-Panchayat Puraskars 2020) பரிசுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது . இதன்படி, முதல் பரிசை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20
  • சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium Enterprises (MSME) Day) - ஜீன் 27
  • சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவிற்கான சர்வதேச தினம் (International Day in Support of Victims of Torture) - ஜீன் 26 | மையக்கருத்து - சித்திரவதை : மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Torture: a crime against humanity)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகின் நீளமான மற்றும் அதிக நேரம் மின்னிய மின்னல்கள் : பிரேஸிலில் 4-3-2019 அன்று ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீண்ட நேரம் மின்னிய மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16.73 விநாடிகளுக்கு மின்னிய மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

விளையாட்டுகள்

  • இந்தியாவின் பழுதூக்கும் வீராங்கனை K.சஞ்சிதா சானுவின் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு விலக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டின் காரணமாக, முன்னதாக அவருக்கு வழங்கப்படாதிருந்த அர்ஜீனா விருது 2018 (Arjuna award for 2018) மறுபடியும் வழங்கப்படவுள்ளது.
  • 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் நடத்தவுள்ளன.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.