-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 30 ஜீன் 2020

TNPSC Current Affairs 30  June 2020

இந்தியா

  • இரண்டாவது தேசிய கங்கை ஆற்று வடிநில திட்டத்திற்கு (Second National Ganga River Basin Project (SNGRBP)) 400 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ”சங்கல்ப் பர்வா” ( Sankalp Parva) திட்டம் : நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி, தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை ‘சங்கல்ப பர்வா’ எனும் மரம் நடு பிரச்சாரம் நாடெங்கிலும் மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடுவதற்கு, பிரதமரால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வகையான மரங்கள் (i) “ஆலமரம்” (ii) “Awla” “நெல்லி (iii) “அரசமரம்” (iv) “அசோகா மரம்” (v) “வில்வமரம்” ஆகியவையாகும். இந்த வகை மரக்கன்றுகள் கிடைக்காவிட்டால் மக்கள் தங்கள் விருப்பப்படி வேறு எந்த மரக்கன்றுகளை வேண்டுமானாலும் நடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது. தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 29-6-2020 அன்று கையெழுத்திட்டன. இதன்படி பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் இந்த அரசு உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
  • தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உலக வா்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) தீா்வுக் குழு அமைக்க ஜப்பான், சீன அரசுகள் கோரியுள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஐசிடி சாதனங்கள் யாவும் உலக வா்த்தக அமைப்பின் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான ஒப்பந்தம்-2 ((Information Technology Agreement (ITA) -2))-இன் கீழ் வருவதாகவும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா அங்கம் வகிக்கும் ஒப்பந்தம் “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1)ஆனது இந்தச் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதை தடை செய்யவில்லை என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது.
  • கூ.தக. : “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1) 1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு , 1 ஜீலை 1997 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தமானது 2015 ல் மேலும் பல அம்சங்களுடன் மறுபடியும் நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • மாலாவி (Malawi) நாட்டின் புதிய அதிபராக லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : மாலாவி நாட்டின் தலைநகரம் ’லிலோங்க்வே’ (Lilongwe) | நாணயம் மாலாவியன் க்வாச்சா (Malawian Kwacha)
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) 36 வது கூடுகை, ‘ஒத்திசைவு மற்றூம் பொறுப்புணர்வு கொண்ட ஆசியான்’ (“Cohesive and Responsive ASEAN”) எனும் மையக்கருத்தில் காணொளி வழியாக 26 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இந்த கூடுகைக்கு 2020 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வியட்நாம் நாட்டின் பிரதமர் நூயன் ஜீவான் புக் (Nguyen Xuan Phuc) தலைமையேற்று நடத்தினார்.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ( National Aeronautics and Space Administration (NASA) ) வாசிங்க்டனில் அமைந்துள்ள தனது தலைமையக கட்டிடத்திற்கு நாஷா அமைப்பின் முதல் கறுப்பின பெண் பொறியாளரான மேரி வின்ஸ்டன் ஜாக்சன் (Mary Winston Jackson) என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு : கடந்த ஜனவரி 2020 ல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
  • ஐஸ்லாந்து (Iceland) அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் (Guðni Thorlacius Jóhannesson) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நியமனங்கள்

  • மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுனராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு (Anandiben Patel) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச வெப்பமண்டல தினம் (International Day of the Tropics) - ஜீன் 29
  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.