☛ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐஎன்ஏ) பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி காந்திமதி பாய் 15-7-2020 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய ஒரே பெண்மணி காந்திமதி பாய் ஆவார்.
இந்தியா
☛ உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020 (Global Manufacturing Risk Index) ல் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. Cushman & Wakefield எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா பெற்றுள்ளது.
☛ ”நிஷிதா” (National Initiative for School Heads and Teachers Holistic Advancement (NISHTHA)) என்ற பெயரில் “தேசிய பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான மேம்பாட்டு திட்டத்தை” மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் , ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1200 வல்லுநர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
கூ.தக. : ”நிஷிதா” திட்டம் முதன் முதலில் ஆகஸ்டு 2019 ல் தொடங்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 சூழலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் மறுபடியும் ஆன்லைன் வழியாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT (National Council of Educational Research and Training) ) இந்த திட்டத்தில் மாறுதல்களைச் செய்துள்ளது. ஆன்லைன் வழியான இந்த திட்டம் DIKSHA (Digital Infrastructure for Knowledge Sharing) மற்றும் NISHTHA இணையதளங்கள் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
☛ தெலங்கானாவில் அரசு ஜூனியா் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2020-21 கல்வியாண்டு முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் 17-7-2020 அன்று அறிவித்துள்ளார்..
☛ உலகின் முதலாவது, முழுவதும் தானியங்கி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் கப்பலை (world’s first fully automatic electric vessel) உருவாக்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ’கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம்’ (Cochin Shipyard Ltd (CSL)) மற்றும் நார்வே நாட்டின் ASKO Maritime நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
☛ ஆயுதப் படைகள் அவசர தேவைகளுக்காக ரூ. 300 கோடி வரையில் ஆயுதங்களை வாங்கச் செலவிடலாம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)) 15-7-2020 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
☛ ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்படும் கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Animal Husbandry Infrastructure Development fund (AHIDF)) அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மீன்வளம் கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் 16 7 2020 அன்று வெளியிட்டுள்ளார்.பால் பண்ணை, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான கட்டமைப்பை நிறுவுதல், மற்றும் தனியார் துறையில் கால்நடை தீவன ஆலைகளை நிறுவுதல் ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிக்க இந்த நிதி உதவும் .
வெளிநாட்டு உறவுகள்
☛ இந்தியா - பூட்டான் நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக பாதை மேற்கு வங்காளத்திலுள்ள ஜெய்கான்( Jaigaon ) மற்றும் பூட்டானின் பாஷகாவிலுள்ள ஆஹ்லே (Ahlay, Pasakha) எனுமிடத்திற்குமிடையே 15-7-2020 அன்று திறக்கப்பட்டுள்ளது.
☛ இந்தியாவின் முதலாவது, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிமோனியா (pneumonia) நோய்க்கான தடுப்பூசியான ”நிமோகோக்கல் பாலிசாக்ரைட் கோஜுகாட் தடுப்பூசிக்கு”(Pneumococcal Polysaccharide Conjugate Vaccine) மத்திய மருந்து கட்டுப்பாட்டகம் (Drug Controller General of India(DCGI)) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பூனேவிலுள்ள M/s. Serum Institute of India Pvt. Ltd எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
☛ இந்தியா - ஐரோப்பிய யூனியன் (European Union (EU) இடையேயான 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தினர்.
☛ இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர நடவடிக்கைக் குழு (Computer Emergency Response Team-CERT) மற்றும் இஸ்ரேல் தேசிய இணைய பாதுகாப்பு இயக்குநரகம் (Israel National Cyber Directorate (INCD)) ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இஸ்ரேலில் 15-7-2020 அன்று நடைபெற்ற நிகழ்வில் ஐஎன்சிடி தலைவா் ஈகல் உன்னா மற்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதா் சஞ்சீவ் சிங்லா ஆகியோா் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ சர்வதேச ஊடக சுதந்திர விருதுகள் 2020 (International Press Freedom Award 2020) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஷாஹிதுல் ஆலம் (Shahidul Alam), ஈரானைச் சேர்ந்த மொகமது மொஷேட் (Mohammad Mosaed), நைஜீரியாவைச் சேர்ந்த ‘தாபோ ஓலோருன்யோமி (Dapo Olorunyomi) மற்றும் ரஷியாவைச் சேர்ந்த ஸ்வேட்லானா புரோகோப்யேவா (Svetlana Prokopyeva) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’க்வென் இஃபில்ல் ஊடக சுதந்திர விருது 2020’ ( Gwen Ifill Press Freedom Award 2020) அமல் க்ளூனே ( Amal Clooney) எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக. : அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட ’Committee to Protect Journalists(CPJ)’ எனும் அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது.
☛ ”சுரினாம்” (Suriname) நாட்டின் அதிபராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ’சான் சந்தோகி’ ( ‘Chan’ Santokhi) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : தென் அமெரிக்க கண்டத்திலுள்ள சுரினாமின் தலைநகரம் - பரமாரிபோ (Paramaribo) | நாணயம் - சுரிநாம் டாலர் (Suriname Dollar)
☛ ‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ (ChAdOx1 nCoV-1) என்ற பெயரில் கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசி ஒன்றை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவை அடிப்படையாகக்கொண்டது. ‘ஜைகோவ்-டி’ பிளாஸ்மிட் டி.என்.ஏ.வை ஆதாரமாக கொண்டது. இந்த தடுப்பூசி செப்டம்பர் 2020 ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுகள்
☛ 2019 -ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த வன ஆய்வுக்கான தேசிய விருது கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் கண்ணன் வாரியருக்கு, உயிரிப் பன்மையைக் காப்பதில் ஆய்வு மேற்கொண்டமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் இவ்விருதினை வழங்கியுள்ளது.
நியமனங்கள்
☛ ஹெச்.சி.எல்நிறுவனத்தின் தலைவராக (HCL Technologies Limited) ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (Roshni Nadar Malhotra) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
☛ சர்வதேச குற்றவியல் நீதி தினம் (Day of International Criminal Justice) - ஜீலை 17
☛ தமிழ் நாட்டில் ‘கல்வி வளர்ச்சி தினம்’ (Educational Development Day) - ஜீலை 15 (பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம்)
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து (7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில்) எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter mission) எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுகள்
☛ ’ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2022’ (FIFA World Cup 2022) கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (Federation Internationale de Football Association) அறிவித்துள்ளது.
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.