-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 26 July 2020

Current Affairs for TNPSC Exams 26 July 2020

தமிழ்நாடு

  • ☛ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.68.9 கோடியை  சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையை செலுத்த ரூ.36.9 கோடியும், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க 29.3 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா

  • ☛ டி.பி.சிங் குழு (D P Singh Committee) : வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் தங்கி படிப்பதஆற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் டி.பி.சிங் (D P Singh) தலைமையில் குழுவை மத்திய மனித வள அமைச்சகம் 24-7-2020 அன்று அமைத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • ☛ இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2020-2025) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தைப் (India-European Union Agreement on Scientific and Technological Cooperation) புதுப்பித்துள்ளன. இருதரப்பினரும் வாய்மொழிக் குறிப்புகள் பரிமாறிக்கொள்வதன் மூலம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆரம்பத்தில்  நவம்பர் 23, 2001 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. பின்னர் கடந்த காலத்தில் 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது.
    • இது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பை விரிவாக்கும், பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அத்தகைய ஒத்துழைப்பின் முடிவுகளை அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதையும் பலப்படுத்தும்.
    • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஒத்துழைப்பை ஒப்பந்தம் என்ற கட்டமைப்பின் கீழ் கொண்டுள்ளதுடன், அது பல ஆண்டுகளாக சீராக வளர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், மலிவு விலையில் சுகாதாரம், நீர், எரிசக்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்ற சமூக சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களில் இணை முதலீட்டின் அளவு முடுக்கிவிடப்பட்டுள்ளது, இதன் விளைவாக பல தொழில்நுட்பங்கள், காப்புரிமை மேம்பாடு, அவற்றின் லாபம் பயன்பாடு, கூட்டு ஆராய்ச்சி வெளியீடுகள், ஆராய்ச்சி வசதியைப் பகிர்வது மற்றும் இரு தரப்பிலிருந்தும் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் பரிமாற்றம் ஆகியவை மேம்பட்டுள்ளன.
  • ☛ இலங்கைக்கு ரூ.3,000 கோடி ( 400 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கும் ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கி கையெழுத்தாகி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க  இலங்கைகு ஆா்பிஐ வழங்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000 கோடி கடனுதவி வசதியை 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ☛ அவசர கால தேவைக்கான கச்சா எண்ணெயை அமெரிக்க எண்ணைக் கிடங்குகளில் சேமிப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, இந்தியா தனது கச்சா எண்ணெய் சேமிப்பை அதிகரிக்க அமெரிக்காவின் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தவுள்ளது. 
கூ.தக. :
    • இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சமயத்திலும், அவசர காலங்களிலும் பயன்படுத்திக் கொள்வதற்காக, 3 இடங்களில் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 13.3 லட்சம் டன் கச்சா எண்ணெய், கா்நாடக மாநிலம் மங்களூரில் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய், பாடூரில் 25 லட்சம் டன் கச்சா எண்ணெய் என மொத்தம் 53.3 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமிக்கும் அளவுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டன. இந்த கச்சா எண்ணெய், இந்தியாவில் 10 நாள்களின் தேவையை பூா்த்தி செய்யும்.
    • அதைத் தொடா்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 125 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிக்கும் அளவுக்கு 4 இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கிடங்குகளை ராஜஸ்தானின் பிகானீா்,ஒடிஸாவில் உள்ள சண்டிகோல், குஜராத்தில் உள்ள ராஜ்கோட், கா்நாடகத்தில் உள்ள பாடூா் ஆகிய இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அத்திட்டம் இன்னும் பூர்த்தியாகவில்லை.
    • இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. இதில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வினியோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் அமெரிக்காவிடம் உலகிலேயே அதிக அளவிலான கச்சா எண்ணெய் (71.4 கோடி பேரல்கள்) சேமிப்பதற்கான வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ☛ அகலப் பாதையில் இயக்கப்படும் 10 டீசல் ரயில் என்ஜின்களை வங்கதேசத்துக்கு இந்தியா வழங்குகிறது. தற்போது ஒப்படைக்கப்பட உள்ள என்ஜின்கள், இந்தியாவின் கிழக்கு ரயில்வேக்கு உள்பட்ட மேற்கு வங்க மாநிலம், நதியா மாவட்டம், கெதே ரயில் நிலையத்திலிருந்து வங்கதேசத்தின் தா்ஷனா ரயில் நிலையத்துக்கு செல்ல உள்ளன.

முக்கிய தினங்கள்

  • ☛ 21 வது கார்கில் போர் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) - ஜீலை 26 (1999 ஆம் ஆண்டு ஜீலை 26 ஆம் தேதி ஆபரேஷன் விஜய் எனும் நடவடிக்கையின் மூலம் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ☛ "ஆஸ்த்ரோஸ் திட்டம்” (ASTHROS Mission) என்ற பெயரில் வழிமண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியரிலிருந்து (stratosphere)  பூமிக்கு வரும் கண்களுக்கு புலனாகாத ஒளி அலைகளைப் பற்றி ஆராய்வதற்காக,  அண்டார்டிக்காவிலிர்ந்து, கால் பந்து அளவிலான பலூன்களைச் செலுத்தி ஆய்வு செய்வதற்கான திட்டத்தை  டிசம்பர் 2023 ல் செயல்படுத்தவுள்ளதாக  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாஷா அறிவித்துள்ளது. 

விளையாட்டுகள்

  • ☛ 4 வது ‘கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டுகள்’ (4th edition of Khelo India Youth Games) ஹரியானா மாநிலத்தின் பஞ்குலா (Panchkula) எனுமிடத்தில் நடைபெறவுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ ( Kiren Rijiju) 25-7-2020 அன்று அறிவித்துள்ளார்.  பொதுவாக கேலோ இந்தியா போட்டிகள் ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.  அடுத்த ஆண்டிற்கான போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.