Current Affairs for TNPSC Exams 27 July 2020
தமிழ்நாடு
- ☛ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்தியா
- ☛ "SWAMIH" விரிவாக்கம் - SPECIAL WINDOW FOR AFFORDABLE AND MID INCOME HOUSING
- ☛ ”குமார் சாஷாக்திகரண் யோஜனா” ('Kumhar Sashaktikaran Yojana' ) திட்டத்தின் கீழ் 100 மின்சாரத்தில் இயங்கும் மண்பாண்ட சக்கரங்களை ( electric potter wheels) குஜராத்தின் காந்திநகரிலுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழங்கினார்.
- கூ.தக. : ”குமார் சாஷாக்திகரண் யோஜனா” ('Kumhar Sashaktikaran Yojana' ) என்பது, கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூர கிராமங்களிலுள்ள மண்பாண்டத் தொழிலாள்களின் நலனுக்காக மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் கமிஷனினால் ( Khadi and Village Industries Commission (KVIC) ) கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- ☛ 2010-2020 ஆண்டு காலக்கட்டத்தில், உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளவையின், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ’உலக காடுகள் வள மதிப்பீடு 2020’ (Global Forest Resources Assessment (FRA) 2020)எனும் அறிக்கையில், முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே சிலி மற்றும் வியட்நாம் நாடுகள் பெற்றுள்ளன.
- கூ.தக. : உலக அளவில், காடுகள் சார்ந்து வேலைவாய்பை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் 6.23 மில்லியன் மக்கள் காடுகளைச் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது உலகளவில் இத்தகைய வேலைவாய்ப்பில் 50% என்பது குறிப்பிடத்தக்கது.
- ☛ இந்தியாவின் முதல், உலகத்தரம் வாய்ந்த தேன் சோதனை ஆய்வகம் (World Class State of Art Honey Testing Laboratory) குஜராத் மாநிலம் ஆனந்த் எனுமிடத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை தேசிய தேனீ வாரியம் (National Bee Board) அமைத்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- ☛ மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம் (HIL (India) Limited), தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை அனுப்பியுள்ளது. எச்ஐஎல் இந்தியா நிறுவனம், உலகளவில் டிடிடி மருந்தின் ஒரே உற்பத்தியாளராக உள்ளது. இந்த நிறுவனம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக, டிடிடி மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும், 1954 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
- ☛ வட கொரியா நாட்டிற்கு (Democratic People’s Republic of Korea) 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காசநோய் மருந்துகளை இந்திய அரசு 24-7-2020 அன்று அனுப்பி வைத்துள்ளது. இந்த மருந்துப் பொருட்கள் உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்டுள்ளது.
- ☛ வடகிழக்கு அட்லாண்டிக் நாடான சூரிநாம் நாட்டின் புதிய அதிபராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சந்திரிகா பிரசாத் சந்தோகி பதவி ஏற்ற போது, சமஸ்கிருத வேத மந்திரம் வாசித்து பதவி ஏற்றது இந்தியர்களுக்கு பெருமை என பிரதமர் மோடி அவர்கள் தனது ‘மான்கி பாத்’ வானொலி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சூரிநாமில் பேசப்படும் பொதுமொழிகளில் ஒன்றான ‘சர்நாமி’, இந்தியாவின், போஜ்புரி மொழியின் பேச்சுவழக்கை கொண்டது எனவும் தெரிவித்தார்.
முக்கிய தினங்கள்
- ☛ 82 வது , மத்திய ரிசர்வ் போலீஸ் படை எழுச்சி தினம் (Central Reserve Police Force (CRPF) raising day) - ஜீலை 27
- கூ.தக. : சி.ஆர்.பி.எஃ. எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை 27, ஜீலை 1939 ல் அரச பிரதிநித்துவ போலீஸ் (Crown representative Police) என்ற பெயரில் அப்போதைய பிரிட்டிஷ் அரசினால் தொடங்கப்பட்டது. பின்னர், 1949 ல் Central Reserve Police force எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.