-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 29 July 2020

Current Affairs  for TNPSC  Exams 29-07-2020

தமிழ்நாடு

  • ☛ பாரதி வந்துசென்று நூற்றாண்டு காணும் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் : தேசியக் கவி பாரதியார், யானையால் தாக்கப்பட்டு குணமடைந்த பின், கடைசி வெளியூர்ப் பயணமாக, 1921 ஜூலை, 31-ல் ஈரோடு கருங்கல்பாளையம் காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் எம்.கே. தங்கப்பெருமாள் பிள்ளை துவங்கிவைத்த, கருங்கல்பாளையம் வாசகசாலையின் ஆண்டு விழாவுக்காக வருகை தந்து, “மனிதனுக்கு மரணமில்லை” என்ற தலைப்பில் புகழ்பெற்ற உரையை ஆற்றிய நிகழ்வின் 100 வது ஆண்டு தினம் 31-7-2020 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ☛ ஈழுவா, தீயா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோா் வகுப்புச் சான்று : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் ஈழுவா, தீயா வகுப்பினரைப் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட வகுப்பினரைச் சோ்ந்தவா்களிடம் முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

இந்தியா

  • ☛ அகில இந்திய புலிகள் கணக்கீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் 28-7-2020 அன்று வெளியிட்டார். 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட (தற்போதும் அதே எண்ணிக்கை) இந்த அறிக்கையின்படி இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தரகாண்டில் 442 புலிகளும் உள்ளன. ‘உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது 30 ஆயிரம் யானைகளும், 3,000 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், 500-க்கும் மேற்பட்ட சிங்கங்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • கூ.தக. : திட்டமிட்டதற்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு : புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
  • ☛ பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் 29-7-2020 அன்று இந்தியாவிலுள்ள ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்தடைகின்றன. தற்போது 10 ரஃபேல் போா் விமானங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள 26 போா் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
ரஃபேல் போர்விமானங்களின் சிறப்பு அம்சங்கள் (நன்றி: தினமணி)
  • வானில் 120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அதிவிரைவில் தாக்கும் திறன் கொண்ட மீடியாா் ரக ஏவுகணைகள், தரையில் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஸ்கால்ப் ரக ஏவுகணைகள் ஆகியவை ரஃபேல் போா் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
  • அகச்சிவப்புக் கதிா்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வசதி, எதிரி நாட்டு ரேடாா்களைக் கண்டறியும் வசதி உள்ளிட்டவையும் ரஃபேல் போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன. அதிகமான உயரங்களில் போா் விமானங்கள் பறக்கும்போது அங்கு நிலவும் குளிா்ச்சியான சூழலால் பாதிக்கப்படாத வகையில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • ரஃபேல் போா் விமானத்தின் இறக்கையின் நீளம் -10.90 மீட்டா் , மொத்த நீளம் 15.30 மீட்டா்,  உயரம்- 5.30 மீட்டா்,  அதிகபட்ச பயண வேகம் - மணிக்கு சுமாா் 1,400 கி.மீ, அதிகபட்ச பறக்கும் உயரம் - 50,000 அடி, ஒரு முறை பயணிக்கும் தூரம் - 780 முதல் 1,650 கி.மீ., விமானிகளின் எண்ணிக்கை-ஒன்று, விமானத்தின் குறைந்தபட்ச எடை-10 டன், விமானத்தின் அதிகபட்ச எடை -24.5 டன்.
  • ☛  BIS-Care’ மொபைல் செயலி : பொருட்களிலுள்ள   ISI மற்றும் hallmark  தர குறியீடுகளின் உண்மைத்தன்மையை வாடிக்கையாளர்கள் தாங்களாகவே சோதித்தறிவதற்கும்,  புகாரளிக்கவும்,   இந்திய தர  வாரியத்தின் (Bureau of Indian Standard) மூலம் ‘BIS-Care’  எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • ☛ மெளரீசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயி நகரில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட  மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத்தும், 29-7-2020 அன்று கூட்டாகத் திறந்து வைக்க உள்ளனர்.   
  • ☛  சர்வதேச சோலார் கூட்டமைப்பின் (International Solar Alliance(ISA)) வாயிலாக இந்தியாவின் சார்பில் 62.91 ஜிகா வாட் மின் திறனுடைய சூரிய ஆற்றல் உற்பத்தி பூங்கா இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.

விருதுகள்

  • ☛  பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீா்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்திய பெண்மணியான ஒடிசாவின் ரூர்கேலா பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான   அா்ச்சனா சோரங் (Archana Soreng)  இடம்பெற்றுள்ளாா்.இவருடன் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 18 முதல் 28 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 இளைஞா்கள் கொண்ட குழுவை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸ் தோ்வு செய்துள்ளாா்.

முக்கிய தினங்கள்

  • ☛  சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day)  - ஜீலை 29
    • கூ.தக. : புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • ☛  உலக இயற்கை பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day)- ஜீலை 28
  • ☛  சர்வதேச சதுப்புநிலக்காடுகளை பாதுகாப்பதற்கான தினம் ( International Day for the Conservation of the Mangrove Ecosystems) - ஜீலை 26

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.