தமிழ்நாடு
- ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலத்தை தலைவராகக் கொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் செயல்பாட்டுக் காலம் 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த நிலையில், புதிய உறுப்பினா்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆணையத்தின் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டி.பிச்சாண்டி, டி.என்.ராமநாதன், வி.சந்திரசேகரன் ஆகியோா் உள்பட ஆறு போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அலுவல் சாரா உறுப்பினா்களாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை இயக்குநரும் இருப்பாா்கள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் ஆகிய பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆணையம் பரிசீலிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஆணையம் செயல்பாட்டில் இருக்கும்.
- தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பாரை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 7-7-2020 அன்று மேலும் ஒரு குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவதால் இந்த இடம் பழங்காலத்தில் ஈமக்காடாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுமக்கள் தாழிகள், இரும்புத் தாதுக்கள், பழைமையான ஓடுகள், கற்காலக் கருவிகள், வளையங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
இந்தியா
- "வேளாண் உட்கட்டமைப்பு நிதியம்” (Agriculture Infrastructure Fund) எனப்படும் நாடு தழுவிய திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 8-7-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த திட்டமானது, மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் சுயசார்பு இந்தியா தொகுப்பின் (AtmaNirbhar Bharat package) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படவுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், விவசாய கடன் சங்கங்கள் (Primary Agricultural Credit Societies (PACS)), சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), விவசாய தயாரிப்பு நிறுவனங்கள் (Farmer Producers Organizations (FPOs)), சுய உதவி குழுக்கள் (Self Help Group (SHG)), விவசாயிகள் (Farmers), பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (Multipurpose Cooperative Societies), வேளாண் தொழில்முனைவோர்,வேளாண் உட்கட்டமைப்பு வழங்குநர்கள் ( Aggregation Infrastructure Providers), மத்திய / மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் அரசு - தனியார் இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் ( Central/State agency or Local Body sponsored Public Private Partnership Project) ஆகியவற்றிற்கு மொத்தம் 1 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
- இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் காலம் 10 ஆண்டுகளுக்கு- 2020-21 நிதியாண்டு முதல் 2029-30 நிதியாண்டு வரையாகும்.
- இந்த திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும், இதில் நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ .10,000 கோடி, அடுத்த மூன்று நிதியாண்டில் ரூ .30,000 கோடி அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
- திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானிய வட்டி விகிதம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3 சதவீதமாக இருக்கும். ஆண்டுக்கு 3 சதவீதம். 3 சதவீத வட்டி விகிதம் ரூ .2 கோடி வரை கடனுக்கு பொருந்தும்.
- இந்தியாவின் முதல் மாநிலமாக, அரசுக்கு சொந்தமான நிலங்களை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் உதவியுடன் கண்காணிக்கும் ”Bhubaneswar Land Use Intelligence System (BLUIS)” எனும் முன்னோடி திட்டத்தை ஒடிஷா மாநில அரசு 8-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
- இ-சஞ்சீவனி இணையதளம் ((eSanjeevani OPD)) பற்றி : கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் வழங்குகிறார்கள். இந்த 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்' கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டமான, மத்திய பிரதேசத்தின் ரீவா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி 10-7-2020 அன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். இந்த ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிா்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
- இந்தியாவிலுள்ள இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்உ தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ( National Skill Development Corporation (NSDC) ) மற்றும் மைக்ரோசாஃட் இந்தியா நிறுவனம் ( Microsoft India Private Limited ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூ.தக. :
- 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (National Skill Development Corporation (NSDC)) தலைமையிடம் புது தில்லியிலுள்ளது. இதன் தலைவராக மணிஸ் குமார் உள்ளார்.
- Microsoft India Private Limited இன் தலைமையிடம் தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக ஆனந்த் மகேஸ்வரி உள்ளார்.
- இந்தியாவின் மிகப்பெரிய “வண்ணத்துப் பூச்சி” எனும் பெயரை “கோல்டன் பேர்டுவிங்” (Golden Birdwing (Troides aeacus)) எனும் பெயருடைய இமாலயப் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி வகை பெற்றுள்ளது. முன்னதாக (88 ஆண்டுகளாக) இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி வகையினம் என அறியப்பட்ட ‘சதர்ன் பேர்டுவிங்’ (Southern Birdwing (Troides minos)) வகையினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- ”Yotta NM1 Data Center” என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தரவு மையம் (Data Center) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 7-7-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தரவு மையமானது மும்பையிலுள்ள பன்வல் தரவு மைய பூங்காவில் (Panvel data centre park) ஹிராநந்தனி குழுமத்தின் (Hiranandani Group ) மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
- "பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின்" (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) மூலம் நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவையில் 8-7-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும்.
- "கோவாக்சின்" எனப்படும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் - மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் .
- கூ.தக : ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் 8-7-2020 அன்று தொடங்கியது.
- ‘சேஷ்நாக்’ என்ற பெயரில்,இந்திய ரயில்வேத் துறை முதல் முறையாக நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை நாகபுரியில் இருந்து கோா்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாகபுரி கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச்செல்ல பயன்படும் சரக்குப் பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் உருவாக்கப்பட்டது.நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 காா்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
வெளிநாட்டு உறவுகள்
- இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தவுள்ளனர்.
சர்வதேச நிகழ்வுகள்
- ’ஆபரேஷன் நரி வேட்டை’ என்ற பெயரிலான இரகசிய உளவு நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து அவர்களை கட்டாயமாக நாடு திரும்புவதற்கு வலியுறுத்துவதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இதன் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தட்டம்மை நோயை (measles and rubella) முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் தென் கிழக்கு ஆசிய நாடுகளாக மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகள் உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இலக்கு 2023 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை முழுவதுமாக மூடுவதற்கு முடிவெடுத்துள்ள முதல் வளர்ந்த நாடு எனும் பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. ஜெர்மனி அரசு வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை முற்றிலுமாக ஒழிக்க முடிவெடுத்துள்ளது.
- கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இருமல், தும்மல் ஆகியவற்றால் வெளிப்படும் நீா்த்துளிமங்கள் தரையில் படிந்து, அதனைத் தொடுவதால் மட்டுமே கரோனோ பரவி வருவதாக இதுவரை கூறி வந்த அந்த அமைப்பு, தற்போது முதல் முதலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
- தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் ( National Company Law Appellate Tribunal(NCLAT)) பொறுப்பு தலைவராக செயல்பட்டு வரும் நீதிபதி பி.எல்.பட்டின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் & தொழில்நுட்பம்
- 'அமேசானியா-1’ (‘Amazonia-1’) என்ற பெயரிலான பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (Indian Space Research Organisation (ISRO)) PSLV ராக்கெட்டின் மூலம் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஆகஸ்டு 2020 ல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
- ”APSTAR-6D” என்ற பெயரிலான வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக் கோளை Long March-3B ராக்கெட்டின் மூலம் சீனா 9-7-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
விளையாட்டுகள்
- கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்பட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 117 நாள் இடைவெளிக்கு பின் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தெற்கு இங்கிலாந்தின் சதாம்ப்டன் (Southampton) நகரிலுள்ள ரோஸ் பவுல் ( Rose Bowl ) எனுமிடத்தில் 8-7-2020 அன்று தொடங்கின.
- 25 வருடங்களாக இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பகதூர் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- ‘Mahaveer:The Soldier Who Never Died’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் - A.K. ஸ்ரீகுமார் (A.K. Srikumar), ரூபா ஸ்ரீகுமார் (Rupa Srikumar)
Thanks. its very useful to me
பதிலளிநீக்குWelcome ! thank u for ur feedback!
நீக்குVery useful for learners
பதிலளிநீக்கு