தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (‘Paul Harris Fellow’) என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பித்துள்ளது.
இந்தியா
இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat’) சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தினால் 11-07-2020 அன்று நடத்தப்பட்டது. இதனை சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசந்திர மேனன் தொடங்கி வைத்தார்.
கேமிரா மூலம் நடத்தப்படும், உலகின் மிகப் பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாக, அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018 கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி, உலகளவில் 75% புலிகள் இந்தியாவி்ல்தான் உள்ளன. புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்கும் தீர்மானத்தையும், இந்தியா ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது.
வெளிநாட்டு உறவுகள்
2019 - 2020 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment (FDI)) செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 2,3,4 மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே ஜெர்மனி , பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகளும் உள்ளன.
சர்வதேச நிகழ்வுகள்
கோவிட்-19 நோய்ப் பரவலினால் உலகளவில் ஏற்பட்டுள்ள தயார் நிலை மற்றும் எதிர்கொள்ளல் குறித்து ஆராய்வதற்காக ஹெலன் எலிசபத் கிளார்க் (Helen Elizabeth Clark) (முன்னாள் நியூசிலாந்து பிரதமர்) மற்றும் எல்லன் ஜான்சன் சிர்லீஃப் (Ellen Johnson Sirleaf) (முன்னாள் லிபேரியா அதிபர்) தலைமையிலான குழுவை ( (Independent Panel for Pandemic Preparedness and Response (IPPR)) ) உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) 9-7-2020 அன்று அமைத்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .
பொருளாதாரம்
”பரஸ்பர நிதி” (மியூச்சுவல் பண்ட் / mutual fund) நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான 20 நபர் குழுவை உஷா தோரத் ( Usha Thorat ) தலைமையில் செபி ( Securities and Exchange Board of India (SEBI) ) அமைப்பு அமைத்துள்ளது.
முக்கிய தினங்கள்
தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் (National Fish Farmers Day) - ஜீலை 10
கூ.தக . : 2019 ஆம் ஆண்டின் ஐ.நா. வின் வேளாண் மற்றும் உணவு அமைப்பின் GLOBEFISH அறிக்கையின் படி, உலகளவில் மீன்வளர்ப்பு சார் தயாரிப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது.
உலக மக்கள் தொகை தினம் (World Population Day) - ஜீலை 11 | மையக்கருத்து 2020 - வீட்டில் அமைதி : கோவிட்-19 காலக்கட்டத்தில் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். (Peace in the Home: Safeguarding the Health and Rights of Women and Girls- Even During COVID-19)
விளையாட்டுகள்
ஹாக்கி இந்தியா (Hockey India(HI)) அமைப்பின் தலைவராக மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திர நிங்கோம்பாம் (Gyanendro Ningombam) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் 2022 வரையில் இந்த பதவியை வகிப்பார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
‘His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography’ என்ற பெயரில் 14 வது தலாய் லாமாவின் வாழ்க்கை வரலாற்றை டென்சிங் கெய்செ டெதோங் (Tenzin Geyche Tethong) என்பவர் எழுதியுள்ளார்.
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
hi, due to Covid-19 situation, there is no enough fact for daily current affairs. But we do update all current affairs frequently at our Current Affairs Facebook Group https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/
Very informative
பதிலளிநீக்குThank u sir!
நீக்குHi. pls upload current affairs on daily basis
நீக்குhi, due to Covid-19 situation, there is no enough fact for daily current affairs. But we do update all current affairs frequently at our Current Affairs Facebook Group https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/
நீக்குVery useful
பதிலளிநீக்குDaily current affairs pdf form la available sir..?
பதிலளிநீக்குDaily current affairs pdf is available only at our Facebook Group https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/ . Please download from there
நீக்கு